Trust & Safety
Twitter தளத்தில் மோசடியாளர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்ளுங்கள் — போலி உதவி எண்களிடம் ஏமாறாமல் இருங்கள்!
PhonePe Regional|1 min read|19 April, 2021
Twitter ஒரு சமூக ஊடகமாக வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ளவும் அவர்களுடைய சிக்கல்களுக்குத் தீர்வுகாணவும் சிறப்பான வழிகளில் ஒன்றாக இருக்கிறது. உடனடியாக பதில்கள் கிடைப்பதோடு அங்கே பதிவுசெய்யப்படும் தகவல்கள் மீது பயனர்களின் நம்பகத்தன்மையும் அதிகமாக உள்ளது.
இருப்பினும் சமீபகாலமாகப் போலி Twitter கணக்குகளின் மூலம் மோசடி செய்வது அதிகரித்து வருகின்றது.
Twitter மோசடிகள் செயல்படும் விதம்:
– PhonePe வாடிக்கையாளர்கள் https://twitter.com/PhonePe என்கிற அசல் ஹேண்டிலைப் பயன்படுத்தி சலுகைகளை ரிடீம் செய்தல், கேஷ்பேக் பெறுதல், பணப் பரிமாற்றம் செய்தல், ரீஃபண்டுகளைத் தொடங்கிவைத்தல், வங்கிக் கணக்கை PhonePe செயலியுடன் இணைத்தல் மற்றும் பலவற்றில் உள்ள சிக்கல்கள் குறித்து டிவீட் செய்கின்றனர்.
– டிவீட் செய்யப்படும் தகவல்களை மோசடியாளர்கள் கண்காணித்து உடனடியாக பதில் அளிக்கின்றனர். PhonePe உதவி எண்கள் என்று சொல்லி போலியான வாடிக்கையாளர் உதவி எண்களை டிவீட் செய்து பயனரின் கணக்கில் இருந்து பணத்தைத் திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
– இதை அறியாத வாடிக்கையாளர்கள் மோசடிக்காரர்கள் டிவீட் செய்த போலி உதவி எண்ணை அழைத்து கேஷ்பேக் கிடைக்கவில்லை என்றோ தோல்வியடைந்த பணப் பரிமாற்றத்திற்கான ரீஃபண்ட் கிடைக்கவில்லை என்றோ புகார் செய்கிறார்கள்.
– இந்தச் சிக்கலுக்குத் தீர்வு அளிக்க வேண்டும் என்றால் கார்டு விவரங்களையும் மொபைலில் பெறப்படும் OTP-ஐயும் போன்ற பாதுகாப்பான தகவல்களைத் தரும்படி மோசடியாளர்கள் கேட்கின்றனர்.
– வாடிக்கையாளரை நம்பவைக்க தங்கள் எண்ணில் இருந்து வாடிக்கையாளரின் எண்ணிற்கு ‘கலெக்சன் அழைப்பு’ ஒன்றை ஏற்படுத்தி ஒரு கேஷ்பேக்கைத் தருவதற்கான வாக்குறுதியையும் மோசடியாளர்கள் அளிக்கலாம்.
– கார்டு விவரங்கள், OTP ஆகியவற்றைப் பகிர்ந்ததும் அல்லது கலெக்சன் அழைப்பை ஏற்றுக்கொண்டதும் வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து மோசடியாளர்களின் கணக்கிற்கு பணம் மாறுகிறது.
முக்கியமான நினைவூட்டல்- PhonePe நிறுவனம் எப்போதுமே இரகசியத்தன்மையுள்ள அல்லது தனிப்பட்ட விவரங்களைத் தரும்படி கேட்காது. PhonePe பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் அத்தகைய விவரங்களைக் கேட்டாலும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பும்படி அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். எப்போதுமே @phonepe.com என்று முடிகிற முகவரியில் இருந்து வரும் மின்னஞ்சல்களுக்கு மட்டும் பதில் அளியுங்கள்.
பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறை:
பல்வேறு சமூக ஊடகங்களில் உள்ள எங்களது அதிகாரப்பூர்வக் கணக்குகளில் மட்டும் எங்களைத் தொடர்புகொள்ளவும்.
● Twitter ஹேண்டில்கள்: https://twitter.com/PhonePe
● https://twitter.com/PhonePeSupport
● Facebook கணக்கு: https://www.facebook.com/OfficialPhonePe/
● வலைதளம்: support.phonepe.com
உங்கள் கார்டு அல்லது கணக்கு விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால்:
- [email protected] மின்னஞ்சலுக்குப் புகார் அளிக்கவும்
- அருகில் உள்ள சைபர் க்ரைம் மையத்திற்குச் சென்று காவல் துறையிடம் புகார் அளிக்கவும்