PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

SMS ஸ்பூஃபிங் மோசடி குறித்து கவனிக்கப்பட வேண்டிய அறிகுறிகள்

PhonePe Regional|2 min read|24 July, 2023

URL copied to clipboard

நாம் மாறிவரும் காலகட்டத்தில் வாழ்கிறோம். நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் இன்று டிஜிட்டல் மயமாகிவிட்டது. மளிகைப் பொருட்கள் மற்றும் சுடச் சுட உணவு சில நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும், அதே வேளையில் பணம் செலுத்துதல் மற்றும் வங்கிச் சேவை போன்ற பணிகள் சில கிளிக்குகளில் முடிக்கப்படும். இருப்பினும், சௌகரியம் ஒரு சில அபாயங்களைக் கொண்டுவருகிறது. இவற்றில் விழிப்புடன் இருப்பதன் மூலம் மட்டுமே மோசடிகளில் சிக்காமல் இருக்க முடியும்.

எளிய மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மோசடி செய்பவர்கள் கொள்ளையடிக்க தொடர்ந்து புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். அவற்றில் சமீபத்திய டெக்னிக் ‘SMS ஸ்பூஃபிங்’ ஆகும், இது உங்கள் UPI கணக்கை ஹேக் செய்ய அனுமதிக்கிறது.

SMS ஸ்பூஃபிங் என்றால் என்ன?

நீங்கள் எந்த UPI ஆப்-ல் கணக்கை உருவாக்கும் போதும், ​​அது SMS உதவியுடன் அங்கீகரிக்கப்படும். அங்கீகரிக்கப்பிற்குப் பிறகு, உங்கள் சாதனத்துடன் UPI கணக்கு இணைக்கப்படும். இது (டிவைஸ் பைண்டிங்)சாதன பிணைப்பு என்று அழைக்கப்படுகிறது. டிவைஸ் பைண்டிங் மெசேஜை ஃபார்வர்டு செய்ய SMS ஃபார்வர்டிங் ஆப்-களைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவரின் UPI கணக்கை இப்போது மோசடி செய்பவர்கள் கைப்பற்ற முயற்சிக்கின்றனர். அவர்கள் இதைப் பல வழிகளில் செய்கிறார்கள் — சமீபத்தில் கவனிக்கப்பட்ட ஒரு பொதுவான முறை உங்கள் சாதனத்திற்கு (மால்வேர்)தீம்பொருளை அனுப்புவதாகும், இது பிணைப்பு செய்தியை விர்ச்சுவல் மொபைல் எண்ணுக்கு அனுப்புகிறது.

SMS ஸ்பூஃபிங் மோசடி எப்படி நடக்கிறது

  1. மருத்துவமனை, கூரியர், உணவகம் போன்றவற்றின் பெயரில் உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் மோசடி செய்பவர்கள் தீங்கிழைக்கும் கோப்புகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்புகிறார்கள்.
  2. சம்மந்தப்பட்டவர் அத்தகைய தீங்கிழைக்கும் இணைப்பைக் கிளிக் செய்தவுடன், வங்கியின் பதிவு எண்ணுக்கு SMS அனுப்புவதற்காக மால்வேர் அவர்களின் சாதனத்தில் ஹார்ட்கோட் செய்யப்படுகிறது, இது போன்ற சமயங்களில் மோசடி செய்பவர்கள் பயன்படுத்துவது விர்ச்சுவல் மொபைல் எண்ணாகும்.
  3. பின்னர், மோசடி செய்பவர் UPI பதிவு செயல்முறையைத் தொடங்குகிறார். டிவைஸ் பைண்டிங் SMS அனுப்பப்படுகிறது, இது ஒரு தீங்கிழைக்கும் அப்ளிகேஷனால் பதிவைத் தொடங்க வங்கிக்கு அனுப்பப்படுகிறது.
  4. மோசடி செய்பவர் விர்ச்சுவல் எண் மூலம் UPI பதிவை அங்கீகரித்து, பாதிக்கப்பட்டவரின் UPI கணக்கை அவர்களின் ஃபோனுடன் இணைக்கின்றனர்.
  5. பரிவர்த்தனைகளைச் செய்ய, மோசடி செய்பவர் சமூக பொறியியல் தந்திரங்களைப் பயன்படுத்தி ‘MPIN’ ஐப் பிரித்தெடுத்து அங்கீகரிக்கப்படாத UPI பரிவர்த்தனைகளைச் செய்கிறார்.

எனவே, உங்கள் கணக்கையும் பணத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க, சந்தேகத்திற்கிடமான எந்த இணைப்புகளையும் கிளிக் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, PhonePe எந்த பரிவர்த்தனை தோல்வியுமின்றி தினசரி கோடிக்கணக்கான பரிவர்த்தனைகளை செயல்படுத்துகிறது. இது மூன்று அடுக்கு பாதுகாப்பு உள்ளடக்கியது:

  1. உள்நுழைவு கடவுச்சொல்: ஆப் பாதுகாப்பின் முதல் லேயர் உள்நுழைவு கடவுச்சொல் ஆகும்.
  2. PhonePe ஆப் லாக்: PhonePe ஆப்-ஐ பயன்படுத்தத் தொடங்க, உங்கள் கைரேகை ஐடி, முக ஐடி அல்லது நம்பர் லாக்கை பயன்படுத்தி அதைத் திறக்க வேண்டும்.
  3. UPI பின்: PhonePe இல் ஒவ்வொரு கட்டணத்திற்கும், அது ஒரு ரூபாயாக இருந்தாலும் அல்லது ஒரு லட்சம் ரூபாயாக இருந்தாலும், UPI பின் இல்லாமல் பணம் செலுத்த முடியாது.

எனவே, PhonePe அனைத்து பேமெண்ட்டுகளையும் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கிறது.

SMS ஸ்பூஃபிங் மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி

  • சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம், அதனுடன் வரும் தீம்பொருள்(மால்வேர்) உங்கள் தொலைபேசியில் உள்ள ஆப்-களை கட்டுப்படுத்தி கையகப்படுத்தலாம்.
  • கிரெடிட்/டெபிட் கார்டு எண், கார்டு காலாவதி தேதி, CVV, OTP போன்ற ரகசியத் தகவல்களை PhonePe அதிகாரிகள் உட்பட யாருடனும் பகிர வேண்டாம்.
  • கடைசியாக, புகாரளித்து தடுக்கவும். இந்த எண்களைப் புகாரளித்து பிளாக் செய்வது நல்லது.

ஒரு மோசடி செய்பவர் உங்கள் UPI கணக்குப் பதிவைத் தொடங்க முயற்சித்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்

PhonePe ஆப்-ல் நீங்கள் மோசடி செய்பவரால் ஏமாற்றப்பட்டிருந்தால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறைகள் மூலம் உடனடியாக அதைப் புகாரளிக்கவும்:

  1. PhonePe வாடிக்கையாளர் சேவை எண்: சிக்கலைத் தெரிவிக்க நீங்கள் PhonePe வாடிக்கையாளர் சேவையை 80–68727374 / 022–68727374 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம், வாடிக்கையாளர் சேவை முகவர் டிக்கெட்டை எழுப்பி உங்கள் பிரச்சனைக்கு உதவுவார்.
  2. வெப்ஃபார்ம் சமர்ப்பிப்பு: PhonePe இன் வெப்ஃபார்ம், https://support.phonepe.com/ ஐப் பயன்படுத்தி டிக்கெட்டை எழுப்பி “PhonePe இல் UPI கட்டணங்களை நான் பதிவு செய்யவில்லை” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. சமூக ஊடகங்கள்: PhonePe இன் சமூக ஊடகக் ஹேண்டில்கள் மூலம் நீங்கள் மோசடி சம்பவங்களைப் புகாரளிக்கலாம்.
  4. குறை: ஏற்கனவே உள்ள புகாரின் மீதான குறையைப் புகாரளிக்க, நீங்கள் https://grievance.phonepe.com/ இல் உள்நுழைந்து, முன்பு எழுப்பப்பட்ட டிக்கெட் ஐடியைப் பகிரலாம்.
  5. சைபர் செல்: கடைசியாக, மோசடி புகார்களை அருகில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகாரளிக்கலாம் அல்லது https://www.cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்யலாம் அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.

முக்கியமான நினைவூட்டல் — PhonePe ஒருபோதும் ரகசிய அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. PhonePe.com டொமைனில் இருந்து வரவில்லை எனில், PhonePe இலிருந்து வந்ததாகக் கூறும் அனைத்து மின்னஞ்சல்களையும் புறக்கணிக்கவும். மோசடி நடப்பதாகச் சந்தேகம் எழுந்தால், உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்.

Keep Reading