Trust & Safety
லாட்டரி மோசடிகளை புரிந்துகொள்தல், கண்டறிதல் மற்றும் தவிர்த்தல்
PhonePe Regional|2 min read|12 December, 2023
லாட்டரி பக்கமே செல்லாத உங்களுக்கு லாட்டரியில் ஜாக்பாட் கிடைத்ததாகச் சொல்லி உற்சாகமான மின்னஞ்சல் அல்லது தொலைபேசி அழைப்பு வரும்போது நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்! ஆனால் இங்கே திருப்பம் உள்ளது: உங்கள் பரிசைப் பெற, அவர்கள் செயலாக்கக் கட்டணம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தச் சொல்கிறார்கள். இது வில்லி வொன்காவின் சாக்லேட் ஃபேக்ட்ரிக்குக்கு கோல்டன் டிக்கெட்டை வென்றது போன்றது, சாக்லேட் இலவசம் அல்ல என்பதைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமே – நீங்கள் முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டும்!
லாட்டரி மோசடி என்றால் என்ன?
லாட்டரி மோசடி என்பது எதிர்பாராத மின்னஞ்சல் அறிவிப்பு, தொலைபேசி அழைப்பு அல்லது அஞ்சல் மூலம் தொடங்கும் ஒரு வகையான மோசடி ஆகும். லாட்டரி சீட்டில் நீங்கள் பெரிய தொகையை வென்றுள்ளீர்கள் எனக் கூறி, குறிப்பிட்ட ஃபோன் எண் அல்லது ஏஜென்ட்டின் மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளும்படி கேட்கப்படும். உண்மையில் அந்த தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி மோசடி செய்பவருக்கு சொந்தமானதாக இருக்கும். முகவரைத் தொடர்பு கொண்ட பிறகு, அவர் லாட்டரி பரிசைப் பெற செயலாக்கக் கட்டணத்தைச் செலுத்தச் சொல்லி கேட்பார்.
அபாய எச்சரிக்கைகள்
மோசடி நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் அபாய எச்சரிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவை பாதுகாப்பாக இருக்கவும் ஆபத்தைத் தவிர்க்கவும் உதவுகின்றன:
- எதிர்பாராத அறிவிப்புகள்: லாட்டரி விளையாட்டில் தீவிரமாக பங்கேற்காமல் லாட்டரி அறிவிப்புகளைப் பெற்றால், எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் இதுவரை விளையாடாத ஒரு லாட்டரியை நீங்கள் வென்றீர்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டால், ஜாக்கிரதை. நீங்கள் விருப்பத்துடன் லாட்டரி விளையாட்டில் பங்கேற்றால், சட்டப்பூர்வமான வெற்றிகள் பொதுவாக நடக்கும்.
- அட்வான்ஸ் பேமெண்ட்கள்: முறையான லாட்டரி நிறுவனங்கள் வெற்றியாளர்களிடம் முன்பணத்தை செலுத்துமாறு கேட்பதில்லை. நீங்கள் உண்மையிலேயே வெற்றி பெற்றால், உங்கள் பரிசைப் பெறுவதற்கு முன் நீங்கள் எந்த தொகையையும் செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்ர்கள், ஆனால் நீங்கள் முதலில் பணம் செலுத்த வேண்டும் என்று யாராவது உங்களிடம் சொன்னால், அது முறையான வெற்றி அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
- உண்மையாக இருந்தால் நல்லதுதான்: உண்மையாக இருந்தால் நல்லதுதான். அதேநேரத்தில், நீங்கள் மிகவும் உற்சாகமடைவதற்கு முன் ஒன்றுக்கு இருமுறை சரிபார்ப்பது நல்லது.
- அவசரப்படுத்தும் யுக்திகள்: யாராவது உங்களை விரைவாகச் செயல்படத் தூண்டினால் எச்சரிக்கையாக இருங்கள். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் இந்த அவசர யுக்திகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை அதிகமாக யோசிப்பதையோ அல்லது ஆலோசனையை பெறுவதையோ தடுக்கிறார்கள்.
- பொருந்தாத தொடர்புத் தகவல்: உங்களுக்கு வழங்கப்பட்ட தொடர்பு விவரங்கள், லாட்டரி அமைப்பாளரின் அதிகாரப்பூர்வ தகவலுடன் பொருந்துகிறதா எனச் சரிபார்க்கவும். சட்டபூர்வமான லாட்டரிகளில் சீரான மற்றும் துல்லியமான தகவல்கள் இருக்கும்.
- இலக்கண பிழைகள்: முறையான உரையாடலில் தவறான இலக்கணம் மற்றும் எழுத்துப்பிழை ஆகியவற்றைக் கவனியுங்கள். சட்டப்பூர்வ நிறுவனங்கள் பொதுவாக தங்கள் தகவல்தொடர்புகளில் தொழில்முறை தரத்தை பராமரிக்கின்றன.
- அநாமதேய கட்டண முறைகள்: கிஃப்ட் கார்டுகள் அல்லது வயர் டிரான்ஸ்ஃபர்கள் போன்ற வழக்கத்திற்கு மாறான அல்லது கண்டுபிடிக்க முடியாத முறைகள் மூலம் பணம் செலுத்துமாறு மோசடி செய்பவர்கள் வற்புறுத்தினால், அது பெரும்பாலும் மோசடியாகவே இருக்கும். நேர்மையான நிறுவனங்கள் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான கட்டண முறைகளைப் பயன்படுத்துகின்றன.
- அதிகாரப்பூர்வ இணையதளம் இல்லை: அதிகாரப்பூர்வ இணையதளம் இல்லாதது ஆபத்து எச்சரிக்கை. நிறுவப்பட்ட லாட்டரிகள் பொதுவாக தகவல்களை வழங்குவதற்கும் அவற்றின் சட்டபூர்வமான தன்மையை சரிபார்க்கவும் தொழில்முறை ஆன்லைன் இருப்பைக் கொண்டுள்ளன.
- புகார்களைச் சரிபார்க்கவும்: லாட்டரி அமைப்பு தொடர்பான மோசடிகள் அல்லது புகார்களை ஆன்லைனில் தேடுங்கள். மற்றவர்கள் ஏமாற்றப்பட்டால், நீங்களும் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- தேவையற்ற தனிப்பட்ட தகவல்: உங்கள் வங்கி விவரங்கள் அல்லது கிரெடிட் கார்டு எண் போன்ற தேவையற்ற தனிப்பட்ட தகவல்கள் உங்களிடம் கேட்கப்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள். சட்டரீதியான லாட்டரிகளுக்கு பரிசுகளை வழங்க விரிவான தனிப்பட்ட தகவல்கள் தேவையில்லை
நீங்கள் லாட்டரி மோசடியால் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி புகாரளிப்பது:
நீங்கள் ஒரு லாட்டரி மோசடிக்கு ஆளாகியிருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தால், சாத்தியமான இழப்புகளைக் குறைப்பதற்கும் மேலும் இழப்புகளைத் தடுப்பதற்கும் உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியம். பின்வரும் படிகளை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்:
- PhonePe ஆப்: உதவிப் பகுதிக்குச் சென்று, ‘மற்றவை’ என்பதன் கீழ் சிக்கலை எழுப்புங்கள். ‘கணக்கு பாதுகாப்பு & மோசடி செயல்பாடுகளைப் புகாரளித்தல்’ என்பதைத் தேர்ந்தெடுத்து, சம்பவத்தைப் புகாரளிக்க மிகவும் பொருத்தமான விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
- PhonePe வாடிக்கையாளர் சேவை எண்: பிரச்சனையைத் தெரிவிக்க PhonePe வாடிக்கையாளர் சேவையை 80–68727374/022–68727374 என்ற எண்ணில் அழைக்கலாம், பின்னர் வாடிக்கையாளர் சேவை முகவர் ஒரு டிக்கெட்டை உருவாக்கி உங்கள் பிரச்சனைக்கு உதவுவார்.
- வெப்ஃபார்ம் சமர்ப்பிப்பு: PhonePe இன் https://support.phonepe.com/ இணையப் படிவத்தைப் பயன்படுத்தியும் டிக்கெட்டை எழுப்பலாம்
- சோஷியல் மீடியா: PhonePe இன் சோஷியல் மீடியா ஹேண்டில்கள் மூலம் மோசடி சம்பவங்களைப் புகாரளிக்கலாம்
- Twitter — https://twitter.com/PhonePeSupport
- Facebook — https://www.facebook.com/OfficialPhonePe
- குறை: உங்கள் தற்போதைய புகாரின் மீதான குறையைப் புகாரளிக்க, நீங்கள் https://grievance.phonepe.com/ இல் உள்நுழைந்து, முன்பு எழுப்பப்பட்ட டிக்கெட் ஐடியைப் பகிரலாம்.
- சைபர் செல்: கடைசியாக, மோசடி புகார்களை அருகில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகாரளிக்கலாம் அல்லது https://www.cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்யலாம் அல்லது 1930 என்ற சைபர் கிரைம் செல் ஹெல்ப்லைனைத் தொடர்பு கொள்ளலாம்.
முக்கியமான நினைவூட்டல் – PhonePe ஒருபோதும் ரகசிய அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. Phonepe.com டொமைனில் இருந்து அல்லாமல் PhonePe இலிருந்து வந்ததாகக் கூறி அனைத்து மின்னஞ்சல்களையும் புறக்கணிக்கவும், மோசடி இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.