
Trust & Safety
போலி பேமண்ட் ஆப்ஸ்: ஒவ்வொரு வணிகரும் புதிய மோசடி போக்குகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
PhonePe Regional|3 min read|06 September, 2024
மகேஷ் என்பவர் சிறிய நகரத்தில் ஒரு விசித்திரமான சுவையூட்டிகள் கடை வைத்து நடத்தி வருகிறார். அந்தப் பகுதியில் புதிதாக வசிக்க வந்த ஒரு நபர் அந்தக் கடைக்கு அடிக்கடி வரத் தொடங்கி தினசரி சிறியளவிலான இனிப்புகளை வாங்கி படிப்படியாக மகேஷூடன் நம்பிக்கை வளர்த்துக்கொண்டார்.
ஒரு நாள் அந்த நபர் புதுமனை புகுவிழா ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் பொருட்களின் பட்டியலை வாங்குவதற்கு மகேஷின் உதவி தேவை என்றும் தெரிவித்தார். இதற்கான மொத்த செலவு ரூ.10,000 வரை ஆனது.
பொருட்களை வாங்கிய பிறகு மகேஷின் அருகில் நின்று அந்த குடியிருப்பாளர் நபர் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பேமண்ட் செய்தார். பேமண்ட் செய்யப்பட்டதாக காட்டப்பட்டது.
மகேஷ், குடியிருப்பாளர் நபரின் மொபைலில் முழு பரிவர்த்தனை முறையையும் பார்த்த காரணத்தால் பேமண்ட் நிறைவடைந்தது என்று நம்பினார். ஆனால் உண்மையில் அந்த குடியிருப்பாளர் நபர் அதிகாரப்பூர்வமான ஆப்பை பிரதிபலிக்கும் வகையில் போலியான ஒரு பேமண்ட் ஆப்பை உருவாக்கும் ஒரு மோசடி செய்பவர் ஆவார். இது மகேஷூக்கு பணம் பரிமாற்றப்பட்டதாக ஒரு பிம்பத்தை உருவாக்கும். ஆனால் உண்மையில் எந்தவொரு பேமண்ட்டும் செய்யப்பட்டிருக்காது.
நீங்கள் ஒரு வணிகர் எனில் இத்தகைய போலி பேமண்ட் ஆப் தொடர்பான ஆபத்தான மோசடிகள் பற்றி அறிந்திருக்க வேண்டும். இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்!
போலி பேமண்ட் ஆப்கள் என்றால் என்ன?
போலி பேமண்ட் ஆப்கள் என்பவை முறையான அதிகாரப்பூர்வமான பேமண்ட் ஆப்களின் போலி ஆகும். அவை UI, கலர் ஸ்கீம்கள் மற்றும் பிரபலமான பேமண்ட் ஆப்களின் ஒட்டுமொத்த தோற்றத்தை நெருக்கமாக ஒத்திருக்கும். பெரும்பாலும் முழு பேமண்ட் செயல்முறையையும் பிரதிபலிக்கும்-அவற்றை ஒரே பார்வையில் வேறுபடுத்துவது கடினம் ஆகும். இந்த மோசடி ஆப்களில் சில, பணம் பெறப்பட்டதாக பொய்யாக குறிப்பிடுவதற்கு பீப் அல்லது சைம் போன்ற பேமண்ட் அறிவிப்பு ஒலிகளை அப்படியே நகலெடுத்து உண்மை போன்ற மாயையை மேலும் ஏற்படுத்துகின்றன. இது பேமண்ட் பெறப்பட்டதாக மேலும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அவர்கள் நம்பத்தகுந்த ஒரு பேமண்ட் தகவலை உருவாக்கி பரிவர்த்தனைகள் நிறைவடைந்ததாக காட்ட முடியும். இது ஒரே பார்வையில் வேறுபடுத்தி பார்ப்பது என்பது சவாலனதாகும்.
போலி பேமெண்ட் ஆப்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி
மோசடி செய்பவர்கள், ஒருவர் தாங்கள் ஒரு பரிவர்த்தனையை செய்து முடித்துவிட்டதாக பாதிக்கப்பட்ட அப்பாவிகளை நம்ப வைப்பதற்காக போலி பேமண்ட் ஆப்ஸைப் பயன்படுத்துகின்றனர். உண்மையில் பார்த்தால், அவர்கள் பேமண்ட் பரிவர்த்தனை நடைமுறையை போலவே காண்பிக்கும் ஒரு போலி ஆப்பை பயன்படுத்துகிறார்கள். ஆனால் உண்மையில் அந்த பரிவர்த்தனை நடக்கவில்லை அது போலியானது என்று பிறகு தான் பாதிக்கப்பட்டவர்கள் உணருகிறார்கள்.
போலியான பேமண்ட் ஆப்களிலிருந்து விழிப்புடனும் பாதுகாப்பாகவும் இருக்க உதவும் சில குறிப்புகள் இதோ:
- இதுவரையிலான பரிவர்த்தனைகளை பாருங்கள்: உங்கள் பேமண்ட் ஆப் அல்லது வங்கி கணக்கு மூலமாக உங்கள் பரிவர்த்தனைகளை எப்போதும் சரிபாருங்கள். ஸ்கிரீன் ஷாட்கள் அல்லது அறிவிப்புகளை மட்டுமே எப்போதும் நம்பாதீர்கள்.
- முரணான தகவல்கள்: பரிவர்த்தனை விவரங்களில் ஏதேனும் முரண்பாடுகள் உள்ளதா எனப் பாருங்கள். போலி ஆப்களில் நுட்பமான பிழைகள் அல்லது முரண்பாடுகள் இருக்கலாம், அவை மோசடி என உங்களுக்கு எச்சரிக்கக்கூடும்.
- அழுத்தம் தரும் உத்திகள்: செலுத்திய பேமண்ட்டை சரியாக சரிபார்ப்பதற்கான நேரத்தை அனுமதிக்காமல் ஒரு பரிவர்த்தனையை முடிக்க உங்களை அவசரப்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
- அறியப்படாத ஆப்கள்: உங்கள் பிராந்தியத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் முறையான பேமண்ட் ஆப்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். ஒரு வாடிக்கையாளர் அறிமுகமில்லாத ஆப்களின் மூலம் பணம் செலுத்தினால், எச்சரிக்கையுடன் தொடருங்கள்.
வியாபாரிகள் என்ன கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
வணிகர்கள் அதிகப்படியாக போலி பேமண்ட் ஆப்களுக்கு இலக்காகியுள்ளனர். மோசடி செய்பவர்கள் பிஸியான கடையில் உள்ள குழப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள் அல்லது ஒரு வணிகரின் கவனத்தை திசைதிருப்பி இந்த போலி பேமண்ட் ஆப்ஸ் மூலம் ஏமாற்றுகிறார்கள். மோசடிக்கு ஆளாகி வணிகர் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கி நஷ்டமடைகிறார்கள்.
போலி பேமெண்ட் ஆப்ஸ்களில் இருந்து நடக்கும் மோசடிகளைத் தடுக்க வணிகர்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான குறிப்புகள் இதோ:
- உங்கள் ஊழியர்களுக்கு கற்பியுங்கள்: இந்த மோசடி குறித்து அனைத்து ஊழியர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையும், மோசடி பரிவர்த்தனைகளை எப்படி கண்டறிவது என தெரிந்திருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- சரிபார்ப்பு நடைமுறைகளை செயல்படுத்துங்கள்: பொருட்கள் அல்லது சேவைகள் வழங்கப்படுவதற்கு முன்பு பேமண்ட்டுகளை சரிபார்க்க ஒரு நிலையான செயல்முறையை உருவாக்குங்கள். உங்கள் PhonePe ஸ்மார்ட் ஸ்பீக்கரிடமிருந்து பேமண்ட் அங்கீகாரத்திற்காகக் காத்திருப்பது (போலி ஆப்களால் இந்த அலர்ட் மெசேஜ்களை தூண்ட முடியாது), பரிவர்த்தனை ஐடியைச் சரிபார்ப்பது அல்லது உங்கள் பேமண்ட் ஆப்பின் உறுதிப்படுத்தலுக்காகக் காத்திருப்பது ஆகியவை இதில் அடங்கும்.
- சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையை புகாரளியுங்கள்: சந்தேகத்திற்கிடமான போலி பேமண்ட் ஆப்பை நீங்கள் எதிர்கொண்டால், உடனடியாக தொடர்புடைய அதிகாரிகளுக்கும் உங்கள் பேமண்ட் ப்ராசஸருக்கும் தெரிவியுங்கள்.
நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால் அல்லது போலி பேமண்ட் ஆப்பை கண்டறிந்தால், பின்வரும் வழிகளில் உடனடியாக சிக்கலை எழுப்பலாம்:
- PhonePe ஆப்: உதவிப் பிரிவுக்குச் சென்று “பரிவர்த்தனை தொடர்பான சிக்கல்” என்ற விருப்பத்தின் கீழ் ஒரு சிக்கலை எழுப்புங்கள்.
- PhonePe வாடிக்கையாளர் உதவி மைய எண்: நீங்கள் சிக்கலை எழுப்ப PhonePe வாடிக்கையாளர் உதவி மைய எண் 80-68727374 / 022-68727374 க்கு அழைத்து சிக்கலை எழுப்பலாம். அதன் பிறகு வாடிக்கையாளர் உதவி மைய முகவர் டிக்கெட்டை உருவாக்கி உங்கள் சிக்கல் தொடர்பாக உதவுவார்.
- வெப்ஃபார்ம் சமர்ப்பிப்பு: நீங்கள் PhonePe இன் வெப்ஃபார்ம், https://support.phonepe.com/ஐப் பயன்படுத்தி டிக்கெட்டை எழுப்பலாம்
- சமூக ஊடகங்கள்: PhonePe இன் சமூக ஊடகங்கள் வழியாக மோசடி சம்பவங்களை நீங்கள் புகாரளிக்கலாம்:
- Twitter: https://twitter.com/PhonePeSupport
- Facebook: https://www.facebook.com/OfficialPhonePe
- குறைகள்: தற்போதுள்ள புகாரின் மீது குறைகளை தெரிவிக்க, நீங்கள் https://grievance.phonepe.com/ என்ற இணையதளத்தில் உள்நுழைந்து, முன்பு எழுப்பப்பட்ட டிக்கெட் ஐடியை பகிரவும்.
- சைபர் செல்: கடைசியாக, நீங்கள் அருகிலுள்ள சைபர் கிரைம் செல்லில் மோசடி புகார்களைப் புகாரளிக்கலாம் அல்லது https://www.cybercrime.gov.in/ இல் ஆன்லைனில் புகாரைப் பதிவு செய்யலாம் அல்லது சைபர் கிரைம் செல் உதவிமைய எண்1930 இல் தொடர்பு கொள்ளலாம்.
பாதுகாப்பாக இருங்கள், விழிப்பாக இருங்கள், உங்கள் பிஸ்னஸைப் பாதுகாப்பாக நடத்துங்கள்.