Trust & Safety
கேஷ்பேக் மோசடிகளிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள்!
PhonePe Regional|2 min read|26 April, 2021
கேஷ்பேக் பரிசுகளைப் பெற ஒரு இணைப்பைக் கிளிக் செய்யவும் என Phonepe நிறுவனத்திடமிருந்து வருவதாக ஒரு SMS உங்களுக்கு வருகிறது. அந்த இணைப்பு உண்மையா, அதைக் கிளிக் செய்து பரிசுகளை ஏற்பதா என உங்களுக்கு சந்தேகம் எழுகிறது. இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம் என முடிவெடுக்கிறீர்கள். நல்ல முடிவு!
பரிசைப் பெற அந்த இணைப்பைக் கிளிக் செய்து அதில் சொன்னபடி நீங்கள் செய்திருந்தால், அப்பாவிப் பயனர்களை ஏமாற்றக் காத்திருக்கும் நேர்மையற்ற மோசடிக்காரர்களிடம் உங்கள் பணத்தை இழந்திருப்பீர்கள். கேஷ்பேக் பெற உங்கள் UPI PIN எண்ணை உள்ளிடும்படி கேட்கும் எந்த SMS மெசேஜையும் நம்பிவிட வேண்டாம்.
கேஷ்பேக் ஆஃபர்கள் மற்றும் ஸ்கிராட்ச் கார்டுகள் மூலம் பரிசுகளை வெல்லலாம் என மோசடிக்காரர்கள் பயனர்களுக்கு ஆசை காட்டுகிறார்கள். சிலர் பொய்யான ஆஃபர்களைக் கொண்ட போலி இணைப்புகளை அனுப்பலாம். அல்லது போலியான சமூக வலைதளப் பக்கங்களில் கேஷ்பேக் சம்மந்தப்பட்ட பதிவுகளை நீங்கள் பார்க்கலாம். ஆஃபர் நிஜமானது என உங்களை நம்ப வைக்க, அந்த இணைப்புகளும் சமூக வலைதளங்களும் PhonePe செயலியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தையும் லோகோவையும் போலவே இருக்கும்படி சாதுரியமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். PhonePe செயலியில் கேஷ்பேக்கைப் பெற இன்னும் சில படிகளை முடிக்க வேண்டி உங்கள் அறிவிப்பு/ பெல் ஐகானில் தோன்றும் பேமண்ட் இணைப்பைக் கிளிக் செய்யும்படி சில மோசடிக்காரர்கள் உங்களை மொபைலில் அழைத்துச் சொல்லலாம்.
PhonePe கேஷ்பேக் எப்படிச் செயல்படுகிறது?
- PhonePe கேஷ்பேக் உங்கள் வாலட்டிற்கு தானாகவே கிரெடிட் செய்யப்படும்
கேஷ்பேக் கிளைம் செய்யவோ ஏற்றுக்கொள்ளவோ எந்தக் கூடுதல் செயலும் தேவை இல்லை. தொலைபேசி அழைப்புகள் மூலமோ இணைப்புகள் மூலமோ கேஷ்பேக் அல்லது பரிசுகளை PhonePe வழங்குவதில்லை. கேஷ்பேக் தருவதாகக் கூறும் எந்தவொரு URLலும், சமூக வலைதளப் பதிவும், தொலைபேசி அழைப்பும் நம்பகமற்றதே.
- PhonePe செயலியில் கேஷ்பேக் அல்லது பரிசுகளைப் பெற உங்கள் UPI PIN எண்ணை உள்ளிடத் தேவையில்லை
கேஷ்பேக் பெற UPI PIN எண்ணை உள்ளிடும்படி வாடிக்கையாளர்களிடம் கேட்கப்படுவதில்லை. உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து நீங்கள் பணம் அனுப்பும்போது மட்டுமே UPI PIN எண் தேவை. கேஷ்பேக் பெற உங்களிடம் UPI PIN கேட்கப்பட்டால், அந்தப் பரிவர்த்தனையை உடனே ரத்து செய்துவிட்டு எங்களுக்கு support.phonepe.com என்ற இணைப்பில் புகார் அளியுங்கள்.
- உங்கள் PhonePe செயலியின் முகப்புப் பக்கத்தில் உள்ள “அனைத்து ஆஃபர்களையும் காட்டு” என்ற பகுதியில் அனைத்து கேஷ்பேக் மற்றும் பிற ஆஃபர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
உண்மையான PhonePe கேஷ்பேக் ஆஃபர்களைப் பற்றி அறிந்துகொள்ள இந்த பகுதியைப் பார்க்கவும். எந்தப் பரிவர்த்தனையையும் செய்யும் முன், தகுதிவரம்பு மற்றும் விதிமுறைகளைக் கவனமாகப் படிக்கவும்.
மோசடிக்காரர்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான உதவிக்குறிப்புகள்:
தெரிந்த நபர்களிடமிருந்து மட்டுமே பேமண்ட் கோரிக்கையை ஏற்கவும்.
உங்கள் UPI ID தெரிந்த எவரும் உங்களுக்கு பேமண்ட் கோரிக்கையை அனுப்பலாம். தெரியாத நபர்களிடமிருந்து வரும் பேமண்ட் கோரிக்கைகளை நிராகரிக்கவும். உங்கள் தொலைபேசி எண்ணை அறிந்த எவரும் உங்கள் UPI ID மூலம் பணம் கோரலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
“ உங்கள் UPI ID என்னவென்று அறிந்துகொள்ள, உங்கள் PhonePe செயலியில் சுயவிவவரம் பகுதியில் “ என் UPI ID ” என்பதின் கீழ் பார்க்கவும். உங்கள் இயல்புநிலை PhonePe UPI ID yourphonenumber@ybl ஆகும்.”
தெரியாத நபர்களிடமிருந்து வரும் போலி அழைப்புகள்/பேமண்ட் கோரிக்கைகளைப் புறக்கணிக்கவும்
கேஷ்பேக் ஆஃபர்களுடன் உங்களை அணுகும் எவரையும், அவர்கள் தங்களை PhonePe பிரதிநிதி எனக் கூறிக்கொண்டாலும், புறக்கணித்துவிடுங்கள். உங்கள் நண்பர்/ குடும்பத்தினர் எனக் கூறிக்கொண்டு தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், பேமண்ட் பரிவர்த்தனைகளைச் செய்வதற்கு முன் அவர்கள் உங்களுக்கு நன்கு பரிச்சயமானவரா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
கவனம்: UPI PIN, OTP, CVV மற்றும் கார்டு விவரங்கள் போன்ற ரகசியத் தகவல்களை PhonePe அதிகாரிகள் உட்பட எவருடனும் பகிரவேண்டாம்.