Trust & Safety
டாப்-அப் மோசடிகளிடம் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
PhonePe Regional|1 min read|07 May, 2021
டாப்-அப் மோசடிகளிடம் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
உங்கள் வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி, இ-காமர்ஸ் தளம் ஆகியவற்றின் பிரதிநிதி என்றும் சில சமயங்களில் ஏதேனும் லாட்டரி திட்டத்தின் பிரதிநிதி என்றும் உங்களைத் தொடர்புகொள்வார்கள். சில விவரங்களைச் சேகரித்த பின்னர், உங்கள் 16 இலக்க கார்டு எண்ணையும் அதன் சி.வி.வி (CVV) எண்ணையும் பகிரும்படி கேட்பார்கள். நீங்களும் அவர்களை நம்பி அந்த விவரங்களை வழங்கிவிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அடுத்து உங்கள் மொபைலில் எஸ்.எம்.எஸ் மூலம் குறியீடு ஒன்றைப் பெறுவீர்கள். அந்தப் பிரதிநிதி மீண்டும் உங்களை அழைத்து, சரிபார்ப்பு நோக்கங்களுக்காக அந்தக் குறியீட்டைப் பகிரும்படி கேட்பார்கள். அதை நீங்கள் பகிர்ந்ததும், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து அந்த மோசடியாளரின் வங்கிக் கணக்கிற்குப் பணம் சென்றுவிடும். அதற்குப் பிறகுதான், நீங்கள் எமாற்றப்பட்டுள்ளீர்கள் என்பதையே உணர்வீர்கள்.
முக்கியக் குறிப்பு — ரகசியமான அல்லது தனிப்பட்ட விவரங்களை PhonePe ஒருபோதும் கேட்பதில்லை. Phonepe.com எனும் டொமைன் இல்லாமல் வேறு டொமைனிலிருந்து வரும் மின்னஞ்சல்களைப் புறக்கணிக்கவும். ஏதேனும் மோசடியாக இருக்கும் என நீங்கள் கருதினால், உடனடியாகச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.
என்ன நடந்தது?
- உங்களை அழைத்த பிரதிநிதி மோசடியானவர். நீங்கள் வழங்கிய விவரங்களின் மூலம் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தனது வாலட்டிற்குப் பணம் டாப்-அப் செய்வதைச் செயல்படுத்தினார்.
- எனினும், அந்தப் பேமண்ட்டை அங்கீகரிக்க தனக்கு OTP தேவைப்பட்டது. அதையும நீங்கள் பகிர்ந்துவிட்டதால், இன்னும் எளிதாகிவிட்டது.
- இதன் மூலம், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மோசடியாளரின் வாலட்டிற்குப் பணம் பரிமாற்றப்பட்டது. மோசடியாளர் தனது வாலட்டிலிருந்து அந்தத் தொகையைப் வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிவிட்டார்.
- உங்கள் பணத்தை வெவ்வேறு கணக்குகளுக்கு மாற்றியதன் மூலம், அந்தத் தொகையை மீட்பது மேலும் கடினமாகிவிட்டது.
நீங்கள் பாதுகாப்பாக இருக்க பின்பற்ற வேண்டியவை:
- உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை (கார்டு எண், காலாவதித் தேதி, பின்) யாருடனும் பகிர வேண்டாம்.
- எஸ்.எம்.எஸ் அல்லது பிற வழிகளில் நீங்கள் பெறும் OTP (ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல்) அல்லது பிற குறியீடுகளை ஒருபோதும் பகிர வேண்டாம்.
- தெரியாத எண்ணிலிருந்து அழைத்து, உங்கள் வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி, உங்கள் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டால், அவர்களுக்குப் பதிலளிக்காமல் அந்த அழைப்பைத் துண்டிக்கவும்.
- தொலைபேசி மூலம் கொடுக்கப்படும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டாம். ஏதேனும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியிருந்தால், அவற்றை மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு கேட்கவும்.
- மின்னஞ்சலை அனுப்பியவரின் டொமைனைச் சரிபார்க்கவும். அது [XYZ]@gmail.com அல்லது ஏதேனும் வேறு ஏதேனும் மின்னஞ்சல் வழங்குநரின் (Yahoo, rediff போன்றவை) டொமைனில் இருந்தால், அந்த மின்னஞ்சலைப் புறக்கணிக்கவும். எப்போதும் நீங்கள் பெறும் மின்னஞ்சலின் டொமைனும் வங்கியின் உண்மையான டொமைனும் ஒத்துப்போகின்றனவா எனப் பார்க்கவும். அனைத்து வங்கிகளின் மின்னஞ்சல்களும் பாதுகாப்பான https டொமைனிலிருந்து மட்டுமே அனுப்பப்படும்.