பதிப்பு 7.0
தேதி: செப்டம்பர் 01, 2024
PhonePe செயலியை உருவாக்கியது PhonePe Private Limited (முன்பு FX Mart Private Limited) ஆகும், இந்நிறுவனம் Companies Act, 2013-ன்கீழ் உருவாக்கப்பட்டு அதன் பதிவு அலுவலகம்.
ஆபீஸ்-2, தளம் 4,5,6,7, விங் A, பிளாக் A, சலர்பூரியா சாஃப்ட்ஸோன், சர்வீஸ் சாலை, க்ரீன் க்ளென் லேஅவுட், பெல்லந்தூர், பெங்களூரு, கர்நாடகா-KN, பின்கோடு- 560103 என்ற முகவரியில் இயங்குகிறது.
PhonePe நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் பெரிதும் மதிப்பதோடு அவர்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்குவதையே இலக்காகவும் கொண்டுள்ளோம். வாடிக்கையாளர்களின் குறைகளை உரிய நேரத்தில் சரியாகத் தீர்த்துவைப்பதோடு கனிவான, நியாயமான முறையில் நடந்துகொள்ளுமாறும் எங்கள் குறைதீர்ப்புக் கொள்கை அமைக்கப்பட்டுள்ளது.
PhonePe செயலியில் எந்தவித இடையூறுமின்றிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் அனுபவத்தை வழங்குவதும், தேவைப்பட்டால் செயலியினுள்ளிருந்தே வாடிக்கையாளர் சிக்கல்களுக்குத் தீர்வு காணுமாறு குறைதீர்ப்புச் செயல்முறையை வைத்திருப்பதுமே எங்கள் முக்கியக் குறிக்கோள்கள் ஆகும். அரிய சில சமயங்களில், பலவகையான மனித, தொழில்நுட்ப, சேவையகப் பிழைகளால் சில சிக்கல்களுக்கு விரிவான, பிரத்தியேகமான தீர்வுகள் தேவைப்படலாம். படிப்படியான எங்கள் குறைதீர்ப்புச் செயல்முறையை நீங்கள் இங்கே பார்க்கலாம்.
வாடிக்கையாளர் புகார்களை சரியான குழுக்கள் நிவர்த்தி செய்கின்றன என்பதை உறுதிப்படுத்த எங்களிடம் ஒரு விரிவாக்க மேட்ரிக்ஸ் உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு சரியான நேரத்தில் தீர்வு காண்பதை உறுதிசெய்ய, விரிவாக்க நடைமுறையைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
லெவல் 2 அல்லது லெவல் 3ல் உள்ள எந்த சிக்கலும் முந்தைய நிலை(களில்) தாக்கல் செய்திருக்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தீர்வு காலத்திற்குள் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் மட்டுமே பிரச்சனை உயர் மட்டத்திற்கு எழுப்பப்பட வேண்டும். பின்வரும் அறிவுறுத்தல்களை மீறும் எந்தவொரு கோரிக்கையும் பொருத்தமான நிலைக்குத் திருப்பிவிடப்படும்.
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சுய உதவியை வழங்கும் எங்கள் உதவிப் பக்கங்களை கவனமாகப் பார்க்குமாறு பரிந்துரைக்கிறோம். உதவிப் பக்கங்கள் மூலம் எழுப்பப்படும் கேள்விகள் மற்றும் சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், நீங்கள் எங்கள் வாடிக்கையாளர் ஆதரவுக் குழுவை தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது PhonePe ஆப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
சேவை நிலைகள்
ரீசார்ஜ், பில் பே, PhonePe வாலட், PhonePe கிஃப்ட் கார்டுகள், UPI (ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்), செல்வம், பயணம், போக்குவரத்து & உணவு, வவுச்சர்களுக்கான சேவை நிலைகள்
நிலை – 1
- புகார் பதிவு செய்தல்:
- “History/வரலாறு” பிரிவில் இருந்து தொடர்புடைய பரிவர்த்தனையைத் தேர்ந்தெடுத்து, “Contact PhonePe Support/PhonePe ஆதரவைத் தொடர்புகொள்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் PhonePe வாடிக்கையாளர் ஆதரவுடன் உங்கள் புகாரைப் பதிவு செய்யவும்.
- நாங்கள் 24 மணிநேரமும் வாரத்தில் 7 நாட்களும் வாடிக்கையாளர் ஆதரவு சேவையை வழங்குகிறோம்.
- புகார்களுக்கான தீர்வு:
- புகாரைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள், உங்களுக்கு முதல் பதில் வழங்கப்படும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.
- உங்கள் அனைத்து புகார்கள்/சந்தேகங்களை மூன்று வேலை நாட்களுக்குள் தீர்த்து வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.
- சில நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அல்லது தொழில்நுட்ப காரணங்களுக்காக, சில புகார்கலைத் தீர்க்க அதிக நேரம் ஆகலாம். இது போன்ற சூழ்நிலையில், உங்கள் புகார் தீர்க்கப்படும் நேரம் குறித்து உடனடியாக உங்களுக்கு அறிவிக்கப்படும்.
- ஒரு சில சூழ்நிலைகளில் புகார் உடனடியாக தீர்க்கப்படும். ஆனால் புகார் தீர்க்கப்பட்டது என்பது கணினியில் பிரதிபலிக்க நேரம் எடுக்கும். உதாரணமாக, பணத்தை ரீஃபண்ட் செய்வதற்கான ஒப்புதல் உடனடியாக வழங்கப்படலாம், ஆனால் உங்கள் கணக்கில் ரீஃபண்ட் செய்யபப்ட்ட பணம் உடனே பிரதிபலிக்காது. இத்தகைய தாமதங்கள் வங்கி அல்லது பிற காரணங்களால் ஏற்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- ‘மோசடி மற்றும் இடர் மதிப்பீடு’ தொடர்பான புகார்கள் பல ஏஜென்சிகளின் ஈடுபாட்டின் காரணமாக விசாரிக்கப்படுவதற்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது. இத்தகைய சம்பவங்களுக்கான தீர்வு காலம் சம்பவத்தின் முக்கியத்துவம் மற்றும் சிக்கல் தன்மையைப் பொறுத்தது. அத்தகைய நிகழ்வு ஏற்பட்டால் காலக்கெடு குறித்து உங்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படும்.
குறிப்பு: தீர்மானத்தில் தாமதம் ஏற்பட்டால், தாமதம் குறித்து பயனர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.
நிலை – 2
- புகார்கள் பதிவு செய்தல்:
கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த சேனலையும் பயன்படுத்தி உங்கள் புகாரை அடுத்த நிலையில் பதிவு செய்யலாம். https://support.phonepe.com/ இல் புகாரை பதிவு செய்யவும்.
080-68727374/022-68727374 எண்களில் எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைக்கலாம்.
2. புகார்களுக்கான தீர்வு:
புகாரைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள், உங்களுக்கு முதல் பதில் வழங்கப்படும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.
உங்கள் அனைத்து புகார்கள்/சந்தேகங்களை மூன்று வேலை நாட்களுக்குள் தீர்த்து வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். தீர்வு காணுவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், உடனடியாக உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
நிலை – 3
புகார்கள் பதிவு செய்தல்:
உங்கள் பிரச்சினை முந்தைய நிலைகளில் தீர்க்கப்படவில்லை என்றால், நீங்கள் குறைதீர்ப்பு மையத்தை அணுகலாம்
- PhonePe அல்லாத QRகள் மூலம் பணம் செலுத்துவது தொடர்பான சிக்கல்களுக்கு 30 நாட்கள்
- மற்ற வகையான பரிவர்த்தனைகள் தொடர்பான சிக்கல்களுக்கு 10 நாட்கள்
தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 மற்றும் அதன் கீழ் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி, புகார் அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தொடர்பு கொள்ளவும்:
முதன்மை நோடல் அதிகாரி:சினு சுதாகர்
நோடல் அதிகாரி:சிஞ்சன் குமார் சாஹா
தொலைபேசி: 080-68727374 / 022-68727374
வலைப்பக்கம்: grievance.phonepe.com
முகவரி- ஆஃபீஸ்-2, தளம் 4,5,6,7, விங்-A, பிளாக்-A, ஸலர்புரியா ஸாஃப்ட்ஜோன், சர்வீஸ் ரோடு, கிரீன் கிளென் லேஅவுட், பெல்லந்தூர், பெங்களூரு- கர்நாடகா– KA, பின் -560103.
வேலை நேரம்: திங்கள்-வெள்ளி காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை.
2. புகார்களுக்கான தீர்வு:
புகாரைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் முதல் பதிலை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். அனைத்து நிலை 3 புகார்களையும் 7 வணிக நாட்களுக்குள் தீர்க்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். தீர்வு காணுவதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், உடனடியாக உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.
நிலை – 4
உங்கள் சந்தேகம்அல்லது புகார், முந்தைய நிலைகளில் 30 நாட்களுக்குள் திருப்திகரமாக தீர்க்கப்படவில்லை என்றால், நீங்கள் டிஜிட்டல் ஒம்பட்ஸ்மனை அணுகலாம்.
ஒம்பட்ஸ்மேனின் புகார் பதிவு போர்டல்: https://cms.rbi.org.in/
கட்டணமில்லா எண்: 14448
மின்னஞ்சல் ஐடி: [email protected]
முகவரி- சென்ட்ரலைஸ்டு ரெசிப்ட் மற்றும் ப்ராசஸிங் சென்டர், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, 4வது தளம், பிரிவு 17, சண்டிகர் – 160017
மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து இணைப்பைப் பார்க்கவும் – RBI Ombudsman.
வாடிக்கையாளர் பொறுப்பு வரம்பு
அங்கீகரிக்கப்படாத கட்டண பரிவர்த்தனையிலிருந்து எழும் ஒரு வாடிக்கையாளரின் பொறுப்பு, பின்வரும் வரம்பில் வரையறுக்கப்பட்டுள்ளது:
வரிசை எண் | விவரங்கள் | வாடிக்கையாளரின் அதிகபட்ச பொறுப்பு |
---|---|---|
1 | மோசடி/அலட்சியம்/கவனக்குறைவில் PhonePe இன் பங்களிப்பு இருப்பது (பரிவர்த்தனை வாடிக்கையாளரால் புகார் அளிக்கப்படுகிறதா இல்லையா என்பதை பொருட்படுத்தப்படவில்லை) | எதுவும் இல்லை |
2 | PhonePe மற்றும் வாடிக்கையாளர் தரப்பில் எந்த தவறும் இல்லாமல், ஆனால், அமைப்பில் ஏதோ ஒரு இடத்தில் நேர்ந்த பிழையால், மூன்றாம் தரப்பு மீறல் காரணமாக அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனையை வாடிக்கையாளர் PhonePe விடம் தெரிவிக்கிறார். இதைப்போன்ற நிகழ்வுகளில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளர் பொறுப்பு என்பது PhonePe வில் இருந்து வாடிக்கையாளரின் எப்போது பரிவர்த்தனை நடந்ததாக தகவல் பெற்றால் என்பதற்கும், வாடிக்கையாளரால் PhonePe க்கு அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைப் பற்றி எப்போது எப்போது புகார் அளித்தார் என்பதற்கும் இடையேயான நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பின்வருமாறு மாறுபடும். | |
i. மூன்று நாட்களுக்குள்; # | எதுவும் இல்லை | |
ii. நான்கு முதல் ஏழு நாட்களுக்குள்# | பரிவர்த்தனை மதிப்பு அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு ₹10,000/- என்ற வீதம், மதிப்பு குறைவான பரிவர்த்தனை | |
iii. ஏழு நாட்களுக்கும் மேல்# | PhonePe ஒவ்வொரு புகாரின் அடிப்படையில் முடிவு செய்யும். | |
3 | வாடிக்கையாளரின் கவனக்குறைவால் இழப்பு ஏற்பட்டால், அதாவது வாடிக்கையாளர் (ஆண்/பெண்) பணம் செலுத்தும் சான்றுகளைப் பகிர்ந்திருந்தால், அவரின் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனையை PhonePe க்கு தெரிவிக்கும் வரை ஏற்படும் முழு இழப்பும் வாடிக்கையாளரைச் சார்ந்தது. அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை பற்றி புகார் அளித்த பிறகு ஏற்படும் எந்த இழப்பை PhonePe ஈடு செய்யும். | |
4 | PhonePe, தனது விருப்பப்படி, அங்கீகரிக்கப்படாத மின்னணு கட்டண பரிவர்த்தனைகள் வாடிக்கையாளர் கவனக்குறைவால் ஏற்பட்டிருந்தால் கூட வாடிக்கையாளர் பொறுப்பைத் தள்ளுபடி செய்ய முடிவு செய்யலாம். |
வரையறுக்கப்பட்ட பொறுப்பின் மீதான வாடிக்கையாளர் கடமை
- வலுவான கடவுச்சொற்கள் மற்றும் (PIN) பின்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவை குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றப்பட வேண்டும். பின்கள்/ கடவுச்சொற்கள் மற்றும் OTP யை PhonePe ஊழியர்கள் உட்பட மின்னஞ்சல்/ தொலைபேசி மூலம் யாருடனும் பகிரக்கூடாது. PhonePe அத்தகைய சான்றுகளை ஒருபோதும் கேட்காது.
- தொடர்ந்து விழிப்பூட்டல்கள் பெற வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஐடிகளை மூலம் PhonePe புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- மின்னணு கட்டண பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் விழிப்பூட்டல்களை (பொருந்தும் இடங்களில்) கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.
- அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை உடனுக்குடன் அடையாளம் காண, வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்களிலிருந்தோ அல்லது மொபைல் பயன்பாட்டின் மூலமாகவோ பரிவர்த்தனைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
- கணக்கில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனையைக் கண்டறிந்தால், PhonePe க்கு உடனடியாக புகாரளிப்பது வாடிக்கையாளரின் கடமையாகும்.
BBPS சர்ச்சை பதிவு செய்தல்
பில் பே சர்ச்சையை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்
- இந்த இணைப்பு மூலம் எழுப்பப்படும் புகார்கள் NPCI நியமிக்கப்பட்ட குழுக்களால் தீர்க்கப்படுகின்றன.
- இந்த புகார்களை Phonepe கவனிக்காது மற்றும் புகார் தீர்க்கப்படும்போது எந்த அறிவிப்பையும் அனுப்பாது என்பதை நினைவில் கொள்க
ஆதார் eKYC குறைதீர்ப்பு
- ஆதார் eKYC மற்றும் அங்கீகாரத்தை திரும்பப் பெறுதல் தொடர்பான சிக்கல்களுக்கு, ஒரு வணிகர் பின்வரும் வழிகளில் தொடர்பு கொள்ளலாம் அல்லது புகார் செய்யலாம்::
- வணிகர்கள் இன்பவுண்ட் ஆதரவுக் குழுவை 080-6872-7777/ 022-6872-7777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நாங்கள் 7 நாட்களும் காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை ஆதரவை வழங்குகிறோம்.
- PhonePe வணிகச் செயலியின் முகப்புப் பக்கத்தில் உள்ள (?உதவி) ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் வணிகர்கள் PhonePe வணிகர் உதவிமையத்திடம் டிக்கெட்டை எழுப்பலாம்.
- ஆன்போர்டிங் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான காலக்கெடு 5 வேலை நாட்களாகவும், ஒப்புதலை திரும்பப் பெறுதல் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்கான காலக்கெடு 30 காலண்டர் நாட்களாகவும் இருக்கும்.
வணிகர்களின் குறைகளை நிவர்த்தி செய்தல்
சேவை நிலைகள் | ஆஃப்லைன் வணிகர் குறைகளைத் தீர்ப்பது | பேமண்ட் கேட்வே குறைகளை நிவர்த்தி செய்தல் | ||||||
---|---|---|---|---|---|---|---|---|
நிலை 1 |
புகார் பதிவு:1. PhonePe வணிகச் செயலியின் முகப்புப் பக்கத்தில் உள்ள (?உதவி) ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் PhonePe வணிக ஆதரவுடன் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். 2. உதவிப் பிரிவில், நீங்கள் எந்தத் தலைப்பில் சிக்கல்களை எதிர்கொள்கிறீர்களோ, அதைத் தேர்ந்தெடுத்து, புகாரைத் தெரிவிக்க “எங்களுடன் சாட் செய்க” என்பதைக் கிளிக் செய்யவும். 3. மாற்றாக, PhonePe வணிக டாஷ்போர்டின் முகப்புப் பக்கத்தில் உள்ள (?உதவி) ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் https://business.phonepe.com/faq இல் புகாரைப் பதிவு செய்யலாம். 4. நாங்கள் 24/7 ஆதரவு சேவையை வழங்குகிறோம். |
புகார் பதிவு:உங்கள் PhonePe வணிக டாஷ்போர்டில் உள்ள உதவிப் பிரிவில் இருந்து PhonePe பேமெண்ட் கேட்வே ஆதரவுடன் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். உதவிப் பிரிவில், நீங்கள் எந்தத் தலைப்பில் சிக்கல்களை எதிர்கொள்கிறீர்களோ, அதைத் தேர்ந்தெடுத்து, புகாரைத் தெரிவிக்க “எங்களைத் தொடர்புகொள்க” என்பதைக் கிளிக் செய்யவும். உங்களால் ஃபோன்பே பிசினஸ் டாஷ்போர்டில் உள்நுழைய முடியவில்லை எனில், https://tickets.phonepe.com/en/support மூலம் PhonePe பேமெண்ட் கேட்வே சப்போர்ட் மூலம் புகாரைப் பதிவு செய்யலாம். நாங்கள் 24/7 ஆதரவு சேவையை வழங்குகிறோம். | ||||||
புகார்களின் தீர்வு:புகாரைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் உங்களுக்கு முதல் பதிலை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். உங்கள் புகார்கள்/கேள்விகள் அனைத்தையும் 7 நாட்களுக்குள் தீர்ப்பதை/பதிலளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். வங்கி, செயல்பாட்டு அல்லது தொழில்நுட்ப காரணங்கள்/செயல்முறைகள் காரணமாக உங்கள் புகாரின் தீர்வு தாமதமாகலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில், உங்கள் புகார் தீர்க்கப்படும் காலக்கெடுவை முன்கூட்டியே உங்களுக்குத் தெரிவிக்கப்படும். ‘மோசடி மற்றும் இடர் மதிப்பீடு’ தொடர்பான புகார்கள் பல ஏஜென்சிகளின் ஈடுபாட்டின் காரணமாக விசாரிக்க அதிக நேரம் எடுக்கும். அத்தகைய சந்தர்ப்பங்களில் தீர்க்கும் நேரம் வழக்கின் தீவிரம் மற்றும் சிக்கலைப் பொறுத்தது. இதுபோன்ற எல்லா நிகழ்வுகளிலும் காலக்கெடு முன்கூட்டியே உங்களுக்குத் தெரிவிக்கப்படும். தீர்வு காண்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், உங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படும். | ||||||||
நிலை 2 |
| |||||||
நிலை 3 |
புகார் பதிவு:
1. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின்படி, நோடல் அதிகாரி மற்றும் முதன்மை நோடல் அதிகாரியின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
புகார்களின் தீர்வு:1. புகாரைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் உங்களுக்கு முதல் பதிலை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். 2. அனைத்து மூன்றாம் நிலை புகார்களையும் 7 வணிக நாட்களுக்குள் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். தீர்வு நேரத்தில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால், அது முன்கூட்டியே உங்களுக்குத் தெரிவிக்கப்படும். | |||||||
நிலை 4 |
30 நாட்களுக்குள் உங்கள் வினவல் அல்லது புகார் முந்தைய நிலைகளில் திருப்திகரமாக தீர்க்கப்படவில்லை என்றால், நீங்கள் டிஜிட்டல் ஒம்புட்ஸ்மேனைத் தொடர்பு கொள்ளலாம்.குறைதீர்ப்பாளரின் புகார் பதிவு போர்டல்:
https://cms.rbi.org.in/ கட்டணமில்லா மொபைல் எண்: 14448 மின்னஞ்சல் ஐடி: [email protected] முகவரி – சென்ட்ரலைஸ்டு ரெசிப்ட் மற்றும் செயலாக்க மையம், இந்திய ரிசர்வ் வங்கி, 4வது தளம், பிரிவு 17, சண்டிகர் – 160017 மேலும் விவரங்களுக்கு, இணைப்பைப் பார்க்கவும் – – RBI Ombudsman. |