Trust & Safety
QR குறியீடு மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்!
PhonePe Regional|1 min read|12 May, 2021
QR குறியீடு மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்!
பல லட்சம் இந்தியர்களின் வாழ்வை டிஜிட்டல் பேமண்ட்டுகள் சுலபமாக்கி உள்ளன. இருப்பினும், பேமண்ட் மோசடிச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. உங்களுடைய கார்டோ வங்கிக் கணக்கோ இல்லாமலேயே மோசடிக்காரர்களால் உங்களை ஏமாற்ற முடியும். QR குறியீடு என்பது அவ்வாறாக வளர்ந்து வரும் ஒரு மோசடி ஆகும்.
QR குறியீடு மோசடி செயல்படும் விதம்:
WhatsApp அல்லது புகைப்படம் பகிரக்கூடிய வேறு செயலி ஒன்றின் மூலமாக QR குறியீட்டின் படம் ஒன்றை மோசடிக்காரர்கள் அனுப்புவார்கள். அந்தக் குறியீட்டை ஸ்கேன் செய்து தொகையையும் UPI பின்னையும் உள்ளிட்டு இலவச கேஷ் ரிவார்டுகளை உங்கள் வங்கிக் கணக்கில் பெறுங்கள் என்று அந்த மெசேஜில் கேட்டுக்கொள்ளப்படும். இதற்குப் பதிலாக முன்பே தொகை உள்ளிடப்பட்ட QR குறியீடு ஒன்றை அனுப்பி UPI பின்னை மட்டும் உள்ளிடுங்கள் என்று கேட்கும்படியாகவும் மோசடிக்காரர்கள் செயலிகளைப் பயன்படுத்தலாம். அவ்வாறு செய்தவுடன் உங்கள் கணக்கில் இருந்து பணம் டெபிட் செய்யப்படும்.
மோசடி மெசேஜுக்கான ஒரு உதாரணம் இதோ:
நினைவில் கொள்ளுங்கள்: எப்போதுமே PhonePe செயலியில் பணத்தைப் பெற ‘பணம் அனுப்பு’ பட்டனை அழுத்தவோ UPI பின்னை உள்ளிடவோ வேண்டாம். உண்மையில் பணம் அனுப்புகிறவர்களுக்கு உங்கள் மொபைல் எண் மட்டுமே போதும். இப்படிப்பட்ட மெசேஜைப் பெற்றுக்கொண்டால் பதிலளிக்க வேண்டாம். அந்த மொபைல் எண்ணையும் மோசடிக்காரரின் பிற விவரங்களையும் புகார் செய்ய செயலியில் உள்ள PhonePe உதவி மையத்தைத் தொடர்புகொள்ளவும்.
மோசடிக்காரர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்குச் செய்யவேண்டியவை:
PhonePe நிறுவனம் என்றுமே இரகசியத்தன்மையுள்ள அல்லது தனிப்பட்ட விவரங்களைத் தரும்படி கேட்காது. PhonePe பிரதிநிதியைப் போல காட்டிக்கொள்ளும் ஒருவர் அத்தகைய விவரங்களைக் கேட்டாலும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பும்படி அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். எப்போதுமே @phonepe.com என்று முடிகிற முகவரியில் இருந்து வரும் மின்னஞ்சல்களுக்கு மட்டும் பதில் அளியுங்கள்.
- Google, Twitter, FB ஆகியவற்றில் PhonePe வாடிக்கையாளர் உதவி எண்ணைத் தேடாதீர்கள். PhonePe வாடிக்கையாளர் உதவி மையத்தை அடைவதற்கான ஒரே அதிகாரப்பூர்வமான வழி support.phonepe.com வலைதளம் மட்டுமே.
- PhonePe உதவி மையப் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் சரிபார்க்கப்படாத எந்த மொபைல் எண்ணையும் அழைக்கவோ அதிலிருந்து அழைப்பு வந்தால் பதிலளிக்கவோ வேண்டாம்.
- பல்வேறு சமூக ஊடகங்களில் உள்ள எங்களது அதிகாரப்பூர்வக் கணக்குகளில் மட்டும் எங்களைத் தொடர்புகொள்ளவும்.
Twitter ஹேண்டில்கள்: https://twitter.com/PhonePe
https://twitter.com/PhonePeSupport
– Facebook கணக்கு: https://www.facebook.com/OfficialPhonePe/ - உங்கள் கார்டோ கணக்கு விவரங்களோ திருடப்பட்டால் இவற்றைச் செய்யுங்கள்:
– support.phonepe.com வலைதளத்தில் புகார் செய்யவும்
– அருகிலுள்ள சைபர்-செல்லுக்குச் சென்று காவல்துறையில் புகார் ஒன்றைப் பதிவுசெய்யவும்.