தனியுரிமைக் கொள்கை
16 ஏப்ரல் 2024 அன்று புதுப்பிக்கப்பட்டது
இந்த பாலிசியானது 1956 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட PhonePe பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குப் பொருந்தும். அதன் முகவரி அலுவலகம்-2, தளம் 5, விங் ஏ, பிளாக் ஏ, சலர்பூரியா சாப்ட்ஸோன், பெல்லந்தூர், வர்தூர் ஹோப்லி, வெளிவட்டச் சாலை, பெங்களூர் தெற்கு, பெங்களூர், கர்நாடகா – 560103, இந்தியா என பதிவுசெய்யப்பட்டது. PhonePe பிரைவேட் லிமிடெட், PhonePe இன்சூரன்ஸ் ப்ரோக்கிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், PhonePe வெல்த் ப்ரோக்கிங் பிரைவேட் லிமிடெட், PhonePe லெண்டிங் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் (முன்னர் ‘PhonePe கிரெடிட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்’ மற்றும் “எக்ஸ்ப்ளோரியம் இன்னோவேடிவ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்” என அறியப்பட்டது), PhonePe டெக்னாலஜி சர்வீசஸ் (“PhonePe AA”), Pincode ஷாப்பிங் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (முன்னர் PhonePe ஷாப்பிங் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் PhonePe பேமெண்ட் டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்), வெல்த் டெக்னாலஜி & சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், PhonePe, அதன் துணை நிறுவனங்கள்/இணை நிறுவனங்கள் உட்பட ஆனால் அவை மட்டும் அல்ல (சூழலுக்குத் தேவைப்படக்கூடிய வகையில் “PhonePe, நாம், எங்கள், நமது” என ஒட்டுமொத்தமாக குறிப்பிடப்படுகிறது).
PhonePe இணையதளம், PhonePe அப்ளிகேஷன், m-site, chatbot, அறிவிப்புகள் அல்லது PhonePe (இனிமேல் “பிளாட்ஃபார்ம்” எனக் குறிப்பிடப்படும்) மூலம் உங்களுக்குச் சேவைகளை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் வேறு எந்த ஊடகத்தின் மூலமாகவும் PhonePe உங்கள் தனிப்பட்ட தகவலை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பதை இந்த பாலிசி விவரிக்கிறது.PhonePe இயங்குதளத்தைப் பார்வையிடுதல், பதிவிறக்குதல், பயன்படுத்துதல் மற்றும்/அல்லது, உங்கள் தகவலை வழங்குவதன் மூலம் அல்லது எங்கள் தயாரிப்பு/சேவைகளைப் பெறுவதன் மூலம், இந்தத் தனியுரிமைக் கொள்கை (“கொள்கை”) மற்றும் பொருந்தக்கூடிய சேவை/தயாரிப்பு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதை நீங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நாங்கள் மதிக்கிறோம் மற்றும் உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம் மற்றும் உங்களின் தனிப்பட்ட தகவல் மற்றும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கான பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தை பின்பற்றுகிறோம்.
தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000-இன் கீழ் இந்திய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் உட்பட தகவல் தொழில்நுட்ப (ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள் மற்றும் முக்கியமான தனிப்பட்ட தரவு அல்லது தகவல்) விதிகள், 2011 மற்றும் ஆதார் சட்டம், 2016 மற்றும் ஆதார் விதிமுறைகள் உட்பட அதன் திருத்தங்களுக்கு இணங்க இந்த தனியுரிமைக்கொள்கை வெளியிடப்படுகிறது. இதற்கு சேகரிப்பு, பயன்பாடு, சேமிப்பு, பரிமாற்றம், தனிப்பட்ட தகவலை வெளிப்படுத்துதல் ஆகியவற்றுக்கான தனியுரிமைக் கொள்கையை வெளியிட வேண்டும். தனிப்பட்ட தகவல் என்பது பொதுவெளியில் கிடைக்கக்கூடிய தகவல்கள் அல்லாத தனிப்பட்ட தகவல்களையும் (ஒரு குறிப்பிட்ட நபரைக் குறிக்கும் அனைத்துத் தகவல்களும்), மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த தனிப்பட்ட தகவல்களையும் (அதன் முக்கியத்துவத்தைக் கருதி அதிகபட்ச தகவல் பாதுகாப்பு தேவைப்படும் அனைத்துத் தனிப்பட்ட தகவல்களும்) (இவை இரண்டும் இனி ‘’தனிப்பட்ட தகவல்கள்” என்றே குறிப்பிடப்படுகிறது) ஒன்று திரட்ட, பயன்படுத்த, சேமிக்க, வெளியிட மேற்கூறிய விதிகளின்படி தனியுரிமைக் கொள்கையை வெளியிட வேண்டியுள்ளது. தயவுசெய்து கவனிக்கவும், எங்கள் தயாரிப்புகள்/சேவைகள் இந்திய வாடிக்கையாளர்களுக்காக இந்தியாவில் வழங்கப்படுகின்றன, மேலும் உங்கள் தனிப்பட்ட தகவல் செயலாக்கம் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்கும். எங்களுடைய இந்தத் தனியுரிமைக்கொள்கையில் உங்களுக்கு ஒப்புதல் இல்லை என்றால், எங்களுடைய தளத்தை பயன்படுத்தவோ அல்லது அணுகவோ வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்களைச் சேகரித்தல்
நீங்கள் எங்கள் சேவைகளையோ தளத்தையோ பயன்படுத்தும்போது அல்லது எங்களுடன் உரையாடும் போது உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் சேகரிக்கலாம். நீங்கள் விரும்பும் சேவைகளை அளிப்பதற்கும் PhonePe தளத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்காகவும் உங்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கிறோம்.
பொருந்தக்கூடிய வகையில், சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும் முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் அடங்கும், ஆனால் அவை மட்டும் அல்ல:
- பெயர், வயது, பாலினம், புகைப்படம், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, உங்களது தொடர்புகள், நாமினி விவரங்கள்
- KYC தொடர்பான தகவல்களான PAN, வருமான விவரங்கள், உங்கள் வணிகம் தொடர்பான தகவல்கள், வீடியோக்கள் அல்லது தொடர்புடைய ஒழுங்குமுறை அதிகாரிகளின் விதிகளுக்குட்பட்ட ஆன்லைன்/ஆஃப்லைன் சரிபார்ப்பு ஆவணங்கள்.
- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துடன் (UIDAI) e-KYC அங்கீகாரத்திற்காக ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி உள்ளிட்ட ஆதார் தகவல்கள். ஆதார் தகவலைச் சமர்ப்பிப்பது கட்டாயமில்லை என்பதையும், அடையாளத் தகவலைச் சமர்ப்பிப்பதற்கு மாற்று வழிகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளவும் (எ.கா., வாக்காளர் ஐடி, ஓட்டுநர் உரிமம்).
- உங்களது வங்கி, NSDL அல்லது PhonePe அனுப்பிய OTP
- பேலன்ஸ், புரோக்கர் லெட்ஜர் பேலன்ஸ் அல்லது மார்ஜின், பரிவர்த்தனை வரலாறு மற்றும் மதிப்பு, வங்கிக் கணக்கு விவரங்கள், வாலட் பேலன்ஸ், முதலீடு பற்றிய விவரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள், வருமான வரம்பு, செலவு வரம்பு, முதலீட்டு இலக்குகள், சேவை அல்லது பரிவர்த்தனை சார்ந்த தொடர்புகள், ஆர்டர் விவரங்கள், சேவை நிறைவேற்ற விவரங்கள், PhonePe அல்லது வேறு ஏதேனும் சேவைகளில் பரிவர்தனைகளைச் சிரமமின்றி செயல்படுத்த உங்கள் கார்டில் உள்ள சில விவரங்கள்
- சாதனத்தின் ஐடென்டிஃபையர், இணைய பேண்ட்வித், மொபைல் மாடல், பிரவுசர் ப்ளக்-இன்ஸ், மற்றும் குக்கீக்கள் அல்லது பிரவுசர்/PhonePe செயலிகள் ப்ளக்-இன்ஸ், உபயோகித்த நேரம், IP முகவரி மற்றும் இடம் ஆகியவற்றைக் கண்டறியும் இதேபோன்ற தொழில்நுட்பங்கள்
- உங்களையும் உங்கள் சாதனத்தையும் கட்டணச் சேவைகளுக்குப் பதிவு செய்தல் அல்லது முதலீட்டு சேவைகள், உள்நுழைவு மற்றும் பேமண்ட்களுகான OTP, உங்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல், பில் கட்டணம் மற்றும் ரீசார்ஜ் நினைவூட்டல்கள் மற்றும் உங்கள் வெளிப்படையான ஒப்புதலுடன் வேறு ஏதேனும் சட்டப்பூர்வமான பயன்பாட்டு நோக்கங்களுக்காக உங்கள் குறுந்தகவல் சேவை (SMS) உங்கள் சாதனத்தில் சேமிக்கப்படுகிறது.
- உங்கள் உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான தகவல்கள், உங்கள் உடல் செயல்பாடு உட்பட, நீங்கள் சுகாதார கண்காணிப்பு சேவைகளைத் தேர்ந்தெடுக்கும்போது
PhonePe தளத்தை நீங்கள் பயன்படுத்தும்போது கீழ்க்கண்ட பல நிலைகளில் தகவல்கள் சேகரிக்கப்படலாம்.
- PhonePe தளத்தைப் பார்வையிடும் போது
- “பயனர்” அல்லது “வணிகர்” அல்லது PhonePe தளத்தில் உள்ள விதிமுறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்ட எந்த ஒரு உறவிலும் PhonePe தளத்தில் பதிவு செய்யும்போது
- PhonePe தளத்தில் பரிவர்த்தனை செய்யும்போது அல்லது பரிவர்த்தனை செய்ய முயற்சிக்கும்போது
- இணைப்புகள், மின்னஞ்சல், சேட் உரையாடல்கள், கருத்துகள், PhonePe தளம் அனுப்பிய/வைத்துள்ள அறிவிப்புகள் ஆகியவற்றை அணுகும்போது மற்றும் எங்களின் சர்வேக்களில் பங்குபெற ஒப்புக்கொள்ளும்போது
- ஏதேனும் PhonePe நிறுவனங்கள்/துணை நிறுவனங்கள் ஆகியவற்றைக் கையாளும்போது
- PhonePe உடன் வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிக்கும்போது
நாங்கள் மற்றும் எங்கள் சேவை வழங்குநர்கள் அல்லது வணிகக் கூட்டாளர்கள் உங்கள் தனிப்பட்ட தகவலை மூன்றாம் தரப்பினரிடமிருந்து சேகரிக்கலாம் அல்லது பொதுவில் பொருந்தக்கூடிய கிடைக்கும் தகவல்கள் உட்பட, ஆனால் இவை மட்டும் அல்ல:
- உங்களுக்கு PhonePe சேவைகளை வழங்க, சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைத் தடுக்க அல்லது நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் திவால்நிலைக்கு இணங்க, கிரெடிட் ரெஃபரன்ஸ் மற்றும் மோசடி தடுப்பு முகவர்களிடமிருந்து உங்கள் முதலீட்டு பரிவர்த்தனை கோரிக்கையை சரிபார்க்க மற்றும் உறுதிபடுத்தும் நோக்கத்திற்காக நிதி வரலாறு மற்றும் பிற தகவல்கள்.
- வாகனம் தொடர்பான தகவல்
- நீங்கள் PhonePe இல் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்தால், உங்களின் பயோடேட்டா, உங்களின் முந்தைய வேலைவாய்ப்பு மற்றும் கல்வித் தகுதி ஆகியவை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் தரவுத்தளத்தின் மூலம் அல்லது சட்டப்பூர்வமாக பின்னணி சரிபார்ப்பு மற்றும் சரிபார்ப்புக்காக பெறப்படும்
- வெற்றிகரமான e-KYC குறித்து UIDAI இலிருந்து பெறப்பட்ட பின்னூட்டத்தின்படி ஆதார் எண், முகவரி, பாலினம் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட உங்கள் இருப்பிட மற்றும் புகைப்படத் தகவல்
தனிப்பட்ட தகவல்களின் நோக்கமும் பயன்பாடும்
PhonePe உங்களின் தனிப்பட்ட தகவல்களை கீழ்க்கண்ட நோக்கங்களுக்காக செயல்படுத்தலாம்.
- உங்களின் கணக்கைத் தொடங்கவும் அடையாளத்தை சரிபார்க்கவும் வசதிகளை அணுகவும்
- நாங்கள், வணிகர்கள், பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர்கள், ஆராய்ச்சி ஆய்வாளர்கள், நிறுவனங்கள், துணை நிறுவனங்கள், விற்பனையாளர்கள், லாஜிஸ்டிக் பார்ட்னர்கள் அல்லது வணிகக் கூட்டாளர்களால் வழங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை உங்களுக்கு வழங்குகிறது
- உங்கள் சேவை கோரிக்கையை பூர்த்தி செய்ய
- ஆதார் சட்டம் மற்றும் அதன் ஒழுங்குமுறைகளின் கீழ் UIDAI உட்பட, பல்வேறு ஒழுங்குமுறை அமைப்புகளின் தேவையும் கட்டாய முன்நிபந்தனையுமான KYC இணக்க செயல்முறையை நடத்துவதற்கு
- தேவைப்படும்போது மற்ற இடைத்தரகர்கள், ஒழுங்குமுறை அமைப்புகள்(REs) அல்லது AMC-கள் அல்லது நிதி நிறுவனங்கள் அல்லது ஏதேனும் சேவை வழங்குநர்களிடம் உங்களது KYC தகவல்களை சரிபார்க்க, செயல்படுத்த மற்றும்/அல்லது பகிர
- உங்களுக்குப் பதிலாகவும் உங்கள் அறிவுறுத்தல்களின்படியும் பேமண்ட்டுகளைச் செயல்படுத்த; கேள்விகள், பரிவர்த்தனைகள், மற்றும்/அல்லது வேறு எதேனும் ஒழுங்குமுறை தேவைகள் போன்றவற்றிற்காக உங்களுடன் தொடர்புகொள்ள
- வெல்த் பேஸ்கெட் க்யூரேட்டர்களின் சேவைகளை கிடைக்கச் செய்வதற்கும், உங்களால் வெல்த் பேஸ்கெட் வாங்குதல் மற்றும் விற்பது தொடர்பான பரிவர்த்தனைகளுக்கான தகவல்தொடர்புகளை செயல்படுத்தவும்
- ஒரு பரிவர்த்தனைக் கோரிக்கையை அங்கீகரிக்க; முறையான முதலீட்டுத் திட்டத்தின் மீதான அறிவுறுத்தலை சரிபார்க்க; சேவைகளின் மூலம் செய்யப்பட்ட பேமண்ட்டை உறுதிப்படுத்த
- பல்வேறு செயல்பாடுகளில் உங்கள் பயனர் அனுபவங்களை மேம்படுத்துவது/ விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது/ பொருள்/சேவைகளைப் பெறுவதற்கு ஒருங்கிணைந்தவாறு பயனர் நடவடிக்கைகளை ஆய்வு செய்வது
- அவ்வப்போது பொருட்கள்/சேவைகளைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும்; பாதுகாப்பாகவும் எளிமையாகவும் உங்கள் அனுபவத்தை மாற்ற சேவைகளைக் கஸ்டமைஸ் செய்வது, மற்றும் தணிக்கை செய்வதற்கும்
- PhonePe தளத்திலோ மூன்றாம் தரப்பு இணைப்புகளிலோ நீங்கள் கோரிய/பெற்ற பொருட்களுக்காகவும் சேவைகளுக்காகவும் உங்களைத் தொடர்பு கொள்வதை அனுமதிக்க
- சட்டப்பூர்வமாகத் தேவைப்படும் கிரெடிட் சோதனைகளை மேற்கொள்ள, திரையிடல்கள் அல்லது சரிபார்ப்பு சோதனைகளைக் கையாள்வதற்கு மற்றும் தவறு, மோசடி, பணமோசடி மற்றும் பிற குற்றச் செயல்களைக் கண்டறிந்து எங்களைப் பாதுகாக்க; எங்களது விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் அமல்படுத்த
- உங்களிடம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆஃபர்கள், பொருட்கள், சேவைகள், புதுப்பித்தல்களைப் பற்றித் தெரியப்படுத்த; விளம்பரப்படுத்துதல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த மற்றும் உங்களுக்கு ஏற்றவாறு பொருட்களையும் ஆஃபர்களையும் வழங்க
- பிரச்சனைகளைத் தீர்க்க; சிக்கல்களைத் தீர்க்க; தொழில்நுட்ப உதவி மற்றும் பக்-களை சரிசெய்ய; பாதுகாப்பான சேவையை வழங்க
- பாதுகாப்பு மீறல்களையும் தாக்குதல்களையும் கண்டறிய; சட்டவிரோதமான அல்லது சந்தேகத்திற்கு இடமான மோசடி அல்லது பணமோசடி செயல்களை விசாரிக்க, தடுக்க, நடவடிக்கை எடுக்க மற்றும் PhonePe அல்லது இந்தியாவில் அல்லது இந்திய அதிகார எல்லைக்கு வெளியே உள்ள அரசு நிறுவனங்களால் சட்ட தேவைகளுக்காக நடத்தப்படும் உள் அல்லது வெளிப்புற தணிக்கைகளின் ஒரு பகுதியான தடயவியல் தணிக்கை
- சட்டரீதியானத் தேவைகளைச் சந்திக்க
மற்ற முறையான வணிகக் காரணங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் செயல்படுத்தும்போது, பெரிய அளவில் உங்கள் தனியுரிமைக்கு இடையூறு வராதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதியளிக்கிறோம்.
கணக்கு திரட்டி சேவைகளை உங்களுக்கு வழங்கும்போது, எங்கள் சேவைகளின் கீழ் நீங்கள் அனுப்ப விரும்பும் எந்தவொரு நிதித் தகவலையும் நாங்கள் சேமிக்கவோ, பயன்படுத்தவோ, செயலாக்கவோ அல்லது அணுகவோ மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளவும்.
குக்கீக்கள் அல்லது அதைப்போன்ற தொழில்நுட்பங்கள்
டேட்டா சேகரிக்கும் சாதனங்களான “குக்கீக்கள்” அல்லது அதைப்போன்ற தொழில்நுட்பங்களைத் தளத்தின் சில பக்கங்களில் பயன்படுத்தி வலைப்பக்கத்தின் போக்கை மதிப்பிடவும், விளம்பரங்களின் தாக்கத்தை மதிப்பிடவும், நம்பிக்கையையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தவும் முயற்சிக்கிறோம். “குக்கீக்கள்” என்பவை நாங்கள் சேவையளிக்க உதவும், உங்கள் சாதனத்தின் ஹார்டு டிரைவ்/சேமிப்பில் பொருத்தப்பட்டுள்ள சிறிய ஃபைல்கள் ஆகும். குக்கீக்களில் உங்களின் எந்தவொரு தனிப்பட்ட தகவல்களும் இருக்காது. “குக்கீ” அல்லது அதைப் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால் மட்டுமே உங்களுக்கு சில அம்சங்களை நாங்கள் வழங்குவோம். ஒரு அமர்வில் அதிக முறை நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடாமல் இருக்க நாங்கள் குக்கீக்களைப் பயன்படுத்துகிறோம். உங்கள் விருப்பங்களை அறிந்து அதற்கேற்றவாறு தகவல்களை வழங்க குக்கீக்கள் அல்லது அதைப்போன்ற தொழில்நுட்பங்கள் எங்களுக்கு உதவுகின்றன. இதில் பல குக்கீக்கள் “அமர்வு குக்கீக்கள்”, உங்களின் அமர்வு முடிந்த பின் தானாகவே அவை ஹார்டு டிரைவ்/சேமிப்பில் இருந்து அழிந்து விடும். உங்கள் உலாவி/சாதனம் அனுமதித்தால் நீங்கள் தாராளாமாக குக்கீக்களையும் அல்லது அதைப்போன்ற தொழில்நுட்பங்களையும் மறுக்கவோ/அழிக்கவோ செய்யலாம். அப்படிச் செய்யும் போது உங்கள் கடவுச்சொல்லை அடிக்கடி உள்ளிட வேண்டியிருக்கும். மேலும் தளத்தில் சில அம்சங்களைப் பயன்படுத்த முடியாமல் போகலாம். கூடுதலாக, மூன்றாம் தரப்பினரால் பொருத்தப்பட்ட குக்கீக்களை தளத்தின் சில பக்கங்களில் நீங்கள் எதிர்கொள்ளலாம். மூன்றாம் தரப்பினரின் குக்கீக்களை நாங்கள் கட்டுப்படுத்துவதில்லை.
தகவல் பகிர்வும் அறிவிப்புகளும்
உங்கள் தனிப்பட்ட தகவல், பொருந்தக்கூடிய சட்டங்களின்படி, தக்க முன்ஜாக்கிரதைகளுடன் பெறுநர் நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கைகளையும் நடைமுறைகளையும் ஆராய்ந்தபின் இந்தக் கொள்கையில் குறிப்பிட்டுள்ள நோக்கங்களுக்காக வெளியே பகிரப்படுகிறது. PhonePe பின்பற்றும் தனியுரிமை நடைமுறைகளைப் போலவே அல்லது அதையும்விட கடுமையான நடைமுறைகளை ஒப்பந்தப்படி கட்டாயமாக்கிய பிறகே பெறுநர்களுடன் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படுகின்றன.
வணிகக் கூட்டாளர்கள், சேவை வழங்குநர்கள், விற்பனையாளர்கள், லாஜிஸ்டிக் கூட்டாளிகள், வணிகர்கள், வெல்த்பேஸ்கெட் க்யூரேட்டர்கள், உப நிறுவனங்கள், சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளவர்கள், ஒழுங்குமுறை அமைப்புகள், அரசு அதிகாரிகள், நிதி நிறுவனங்கள், மார்க்கெட்டிங் அல்லது பாதுகாப்பு, விசாரணை போன்ற உள்நிறுவனக் குழுக்கள் எனப் பல வகையான தரப்பினருடன் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படும்.
பின்வரும் நோக்கங்களுக்காக முறையான தேவை உள்ளவர்களுடன் மட்டும் பொருந்தக்கூடிய சூழல்களில் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்படும்,ஆனால் அவை மட்டும் அல்ல:
- உங்களுக்குக் கிடைக்கும் தயாரிப்புகள்/சேவைகளை வழங்குவதற்கும், உங்களுக்கும் சேவை வழங்குநர், பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர்கள், ஆராய்ச்சி ஆய்வாளர்கள், விற்பனையாளர்கள், லாஜிஸ்டிக் கூட்டாளர்களுக்கும் இடையே சேவைகளை எளிதாக்குவதற்கும்
- சென்ட்ரல் ஐடென்ட்டிட்டிஸ் டேட்டா ரெபாசிட்டரி (CIDR) மற்றும் நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) ஆகியவற்றில் ஆதார் தகவலை சமர்ப்பிப்பதன் மூலம் ஆதார் அங்கீகார செயல்முறைக்கு
- எங்கள் சேவை/ தளம் மூலம் ஒழுங்குபடுத்தப்பட்ட பொருள்/சேவையை நீங்கள் வாங்கும்போது பொருந்தக்கூடிய சட்டங்களுடன் இணங்குதல் மற்றும் வெவ்வேறு ஒழுங்குமுறை அமைப்புகள் குறிப்பிடும் Know Your Customer (KYC) தேவைகளுக்கு இணங்குதல்
- ஒரு வணிகர் தனது தளத்தில் நீங்கள் தொடங்கிய பேமண்ட்டை நிறைவுசெய்ய உங்கள் அனுமதியுடன் உங்கள் தனிப்பட்ட தகவல்களை எங்களிடம் கோருதல்
- எங்கள் தளத்தின் மூலம் உங்களுக்குச் சேவை அளிக்கும் நிதி நிறுவனத்திடம் நீங்கள் வாங்கிய நிதித் தயாரிப்புக்கான சந்தா பேமண்ட்களைச் செயல்படுத்துதல்
- கடன் தொடர்பான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உங்களுக்கு வழங்க நாங்கள் கூட்டாளியாக உள்ள அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களுடன் தகவல்களைப் பகிர்வதன் மூலம் உங்கள் கடன் பயணத்தை எளிதாக்க முயற்சி செய்கிறோம். உங்கள் KYC செயல்முறையை செயல்படுத்துதல், தகுதிச் சரிபார்ப்புகள், சேகரிப்புச் சேவைகள் போன்ற எங்கள் கடன் வழங்குபவர்களுக்குத் தேவைப்படும் பல்வேறு செயல்பாடுகள் உட்பட, எங்கள் வணிகத்தை நடத்துவதில் எங்களுக்கு உதவுவதற்காக எங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் மூன்றாம் தரப்பினருடன் உங்கள் தகவலைப் பகிரலாம்.
- பொருந்தக்கூடிய சட்டங்கள்/ ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப ஒரு நிதி நிறுவனத்துக்கு மோசடிகளை விசாரிக்கவோ, குறைக்கவோ, தடுக்கவோ, அல்லது ரிஸ்க்கை நிர்வகிக்கவோ ஃபண்டுகளைத் திரும்பப் பெறவோ தேவைப்படுதல்
- தகவல்தொடர்பு, மார்க்கெட்டிங், தகவல் சேமிப்பு, பகிர்வு, பாதுகாப்பு, பகுப்பாய்வு, மோசடி கண்டறிதல், ரிஸ்க் மதிப்பீடு மற்றும் ஆய்வு போன்றவற்றுக்குத் தொடர்புடைய சேவைகளுக்காக
- எங்கள் விதிமுறைகளின்படியோ தனியுரிமைக் கொள்கையின்படியோ நடந்து கொள்ள வேண்டிய சூழல்; ஒரு மூன்றாம் தரப்பின் உரிமைகளை ஒரு விளம்பரம், இடுகை அல்லது பிற உள்ளடக்கம் மீறுவதாக எழும் புகார்களுக்குப் பதிலளித்தல்; அல்லது எங்கள் பயனர்கள் அல்லது பொதுமக்களின் உரிமைகள், உடைமைகள், தனிமனித நலன் போன்றவற்றைப் பாதுகாத்தல்
- சட்டப்படி தேவைப்படுதல் அல்லது நல்ல நம்பிக்கை அடிப்படையில் ஏதேனும் சம்மன், நீதிமன்ற உத்தரவு, அல்லது பிற சட்டச் செயல்பாடுகளுக்குத் தகவல்களைப் பகிர்வது தேவைப்படும் என்று நாங்கள் நம்பும் சூழல்
- அரசாங்க முன்முயற்சிகள் மற்றும் நன்மைகளுக்காக அரசாங்க அதிகாரிகளால் கோரப்பட்டால்
- குறைகளைத் தீர்ப்பதற்கும், சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கும்
- PhonePe நிறுவனத்திற்குள் இருக்கும் விசாரணைக் குழுவுடன் அல்லது இந்தியாவிற்கு உள்ளேயோ வெளியிலோ விசாரணை நோக்கங்களுக்காக PhonePe நியமிக்கும் ஏஜென்சிகளுடன்
- எங்கள் நிறுவனத்தை (அல்லது அதன் உடைமைகளை) இன்னொரு வணிக நிறுவனத்துடன் இணைக்க நினைப்பது, அந்நிறுவனத்துக்கு விற்க நினைப்பது, அல்லது நிறுவனக் கட்டமைப்பை மாற்றியமைத்தல், ஒன்றுசேர்த்தல், வேறு நிறுவனத்துடன் சேர்த்துக் கட்டமைத்தல் போன்ற சூழல்கள்
இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களின்படி மூன்றாம் தரப்பினருடன் தகவல் பகிரப்பட்டாலும், உங்கள் தனிப்பட்ட தகவலைச் செயலாக்கம் அவர்களின் கொள்கைகளால் நிர்வகிக்கப்படுகிறது. PhonePe பொருந்தக்கூடிய இடங்களில் இந்த மூன்றாம் தரப்பினர் மீது கடுமையான அல்லது குறைவான கடுமையான தனியுரிமைப் பாதுகாப்புக் கடமைகள் வழங்கப்படுவதை உறுதிசெய்கிறது. இருப்பினும், PhonePe இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களின்படி அல்லது பொருந்தக்கூடிய சட்டங்களின்படி சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள், ஒழுங்குமுறை அமைப்புகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்ற மூன்றாம் தரப்பினருடன் தனிப்பட்ட தகவலைப் பகிரலாம். இந்த மூன்றாம் தரப்பினர் அல்லது அவர்களின் கொள்கைகளால் உங்கள் தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்துவதற்கான எந்தவொரு பொறுப்பையும் நாங்கள் ஏற்க மாட்டோம்.
சேமிப்பு மற்றும் தக்கவைத்தல்
பொருந்தும் அளவிற்கு, சட்டத்திற்கு உட்பட்டு, இந்தியாவிற்குள் தனிப்பட்ட தகவல்களை சேமித்து, சேகரிக்கப்பட்ட நோக்கத்திற்கான கால அளவுக்கு மட்டுமே தக்க வைத்துக்கொள்கிறோம். இருப்பினும், பின்வரும் காலங்களில் மோசடியையும் துஷ்பிரயோகத்தையும் தடுக்கவும் அல்லது சட்டரீதியான/ஒழுங்குமுறை வழக்கு நிலுவையில் இருந்தால் அல்லது சட்டரீதியான மற்றும்/அல்லது ஒழுங்குமுறை அறிவுறுத்தல்கள் பெற்றிருந்தால் அல்லது ஏதேனும் முறையான நோக்கங்களுக்காக உங்களுக்குத் தொடர்புடைய தகவல்களை நாங்கள் தக்கவைத்துக் கொள்ளலாம். தனிப்பட்ட தகவல்கள் அவற்றின் தக்கவைப்புக் காலத்தை அடைந்து விட்டால், பொருந்தக்கூடிய சட்டங்களின்படி அவை அழிக்கப்படும்.
ஏற்றுக்கொள்ளக்கூடிய பாதுகாப்பு நடைமுறைகள்
PhonePe பயனரின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் முக்கியமான தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க தொழில்நுட்ப ரீதியிலான மற்றும் சேமிக்கப்படும் இடங்கள் ரீதியிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, உங்கள் ஆதார் தகவலைப் பாதுகாப்பதற்காக, ஆதார் விதிமுறைகளின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள மற்றும் தேவைப்படும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். எங்களுடைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறதோ, அதே அளவுக்கு எந்த பாதுகாப்பு அமைப்பும் ஊடுருவ முடியாது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதுமட்டுமல்லாமல், பயனர் தகவல்களைப் பாதுகாக்க எங்கள் நெட்வொர்க்கில் கடத்தப்படும் தரவு மற்றும் சேவையகங்களில் சேமிக்கப்பட்டுள்ள தரவு ஆகியவற்றுக்குத் தேவையான தகவல் பாதுகாப்புக் குறியாக்கம் அல்லது கட்டுப்பாடுகள் சரியாக இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த கடுமையான உள் மற்றும் வெளிப்புறச் சரிபார்ப்புகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. ஃபயர்வாலுக்குப் பின்னால் உள்ள சர்வரில் டேட்டாபேஸ் பாதுகாப்பாக சேமிக்கப்படுகிறது; கடவுச்சொல்லைப் பயன்படுத்தி மிகச் சிலரால் மட்டுமே சர்வர்களை அணுக முடியும்.
உங்கள் உள்நுழையும் ஐடியையும் கடவுச்சொல்லையும் இரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது உங்களின் பொறுப்பாகும். PhonePe உள்நுழைவு, கடவுச்சொல், OTP விவரங்களை யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களின் தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்புக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டாலோ ஏற்பட்டதாக சந்தேகித்தாலோ அதை எங்களிடம் தெரியப்படுத்துவது உங்களின் பொறுப்பாகும்.
நீங்களே இயக்கும் வகையிலான உள்நுழைதல் / வெளியேறுதல் அம்சம் மற்றும் செயலிப் பூட்டு அம்சம் (“திரைப் பூட்டை இயக்குதல்”) மூலம் உங்கள் செயலியைப் பாதுகாக்க நாங்கள் பல்வேறு நிலைகளிலான பாதுகாப்புகளை வழங்கியுள்ளோம். உங்கள் சாதனத்தில் PhonePe செயலியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய எங்களிடம் தேவையான பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் உள்ளன, அவை மூலம் கூடுதல் அங்கீகாரம் / OTP இல்லாமல் ஒரே உள்நுழைவை வெவ்வேறு சாதனங்களில் பயன்படுத்த முடியாது.
மூன்றாம் தரப்புத் தயாரிப்புகள், சேவைகள் அல்லது வலைத்தளங்கள்
PhonePe தளத்தில் சேவை வழங்குநர்களிடமிருந்து நீங்கள் தயாரிப்புகளையோ சேவைகளையோ பெறும்போது, அவர்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கக் கூடும் என்பதோடு அத்தகவல்கள் அவர்களின் தனியுரிமைக் கொள்கைக்கு இணங்கக் கையாளப்படும். உங்கள் தனிப்பட்ட தகவல்களை இதுபோன்ற சேவை வழங்குநர்கள் எப்படிக் கையாள்வார்கள் என்று தெரிந்துகொள்ள நீங்கள் அவர்களின் தனியுரிமைக் கொள்கையையும் சேவை விதிமுறைகளையும் படித்துப் பார்க்கலாம்.
எங்கள் தளத்தில் உள்ள சேவைகளில் பிற வலைத்தளங்கள் அல்லது செயலிகளுக்கான இணைப்புகள் இருக்கலாம். இவ்வாறான வலைத்தளங்களும் செயலிகளும் அவர்களின் தனிப்பட்ட தனியுரிமைக் கொள்கைகளைப் பின்பற்றுவதால் இது எங்கள் கட்டுப்பாட்டுக்கு மீறியதாக இருக்கலாம். எங்கள் சேவையகங்களை விட்டு நீங்கள் வெளியேறியதும் (உங்கள் பிரவுசரின் URL பகுதி அல்லது மொபைல் வலைத்தளத்தின் URL எதுவென்று பார்த்து இதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்), நீங்கள் வழங்கக்கூடிய தனிப்பட்ட தகவல்களின் பயன்பாடு முழுவதும் அந்த வலைத்தளம் அல்லது செயலியை நடத்தும் நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கையின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அந்தக் கொள்கை எங்களுடையதில் இருந்து வேறுபட்டிருக்கலாம். அந்தத் தளங்களைப் பயன்படுத்தும் முன்பே கொள்கைகளைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்றோ அந்நிறுவனங்களிடம் இருந்து கொள்கைகளை விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றோ உங்களைக் கேட்டுக் கொள்கிறோம். இந்த மூன்றாம் தரப்பினர் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதற்கும் அவர்களின் கொள்கைகளுக்கும் நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்பதில்லை.
உங்களின் ஒப்புதல்
உங்கள் தனிப்பட்ட தகவல்களை உங்களின் ஒப்புதலுடன் செயல்படுத்துகிறோம். PhonePe தளத்தை அல்லது சேவையைப் பயன்படுத்துவதன் மூலமும் மற்றும்/அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலமும், இந்தத் தனியுரிமைக் கொள்கையின் படி உங்களின் தனிப்பட்ட தகவல்களை செயல்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள். நீங்கள் மற்ற நபர்களைப்பற்றிய தனிப்பட்ட தகவல்களை எங்களுக்கு வழங்கினால், இந்தத் தனியுரிமைக் கொள்கையின்படி அதற்கு உங்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும் எங்களையும் பயன்படுத்த அனுமதிப்பதாகவும் ஆகும். மேலும், எந்த அங்கீகரிக்கப்பட்ட DND பதிவேடுகளில் நீங்கள் பதிவு செய்திருந்தாலும் இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல் போன்ற சேனல்கள் மூலம் PhonePe உங்களுடன் தொடர்புகொள்வதை நீங்கள் ஒப்புக்கொண்டு அங்கீகரிக்கிறீர்கள்.
விருப்பம்/விலகல்
எங்களின் அனைத்துப் பயனர்களும் எங்களின் எந்தவொரு சேவையில் இருந்தும் அல்லது அத்தியாவசியமற்ற (விளம்பர, மார்க்கெடிங் தொடர்பான) தொடர்புகளில் இருந்தும் கணக்கைத் தொடங்கியபின் விலகிக்கொள்ளும் வாய்ப்பை நாங்கள் வழங்குகிறோம். எங்களின் பட்டியல் மற்றும் செய்திமடல்களில் இருந்து உங்களது தொடர்புத் தகவல்களை நீக்க வேண்டுமென்றாலோ எங்கள் சேவைகளை நிறுத்த விரும்பினாலோ, குழுவிலகு என்ற பொத்தானை மின்னஞ்சல்களில் கிளிக் செய்யுங்கள்.
ஏதேனும் குறிப்பிட்ட PhonePe தயாரிப்பு அல்லது சேவைக்கான அழைப்பைப் பெற்றால், அழைப்பின் போது PhonePe இன் பிரதிநிதியிடம் இனி அத்தகைய அழைப்பு வேண்டாமென தெரிவித்து அதிலிருந்து விலகலாம்.
தனிப்பட்ட தகவல்களை அணுகுதல்/ திருத்தம் மற்றும் ஒப்புதல்
எங்களிடம் கோரிக்கை வைப்பதன் மூலம் நீங்கள் எங்களிடம் பகிர்ந்த தனிப்பட்ட தகவல்களை அணுகி ஆய்வு செய்யலாம். கூடுதலாக, ஆதார் அடிப்படையிலான e-KYC செயல்முறையின் ஒரு பகுதியாக சேகரிக்கப்பட்ட உங்கள் e-KYC தகவலைச் சேமிப்பதற்கு எங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புதலை நீங்கள் எந்த நேரத்திலும் திரும்பப் பெறலாம். அவ்வாறு திரும்பப் பெறும்போது, வழங்கப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில் பெறப்பட்ட சேவைகளுக்கான அணுகலை நீங்கள் இழக்க நேரிடும். சில சந்தர்ப்பங்களில், இந்தக் கொள்கையின் ‘சேமிப்பு மற்றும் வைத்திருத்தல்’ பிரிவின்படி உங்கள் தகவலை நாங்கள் தொடர்ந்து வைத்திருக்கலாம். மேலே உள்ள கோரிக்கைகளில் ஏதேனும் ஒன்றை எழுப்ப, இந்தக் கொள்கையின் ‘எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்’ பிரிவின் கீழ் வழங்கப்பட்ட தொடர்புத் தகவலைப் பயன்படுத்தி நீங்கள் எங்களை அணுகலாம்.
உங்கள் கணக்கு அல்லது தனிப்பட்ட தகவலை நீக்க விரும்பினால், PhonePe இயங்குதளத்தின் ‘உதவி’ பகுதியைப் பயன்படுத்தவும். இருப்பினும், உங்கள் தனிப்பட்ட தகவலைத் தக்கவைப்பது பொருந்தக்கூடிய சட்டங்களுக்கு உட்பட்டது.
மேலே உள்ள கோரிக்கைகளுக்கு, உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் அங்கீகாரத்தை உறுதிப்படுத்தவும் PhonePe உங்களிடமிருந்து குறிப்பிட்ட தகவலைக் கோர வேண்டியிருக்கும். தனிப்பட்ட தகவலைப் பெறுவதற்கு உரிமை இல்லாத அல்லது தவறாக மாற்றியமைக்கப்படாத அல்லது நீக்கப்படாத எந்தவொரு நபருக்கும் அது வெளிப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கை இதுவாகும்.
நீங்கள் பெற நினைக்கும் குறிப்பிட்ட பொருள்/சேவைகளைப் பற்றி மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள PhonePe தளத்தில் குறிப்பிட்ட பொருள்/ சேவைக்கு உண்டான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் எளிதாக அணுகிப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். இந்தக் கொள்கையின் ‘எங்களைத் தொடர்பு கொள்க’ என்ற பிரிவில் உள்ள விவரங்களைக் கொண்டு மேலும் இதைப் பற்றிய தகவல்களுக்கு எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
சிறார்களின் தகவல்கள்
நாங்கள் தெரிந்தே 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களிடம் இருந்து தகவல்களைப் பெறுவதில்லை. மேலும் இந்திய ஒப்பந்த சட்டம், 1872-இன் கீழ் சட்டரீதியான ஒப்பந்தம் செல்லுபடியாகும் நபர்கள் மட்டுமே எங்கள் தளத்தைப் பயன்படுத்தலாம். நீங்கள் 18 வயதுக்குக் கீழ் இருந்தால், தளம் அல்லது சேவைகளை உங்களது பெற்றோர், சட்டப்பூர்வ பாதுகாவலர், அல்லது ஒரு வயதில் மூத்த பொறுப்பான நபரின் கண்காணிப்பில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கொள்கையில் மாற்றங்கள்
எங்கள் வணிகத்தில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்வதைப் போலவே, எங்கள் கொள்கைகளிலும் மாற்றங்கள் நிகழும். இந்த தனியுரிமைக் கொள்கையின் பகுதிகளை எந்த நேரத்திலும் உங்களுக்கு எந்த முன் எழுத்துப்பூர்வ அறிவிப்பும் இல்லாமல் எங்கள் முழு விருப்பப்படி திருத்தவோ, மாற்றவோ, சேர்க்கவோ அல்லது அகற்றவோ எங்களுக்கு உரிமை உள்ளது. நாங்கள் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும், சமீபத்திய மாற்றங்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள, தனியுரிமைக் கொள்கையை அவ்வப்போது ஆய்வு செய்வது உங்கள் பொறுப்பாகும். மாற்றங்களுக்குப் பிறகும் நீங்கள் தொடர்ந்து சேவைகளை/தளத்தை உபயோகித்தால், மேற்கொண்ட மாற்றங்களுக்கு ஒப்புக்கொள்கிறீர்கள் என்று புரிந்துகொள்ளப்படும். நீங்கள் எங்களிடம் பகிர்ந்த தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பு குறையும்படி என்றுமே நாங்கள் கொள்கைகளை மாற்றியமைக்க மாட்டோம்.
எங்களைத் தொடர்பு கொள்க
உங்களின் தனிப்பட்ட தகவல்கள் செயல்படுத்தப்படுவதைப் பற்றியும் இந்த தனியுரிமைக் கொள்கையைப் பற்றியும் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் சந்தேகங்கள் அல்லது புகார்கள் இருந்தால், https://support.phonepe.com என்ற இணைப்பில் PhonePe இன் தனியுரிமை அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம். குறுகிய காலத்திற்குள் உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க உறுதியளிக்கிறோம். அப்படி ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் நாங்களே உங்களைத் தொடர்பு கொண்டு அதனைத் தெரிவிப்போம்.