Trust & Safety
KYC மோசடி: இது என்ன? இதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
PhonePe Regional|2 min read|30 April, 2021
KYC மோசடி: இது என்ன? இதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
KYC ஆவணங்களை விரைவாகச் செயல்முறைப்படுத்தும் முயற்சியில் பல வாடிக்கையாளர்கள் KYC மோசடிக்கு பலியாகின்றனர். இந்த மோசடியினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கதை இதோ:
“KYC செயல்முறையை நிறைவு செய்துவிட்டீர்களா?” என்று கேட்டு குமாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் KYC எவ்வளவு முக்கியமானது என்றும் அதை நிறைவு செய்வதை ஏன் தாமதிக்கக் கூடாது என்றும் கூறினார். சிறிய கட்டணம் ஒன்றைக் கொடுப்பதன் மூலம் தொலைபேசி அழைப்பிலேயே குமாருடைய KYC செயல்முறையை முடித்துத் தருவதாகக் கூறினார்.
பின்னர் KYC செயல்முறையைத் தொடங்குவதற்காக குமாருடைய முழுப்பெயரும் பிற தனிப்பட்ட விவரங்களும் கேட்கப்பட்டன. இப்போது KYC விரைவாகச் செயல்முறைப்படுத்தப்படுகிறது என்று குமார் முழுவதுமாக நம்பிவிட்டார். தொலைவில் இருந்தே இந்தச் செயல்முறையை நிறைவு செய்வதற்காக Anydesk செயலியைப் பதிவிறக்கும்படி மோசடிக்காரர் கேட்டுக்கொண்டார்.
இதன் பின் தொடக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டணத் தொகையை அனுப்பி வைக்கும்படி தொலைபேசியில் அழைத்தவர் கேட்டுக்கொண்டார். குமார் அவ்வாறே செய்தார். விரைவில் அவருக்கு KYC உறுதிப்படுத்தல் கிடைக்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அழைப்பு துண்டிக்கப்பட்ட பின்பு குமார் இரண்டு மெசேஜ்களைப் பார்த்தார். ஒன்று தனது டெபிட் கார்டில் இருந்து பணப் பரிமாற்றம் செய்வதற்கான OTP, மற்றொன்று தனது கணக்கில் இருந்து டெபிட் செய்யப்பட்ட ₹30,000 பற்றிய தகவல்!
இது தான் நடந்தது:
குமாரிடம் மோசடிக்காரர் பதிவிறக்கச் சொல்லிய செயலி ஒரு திரைப்பகிர்வு செயலி ஆகும். இந்தச் செயலி குமாரின் மொபைல் திரையை மோசடிக்காரர் பார்க்க அனுமதித்துள்ளது.
குமார் கட்டணத்தை அனுப்பி வைக்கும்போது அவர் பயன்படுத்திய வங்கிக் கணக்கையும் கார்டு எண்களையும், பின் மற்றும் பாஸ்வேர்ட் விவரங்களையும் மோசடிக்காரர் பார்த்துவிட்டார்.
அந்தப் பணத்தை தன் சொந்த கணக்கிற்கு அனுப்பிக் கொள்ள மோசடிக்காரர் இந்த விவரங்களைப் பயன்படுத்திவிட்டார். பதிவிறக்கப்பட்ட Anydesk செயலியின் மூலம் குமாருடைய மொபைல் திரையைப் பார்த்து தேவைப்பட்ட OTP-ஐயும் பெற்றுக்கொண்டார்.
நினைவில் கொள்ளுங்கள்: தொலைபேசி வழியாகவோ மூன்றாம் தரப்பு செயலிகள் மூலமாகவோ KYC செய்ய இயலாது. மோசடிக்காரர்கள் உங்களை ஏமாற்ற தற்போதைய KYC அல்லது டிஜிட்டல் வாலட் செல்லாது என்றும் அதை ஆன்லைனில் மீண்டும் இயக்கித் தருவதாகவும் கூறலாம். இதற்கும் வாய்ப்பு இல்லை.
- வங்கிக் கணக்கு, கார்டு அல்லது அத்தகைய விவரங்கள் எதையும் தொலைபேசியில் அழைப்பவர்களிடம் பகிர வேண்டாம்.
- தொலைபேசியில் யாரோ ஒருவர் கேட்டுக்கொள்வதால் Anydesk, TeamViewer போன்ற செயலிகளைப் பதிவிறக்க வேண்டாம். இந்தச் செயலிகள் உங்கள் பாஸ்வேர்டுகள், பின்கள் மற்றும் பிற முக்கிய விவரங்களை மோசடிக்காரர்கள் காண்பதற்கு அனுமதிக்கலாம்.
- உண்மையான PhonePe பிரதிநிதிகள் எப்போதுமே உங்கள் KYC செயல்முறைக்காக தொலைபேசியில் அழைக்கவோ மூன்றாம் தரப்பு செயலிகளைப் பதிவிறக்கச் சொல்லவோ மாட்டார்கள்.
மோசடிக்காரர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்குச் செய்யவேண்டியவை:
PhonePe நிறுவனம் எப்போதுமே இரகசியத்தன்மையுள்ள அல்லது தனிப்பட்ட விவரங்களைத் தரும்படி கேட்காது. PhonePe பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் அத்தகைய விவரங்களைக் கேட்டாலும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பும்படி அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். எப்போதுமே @phonepe.com என்று முடிகிற முகவரியில் இருந்து வரும் மின்னஞ்சல்களுக்கு மட்டும் பதில் அளியுங்கள்.
- Google, Twitter, FB போன்ற வலைதளங்களில் PhonePe வாடிக்கையாளர் உதவி எண்ணைத் தேடாதீர்கள். PhonePe வாடிக்கையாளர் உதவி மையத்தை அடைவதற்கான ஒரே அதிகாரப்பூர்வமான வழி support.phonepe.com வலைதளம் மட்டுமே.
- PhonePe உதவி மையப் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் எந்த மொபைல் எண்ணையும் அழைக்கவோ அதிலிருந்து அழைப்பு வந்தால் பதிலளிக்கவோ வேண்டாம்.
- பல்வேறு சமூக ஊடகங்களில் உள்ள எங்களது அதிகாரப்பூர்வக் கணக்குகளில் மட்டும் எங்களைத் தொடர்புகொள்ளவும்.
Twitter ஹேண்டில்கள்: https://twitter.com/PhonePe
https://twitter.com/PhonePeSupport
– Facebook கணக்கு: https://www.facebook.com/OfficialPhonePe/ - உங்கள் கார்டோ கணக்கு விவரங்களோ திருடப்பட்டால் இவற்றைச் செய்யவும்:
– support.phonepe.com வலைதளத்தில் புகார்செய்யவும்.
– அருகிலுள்ள சைபர்-செல்லுக்குச் சென்று காவல்துறையில் புகார் ஒன்றைப் பதிவுசெய்யவும்.
பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்வது குறித்த வீடியோவைப் பாருங்கள்: https://youtu.be/VbfhRK23BQU