Trust & Safety
போலீஸ் கால்? எச்சரிக்கையாக இருங்கள்! டிஜிட்டல் கைது மோசடியை எவ்வாறு அடையாளம் காண்பது என்று பார்க்கலாம்
PhonePe Regional|3 min read|05 December, 2024
சைபர் கிரைம் மோசடி செய்பவர்களின் முக்கிய ஆயுதம் தாங்கள் ஏமாற்றுபவர்களிடம் பயத்தை விதைப்பது தான். சமீப காலத்தில் அப்பாவி மக்களை ஏமாற்ற போலீஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகள் போன்ற போன்ற சட்ட அமலாக்க அதிகாரிகள் மீது இருக்கும் ஒருவித பயத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவது நடந்து வருகிறது. “டிஜிட்டல் அரெஸ்ட்” மோசடி என்று அழைக்கப்படும் இந்த முறையில், சட்ட சிக்கல்கள் குறித்த மக்களின் பயத்தோடு விளையாடுகிறது மற்றும் எச்சரிக்கை அறிகுறிகளை கவனிக்காத போது, மோசடி செய்பவர்களை நம்ப வைத்து மக்களை மோசடிக்கு இரையாக்குவதாகும்.
இந்த வலைப்பதிவில், இந்த மோசடியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும், இது எவ்வாறு நடக்கிறது மற்றும் இதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதைப் பற்றிக் காண்போம்.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி என்றால் என்ன?
டிஜிட்டல் கைது மோசடி என்பது ஒரு வகையான ஆள்மாறாட்ட மோசடி ஆகும், இதில் மோசடி செய்பவர்கள் மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் அல்லது தொலைபேசி மூலம் செயல்படும் சட்ட அமலாக்க அல்லது சட்ட அதிகாரிகளாக நடிக்கின்றனர். பொதுவாக ஆன்லைன் குற்றங்கள் அல்லது சைபர் குற்றங்களுக்காக உங்கள் கைதுக்கு வாரண்ட் இருப்பதாக அல்லது நீங்கள் விசாரணையில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமெனில், உங்களிடம் உடனடியாக பணம் அல்லது தனிப்பட்ட தகவலைக் கோருவார்கள், நீங்கள் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என்று பயமுறுத்துவார்கள்.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி எப்படி நடக்கிறது?
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியின் குறிக்கோள், உங்களை பயமுறுத்தி உங்களிடம் பணம் வாங்க அல்லது முக்கியமான தகவலை கொடுக்க வைப்பார்கள். இந்த மோசடி எப்படி படிப்படியாக நடக்கும் என்பது பற்றி கீழே காணலாம்:
- ஆரம்ப தொடர்பு: நீங்கள் முதலில் அரசாங்கம் அல்லது சட்ட அமலாக்க துறையிடமிருந்து வருவது போன்ற அழைப்பு, மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தியைப் பெறுவீர்கள். அச்செய்தியில் போலி அரசாங்க முத்திரைகள் அல்லது லோகோக்கள் இருக்கலாம் மற்றும் முறையான ஃபோன் எண்ணிலிருந்து வந்தது போலவே இருக்கும்.
- டெக்ஸ்ட் மெசேஜ்கள் (SMS): நீங்கள் உடனடியாக கவனிக்க வேண்டிய சட்டச் சிக்கல்கள் இருப்பதாகக் கூறும் மெசேஜ்கள்.
- தொலைபேசி அழைப்புகள்: ஆட்டோமேட்டட் அழைப்புகள் அல்லது நேரடியாக அழைப்பவர்கள் தங்களை போலீஸ் அதிகாரிகளாகவோ அல்லது சட்டப் பிரதிநிதிகளாகவோ காட்டிக்கொண்டு பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளக் கூடும்.
- சமூக ஊடகம் & மெசேஜிங் ஆப்கள்: மோசடி செய்பவர்கள் மக்களை தொடர்பு கொள்ள ஃபேஸ்புக், வாட்ஸ்அப் அல்லது பிற மெசேஜிங் சேவைகள் போன்ற பிளாட்பார்ம்களையும் பயன்படுத்தலாம்.
- வீடியோ கால்கள்: மோசடி செய்பவர்கள் சட்ட அமலாக்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து, அவர்கள் சீருடை அணிந்தபடி வீடியோ கால் நடத்துகின்றனர். பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களை பயமுறுத்துவதற்கும், நீங்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறி நீங்கள் கைது செய்யப்படுவதை தவிர்க்க உடனடியாக பணம் அல்லது முக்கியமான தகவல்களைக் கேட்பதற்கும் அவர்கள் இந்த யுக்தியைப் பயன்படுத்துகின்றனர்.
- குற்றச்சாட்டு: “சந்தேகத்திற்கிடமான இணைய செயல்பாடு” அல்லது “மோசடியான பரிவர்த்தனைகள்” போன்ற, தெளிவில்லாத ஆனால் பயமுறுத்தும், கடுமையான குற்றத்திற்காக நீங்கள் விசாரணையில் இருப்பதாக மோசடி செய்பவர் கூறுகிறார். அவர்கள் பொய்யான வழக்கு எண்ணை மேற்கோள் காட்டலாம் அல்லது உங்களை நம்ப வைப்பதற்காக சட்ட ரீதியான வாசகங்களையும் பயன்படுத்தலாம்.
- உடனடி நடவடிக்கை: கைது செய்வதைத் தவிர்க்க, அபராதம் செலுத்துவதன் மூலமோ அல்லது தனிப்பட்ட தகவலை வழங்குவதன் மூலமோ நீங்கள் விரைவாகச் செயல்பட வேண்டும் என்று கூறப்படுவீர்கள். கிரிப்டோகரன்சி, கிஃப்ட் கார்டுகள் அல்லது வயர் டிரான்ஸ்ஃபர் மூலம் பணம் செலுத்தும்படி அவர்கள் கேட்கலாம், ஏனெனில் இந்த முறைகளை ட்ரேஸ் செய்து ரிவர்ஸ் செய்வது கடினம்.
- மேற்கொண்டு நடவடிக்கை குறித்த அச்சுறுத்தல்கள்: அழைப்பின் உண்மைத்தன்மை குறித்து நீங்கள் கேள்வி கேட்டால் அல்லது அதற்கு இணங்கத் தயங்கினால், மோசடி செய்பவர் அடிக்கடி ஆக்ரோஷமாகி, மேற்கொண்டு சட்ட நடவடிக்கை, அபராதம் அல்லது உடனடி கைது ஆகியவை செய்யப்படும் என அச்சுறுத்துவார்.
நீங்கள் டார்கெட் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் நீங்கள் டார்கெட் செய்யப்படுகிறீர்கள் என்று நீங்கள் சந்தேகித்தால், உங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்தப் படிகளைப் பின்பற்றவும்:
- உடனடியாக பதிலளிக்க வேண்டாம்: நிலைமையைப் பற்றி சிறிது நேரம் யோசியுங்கள் மற்றும் உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள். மோசடி செய்பவர்கள் தங்கள் டார்கெட்டை ஏமாற்ற பயத்தை விதைப்பதையே நம்பியுள்ளனர்.
- தொடர்பைச் சரிபார்க்கவும்: அந்த காண்டாக்ட் முறையானதா என்பதை உறுதிப்படுத்த, அதிகாரப்பூர்வ சேனல்கள் மூலம் நேரடியாகக் கூறப்படும் ஏஜென்சியைத் தொடர்பு கொள்ளவும் (ஸ்கேமர் வழங்கிய எண் மூலம் அல்ல).
- சம்பவத்தைப் பற்றி புகாரளிக்கவும்: நீங்கள் சந்தேகத்திற்கிடமான மெசேஜைப் பெற்றால், உள்ளூர் அதிகாரிகள் அல்லது நுகர்வோர் பாதுகாப்பு நிறுவனங்களிடம் அதைப் பற்றி புகாரளிக்கவும். புகாரளிப்பது இந்த ஏஜென்சிகளுக்கு மோசடிகளைக் கண்காணிக்கவும் மற்றவர்களை எச்சரிக்கவும் உதவுகிறது.
- உங்கள் தகவலைப் பாதுகாக்கவும்: நீங்கள் கவனக்குறைவாக தனிப்பட்ட தகவலைப் பகிர்ந்திருந்தால், பாஸ்வேர்டுகளை மாற்றுவது மற்றும் பைனான்ஷியல் தகவல் பகிரப்பட்டிருந்தால் உங்கள் வங்கியை எச்சரிப்பது போன்ற உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கவும்.
- செக்யூரிட்டி சாஃப்ட்வேரைப் பயன்படுத்துங்கள்: ஃபிஷிங் முயற்சிகள் மற்றும் உங்கள் தகவலுக்கான அணுகலைப் பெற ஸ்கேமர்கள் பயன்படுத்தக்கூடிய தீம்பொருளிலிருந்து பாதுகாக்க, உங்கள் சாதனங்களில் அப்டேட்டட் செக்யூரிட்டி சாஃப்ட்வேர் இருப்பதை உறுதிசெய்யவும்.
- டூ-ஃபேக்டர் அங்கீகாரம் (2FA): ஸ்கேமர்கள் உங்கள் அக்கவுண்டுகளை அணுக முயற்சித்தால் ஒரு கூடுதல் பாதுகாப்பு அடுக்கைச் சேர்க்க உங்கள் அக்கவுண்டுகளில் 2FA ஐ இயக்கவும்.
- உங்களுக்கும் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு உண்டாக்கவும்: பொதுவான மோசடி தந்திரங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள் மற்றும் இது போன்ற தகவல்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து அவர்களையும் பாதுகாக்கவும்.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி போன்ற மோசடிகள் அச்சத்தையும் அவசரத்தையும் பயன்படுத்திக் கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் அறிகுறிகளைப் பற்றி அறிந்திருப்பதன் மூலமும், அழுத்தத்தின் கீழ் அமைதியாக இருப்பதன் மூலமும், நீங்கள் மோசடிக்கு பலியாவதைத் தவிர்க்கலாம் மற்றும் மற்றவர்கள் அதே வலையில் விழுவதையும் தடுக்கலாம்.
நீங்கள் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியால் பாதிக்கப்பட்டிருந்தால், ஃபோன்பே இல் சிக்கலைப் பற்றி எவ்வாறு புகாரளிப்பது
ஃபோன்பே மூலம் மோசடி செய்பவரால் நீங்கள் ஏமாற்றப்பட்டால், உடனடியாக பின்வரும் வழிகளில் சிக்கலைப் பற்றி புகாரளிக்கலாம்:
- ஃபோன்பே ஆப்: உதவிப் பகுதிக்குச் சென்று, “பரிவர்த்தனையில் சிக்கல் உள்ளது” விருப்பத்தின் கீழ் சிக்கலைப் பற்றி புகாரளிக்கவும்.
- ஃபோன்பே வாடிக்கையாளர் பராமரிப்பு எண்: நீங்கள் ஃபோன்பே வாடிக்கையாளர் சேவையை 80–68727374 / 022–68727374 என்ற எண்ணில் தொடர்புகொண்டு சிக்கலைப் பற்றி தெரிவிக்கலாம், அதில் வாடிக்கையாளர் சேவை ஏஜென்ட் டிக்கெட்டை எடுத்து உங்கள் பிரச்சினைக்கு உதவுவார்.
- வெப்ஃபார்ம் சமர்ப்பிப்பு: ஃபோன்பேயின் வெப்ஃபார்மைப் பயன்படுத்தியும் நீங்கள் டிக்கெட்டை எழுப்பலாம், https://support.phonepe.com/
- சமூக ஊடகங்கள்: ஃபோன்பேயின் சமூக ஊடகக் அக்கவுண்டுகள் மூலம் மோசடி சம்பவங்களைப் பற்றி புகாரளிக்கலாம்
ட்விட்டர் – https://twitter.com/PhonePeSupport
ஃபேஸ்புக் – https://www.facebook.com/OfficialPhonePe
- குறை தீர்ப்பு: ஏற்கனவே உள்ள புகாரின் மீதான குறையைப் பற்றி புகாரளிக்க, நீங்கள் https://grievance.phonepe.com/ இல் உள்நுழைந்து, முன்பு எழுப்பப்பட்ட டிக்கெட் ஐடியைப் பகிரலாம்.
- சைபர் செல்: கடைசியாக, மோசடி புகார்களை அருகிலுள்ள சைபர் கிரைம் பிரிவில் புகாரளிக்கலாம் அல்லது https://www.cybercrime.gov.in/ இல் ஆன்லைனில் புகாரைப் பதிவு செய்யலாம் அல்லது 1930 என்ற சைபர் கிரைம் செல் ஹெல்ப்லைனைத் தொடர்புகொள்ளலாம்.
- DOT :டிஜிட்டல் குற்றம் நிகழவில்லை, ஆனால் நடந்திருக்குமோ என உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், அதைப் பற்றியும் புகாரளிக்கவும். தொலைத்தொடர்புத் துறை, சஞ்சார் சாத்தி போர்ட்டலில் (sancharsaathi.gov.in) சக்சு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் மெசேஜ்கள், அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் கணக்குகள் மோசடியானவை என்று சந்தேகிக்கப்பட்டால் அவற்றைப் பற்றி புகாரளிக்கலாம்.