PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

சோசியல் மீடியா ஆள்மாறாட்ட மோசடி

PhonePe Regional|1 min read|09 December, 2022

URL copied to clipboard

இன்றைய தேதியில் உலகம் முழுவதும் உள்ள மக்களை இணைக்கும் தளமாகச் சமூக ஊடகம் மாறியுள்ளது. தகவல் மற்றும் செய்திகளின் முக்கிய கருவியாக மாறியுள்ள சமூக ஊடகத்தின் தாக்கம் நமது அன்றாட வாழ்வில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடி என்பது டிஜிட்டல் அடையாளத் திருட்டின் ஒரு வடிவமாகும், மேலும் இது சோஷியல் இன்ஜினியரிங் எனப்படும் மோசடிகளில் தாக்குதல்களில் ஒன்றாகும்.

சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடி எப்படி நடக்கிறது:

  1. மோசடியாளர்கள் திருடப்பட்ட தகவல்களைக் கொண்டு பாதிக்கப்பட்டவரின் பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலி ப்ரொஃபைல்களை உருவாக்குகின்றனர். மோசடி செய்பவர் பாதிக்கப்பட்டவரை நம்ப வைப்பதற்காகச் சில நம்பகமான வணிகப் பெயர்களுடன் ப்ரொஃபைல்களை உருவாக்குவதும் பொதுவாக நடக்கிறது.
  2. குறிப்பிட்ட வாடிக்கையாளர்களைக் குறிவைத்து, போலி அக்கவுண்ட் மூலம் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நண்பர் கோரிக்கை அனுப்புகின்றனர்.
  3. மோசடியாளர்கள் ஒரு அத்தியாவசிய தேவைக்கு அவசியமாக பணம் தேவைப்படுவதாக நம்ப வைப்பதால் அந்தப் பதற்றத்தில் வாடிக்கையாளர்கள் ஏமாந்து பணத்தை அனுப்பிவிடுகிறார்கள்.
  4. சிலநேரங்களில், மோசடியாளர்கள் உங்கள் சொந்த அக்கவுண்ட்டையே ஹேக் செய்து (எடு: Instagram அல்லது Facebook) உங்களைப் பின்தொடர்பவர்கள் பட்டியலில் இருப்பவர்களிடம் பணம் கேட்பார்கள். இதனால், பாதிக்கப்படுபவரும் முறையான அக்கவுண்ட்டில் இருந்து தான் கோரிக்கை வருகிறது என நம்பி பணத்தை இழந்து விடுகின்றனர். இதனால் தங்கள் சமூக ஊடக அக்கவுண்ட்டின் அணுகலை இழப்பதோடு அப்பாவி வாடிக்கையாளர்கள் பலர் பணத்தையும் இழக்கின்றனர்.

சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி:

  1. சந்தேகத்திற்குரிய இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம். அத்தகைய இணைப்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் சமூக ஊடகக் கணக்கிற்கான அணுகலை இழக்க நேரிடும்.
  2. ஏதேனும் ஒரு ப்ரொஃபைலின் தகவல்கள் பார்ப்பதற்குப் போலியாகத் தோன்றும் பட்சத்தில் அந்த அக்கவுண்ட்டுடன் உங்களது சுய விவரங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
  3. உங்கள் கார்டு விவரங்களையோ அல்லது OTPயையோ தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது வேறு எந்த வழியிலும் யாருடனும் பகிர வேண்டாம்.
  4. அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மற்றும் நிறுவனத்தின் இணையதளம் மூலம் தகவலின் நம்பகத்தன்மையை எப்போதும் சரிபார்க்கவும். ஒரு பிஸ்னஸ் சைட்டில் அல்லது அக்கவுண்ட்டில் இருந்து நண்பர் கோரிக்கை வரும் பட்சத்தில் அந்த பிஸ்னஸின் அதிகாரபூர்வ தளத்தில் அதன் பெயர் மற்றும் வலைதள விவரங்களைச் சரிபார்க்கவும். ஏனெனில், போலி பிஸ்னஸ் ப்ரொஃபைலின் பெயர் அல்லது வலைத்தளத்தில் கண்டிப்பாக ஏதேனும் சிறிய மாற்றங்கள் இருக்கும். (www.facebook.com மற்றும் www.facebooks.com)

முக்கிய குறிப்பு — PhonePe ஒருபோதும் உங்களின் ரகசிய அல்லது சொந்தத் தகவல்களைக் கேட்காது. PhonePe சார்பில் அனுப்பப்பட்டது போல எந்த மின்னஞ்சல் வந்தாலும் அவை phonepe.com என்ற டொமைனில் இருந்து வராதபட்சத்தில் அவற்றைப் புறக்கணிக்கவும். மோசடி நடப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.

Keep Reading