Trust & Safety
உங்கள் அடையாளத்தைப் பாதுகாத்து ஆதார் கார்டு மோசடியைத் தடுத்திடுங்கள்
PhonePe Regional|2 min read|19 August, 2024
உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அமைப்பான ஆதார், பயோமெட்ரிக்ஸ் மற்றும் மக்கள்தொகை தகவல்களின் அடிப்படையில் இந்தியர்கள் தானாக முன்வந்து ஒரு தனித்துவமான 12 இலக்க அடையாள எண்ணைப் பெற அனுமதிக்கிறது.
வங்கிக் கணக்கைத் தொடங்குதல், பாஸ்போர்ட் பெறுதல், மானியங்களைப் பெறுதல், அரசு திட்டங்களுக்கு விண்ணப்பித்தல் போன்ற சேவைகளுக்கு ஒருவரை எளிதாக அங்கீகரிக்க ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் மொபைல் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது சில்லறை முதலீட்டாளர்களுக்கான நிதி நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள வடிவமாகும்.
ஆதாரின் குறிப்பிடத்தக்க மிகப் பயனுள்ள அம்சங்களில் ஒன்று OTP சரிபார்த்தல் ஆகும். இது தனிநபர் எந்த இடத்தில் இருந்தாலும் தங்களை எளிதாக இதன் வழியாக அங்கீகரிக்க இது அனுமதிக்கிறது.
சைபர் கிரைம் பரவலாகிவிட்ட தற்காலத்தில், தனிநபர்களின் தரவு பாதுகாக்க வேண்டும் என்ற அறிதல் இல்லாததாலும் எளிதாக்கப்பட்டுள்ள செயல்முறைகளாலும் அவர்களின் தரவு தொடர்பான தகவல்களைக் கவனக் குறைவாக வெளியிட்டுவிடுவதற்கு வாய்ப்பாக அமைகிறது.
இந்த வலைப்பதிவில், மோசடியாளர்கள் பணம் சம்பாதிக்கவோ அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவோ ஆதார் எண்கள் மற்றும் வங்கி கணக்குகளுக்கு இடையிலான இணைப்பை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை விரிவாக பார்ப்போம்.
ஆதார் பயன்படுத்தி பொதுவாக மேற்கொள்ளப்படும் UPI மோசடி உத்திகள்
- ஃபிஷிங் தாக்குதல்கள்: ஃபிஷிங் என்பது ஒரு மோசடி முறையாகும், இந்த முறையில் மோசடி செய்பவர்கள் ஒரு வங்கி அல்லது பேமண்ட் ஆப்பின் அதிகாரிகளாக நடித்து அப்பாவி நபர்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் வாயிலாகவே சேகரித்துவிடுகிறார்கள். ஆதார் இணைக்கப்பட்ட மோசடிகளில், பயனர்கள் தங்கள் ஆதார் விவரங்கள் அல்லது UPI பின்னை மாற்றக் கோரி மோசடி செய்பவர்கள் மெசேஜ்கள் அல்லது மின்னஞ்சல்களை அனுப்புவார்கள். இத்தகைய சூழல்களில், அந்த மெசேஜ்களில் பாதுகாப்பான தகவல்களை சேகரிக்கும் நோக்கில் போலியான இணைப்பு வழங்கப்பட்டிருக்கும்.
- விஷிங் அழைப்புகள்: விஷிங் என்பது ஃபிஷிங் போன்ற மற்றொரு மோசடி நடைமுறையாகும், இதில் மோசடி செய்பவர்கள் தனிநபர்களை அழைத்து, வங்கி அல்லது UIDAI சேர்ந்தவர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு கணக்கு சரிபார்ப்பு அல்லது சிக்கலைத் தீர்ப்பதற்கானது என்று ஏதோதோ பொய் காரணங்களைக் கூறி ஆதார் எண்கள், UPI பின்கள் அல்லது OTPகள் ஆகிய விவரங்களைக் கேட்பார்கள்.
- சிம் ஸ்வாப் மோசடி: ஸ்கேமர்கள் பாதிக்கப்பட்டவரின் தொலைபேசி எண்ணின் நகல் சிம் கார்டைப் பெற்று UPI பரிவர்த்தனைகளுக்கு அனுப்பப்பட்ட OTPகளை இடைமறித்து, இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கான அணுகலைப் பெறுவார்கள்.
- போலி ஆப்கள் மற்றும் இணையதளங்கள்: மோசடி செய்பவர்கள் ஆதார் மற்றும் வங்கி விவரங்களைச் சேகரிக்க முறையான UPI பேமண்ட் சேவைகளைப் போன்றே போலியான ஆப்கள் அல்லது இணையதளங்களை உருவாக்குவார்கள்.
ஆதார் மோசடியிலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துகொள்வதுஎப்படி?
- தனிப்பட்ட தகவல்களைப் பகிராதிருத்தல்: உங்கள் ஆதார் எண், UPI பின், OTP அல்லது வங்கி விவரங்களை தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது SIM மூலம் எவருடனும் பகிர கூடாது.
- நம்பகத்தன்மையை சரிபார்த்தல்: உங்கள் வங்கி அல்லது பேமண்ட் சேவை வழங்குநரிடமிருந்து வந்ததாகக் கூறப்படும் எந்தவொரு தகவலின் நம்பகத்தன்மையையும் எப்போதும் சரிபாருங்கள். அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் பாருங்கள் அல்லது நேரடியாக உதவி மைய எண்ணிற்கு தொடர்புகொள்ளுங்கள்.
- உங்கள் மொபைல் எண்ணைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்: உங்கள் ஆதார் மற்றும் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். SIM ஸ்வாப் கோரிக்கைகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் மற்றும் சிம் கார்டுகள் தொலைந்துவிட்டால் உடனடியாக புகாரளியுங்கள்.
- நம்பகமான ஆப்களைப் பயன்படுத்துதல்: Indus ஆப்ஸ்டோர், Google பிளே ஸ்டோர் அல்லது Apple ஆப் ஸ்டோர் போன்ற சரிபார்க்கப்பட்ட சோர்ஸ்களிலிருந்து அதிகாரப்பூர்வ மற்றும் நம்பகமான UPI ஆப்களை மட்டும் பயன்படுத்துங்கள்.
- பரிவர்த்தனைகளை கண்காணித்தல்: ஏதேனும் அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா எனத் தெரிந்துகொள்ள உங்கள் வங்கி அறிக்கைகள் மற்றும் இதுவரையிலான UPI பரிவர்த்தனைகளை அடிக்கடி சரிபாருங்கள். எந்தவொரு சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளையும் உடனடியாக புகாரளியுங்கள்.
- விழிப்பூட்டல்களை இயக்குதல்: உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள எந்தவொரு செயல்பாட்டையும் பற்றி தெரிந்து கொள்ள SIM அல்லது மின்னஞ்சல் மூலம் பரிவர்த்தனை விழிப்பூட்டல்களை அமைத்திடுங்கள்.
ஆதார் ஆதார் இணைக்கப்பட்ட UPI மோசடிகளை எப்படி புகாரளிப்பது?
ஆதார் மற்றும் UPI பேமண்ட்டுகள் தொடர்பாக ஏதேனும் மோசடி செயல்பாடுகள் இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால்:
- உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளுதல்: உங்கள் கணக்கை முடக்கவும் மேலும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைத் தடுக்கவும் உடனடியாக உங்கள் வங்கிக்குத் தெரியப்படுத்துங்கள்.
- UIDAIக்கு புகாரளித்தல்: உங்கள் ஆதார் எண்ணை தவறாகப் பயன்படுத்துவது குறித்து UIDAI-க்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது உதவி மையம் மூலம் அவர்களை அணுகலாம்.
- புகார் அளித்தல்: இந்த மோசடி குறித்து உள்ளூர் காவல்துறை மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகளுக்கு புகாரளியுங்கள். தேசிய சைபர் குற்ற அறிக்கை இணைய முகப்பில் நீங்கள் புகாரளிக்கலாம்.
நீங்கள் ஆதார் கார்டு மோசடியால் பாதிக்கப்பட்டிருந்தால் PhonePe வழியாக சிக்கல் என எழுப்புவது எப்படி?
PhonePe மூலம் ஒரு மோசடி செய்பவரால் நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால், பின்வரும் வழிகளில் உடனடியாக சிக்கலை எழுப்பலாம்:
- PhonePe ஆப்: உதவிப் பகுதிக்குச் சென்று, “பரிவர்த்தனையில் சிக்கல் உள்ளது” விருப்பத்தின் கீழ் சிக்கலை எழுப்பவும்.
- PhonePe வாடிக்கையாளர் சேவை எண்: நீங்கள் PhonePe வாடிக்கையாளர் சேவையை 80–68727374 / 022–68727374 என்ற எண்ணில் தொடர்புகொண்டு ஒரு சிக்கலைத் தெரிவிக்கலாம், அதற்குபின் வாடிக்கையாளர் சேவை முகவர் டிக்கெட்டை எழுப்பி உங்கள் பிரச்சனைக்கு உதவுவார்.
- வெப்ஃபார்ம் சமர்ப்பிப்பு: PhonePe இன் வெப்ஃபார்ம், https://support.phonepe.com/ ஐப் பயன்படுத்தி டிக்கெட்டையும் எழுப்பலாம்.
- சோஷியல் மீடியா: PhonePeஇன் சோஷியல் மீடியா ஹேண்டில்கள் மூலம் நீங்கள் மோசடி சம்பவங்களைப் புகாரளிக்கலாம்
Twitter — https://twitter.com/PhonePeSupport
Facebook — https://www.facebook.com/OfficialPhonePe
- குறைதீர்ப்பு: ஏற்கனவே உள்ள புகாரின் மீதான குறையைப் புகாரளிக்க, நீங்கள் https://grievance.phonepe.com/ இல் உள்நுழைந்து, முன்பு எழுப்பப்பட்ட டிக்கெட் ஐடியைப் பகிரலாம்.
- சைபர் செல்: கடைசியாக, மோசடி புகார்களை அருகில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகாரளிக்கலாம் அல்லது https://www.cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்யலாம் அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.