PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

ஃபிஷிங் தாக்குதல்களைக் கண்டறிந்து நிறுத்துவது எப்படி

PhonePe Regional|3 min read|20 March, 2025

URL copied to clipboard

மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் இந்தியர்களைக் குறிவைத்து செய்யப்படும் ஃபிஷிங் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. மொபைல் சாதனங்கள் டிஜிட்டல் சேவைகளுக்கான நமது முதன்மையான வாயிலாக மாறியுள்ள நிலையில், இந்தியா இத்தகைய மோசடித் திட்டங்களுக்கான முக்கிய இலக்காக உருவெடுத்துள்ளது. எனவே உங்கள் அடையாளத்தையும் பணத்தையும் பாதுகாக்க இந்த மோசடிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.

ஃபிஷிங் மற்றும் அதன் வகைகளைப் பார்ப்போம்:

ஃபிஷிங் என்றால் என்ன?

ஃபிஷிங் என்பது ஒரு சமூக பொறியியல் மோசடி முறையாகும், இதில் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்ட தகவல்களை பகிரவோ அல்லது தீங்கிழைக்கும் இணைப்புகளை கிளிக் செய்யவோ செய்து, இதன் மூலம் உங்கள் சாதனத்தில் மால்வேரை பதிவிறக்க வைக்கிறார்கள்.

ஃபிஷர்கள் பொதுவாக உங்கள் வங்கி, சமூக வலைதளம், அல்லது அரசு அமைப்புகளை போன்ற நம்பகமான நிறுவனங்களை போல காட்டும் மோசடி மின்னஞ்சல்களை பயன்படுத்துகிறார்கள். இந்த செய்திகளில் அவசரத் தேவை ஒன்றை உருவாக்கி, ஒரு இணைப்பை கிளிக் செய்யவோ, ஒரு கோப்பை பதிவிறக்கவோ, அல்லது கடவுச்சொற்கள், டெபிட்/கிரெடிட் கார்டு எண்கள், ஆதார் விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களை பகிரவோ தூண்டுகின்றனர்.

ஃபிஷிங் மின்னஞ்சல்களை எவ்வாறு கண்டறிவது

  • பொதுவான உள்ளடக்கம்: நம்பகமான மின்னஞ்சல்கள் பொதுவாக உங்கள் பெயரை குறிப்பிட்டு, அது ஒரு வங்கியிலிருந்து வந்திருந்தால் கார்டு எண் அல்லது கணக்கு எண் போன்ற விவரங்களை, இ-காமர்ஸ் பிராண்டானால் ஆர்டர் எண்ணைக் கொண்டிருக்கும். ஆனால், மோசடி மின்னஞ்சல்கள் எந்த ஒரு குறிப்பிட்ட தகவலையும் வழங்காமல், பொதுவான உள்ளடக்கத்தை கொண்டிருப்பதோடு ஒரு இணைப்பைக் கிளிக் செய்யுமாறு மட்டும் அழுத்தம் தரும்.
  • சந்தேகத்திற்குரிய அனுப்புநர் முகவரிகள்: மின்னஞ்சல் முகவரியை கவனமாக சரிபாருங்கள். இதில் எழுத்துப்பிழைகள் அல்லது விசித்திரமான எழுத்துருக்கள் இருக்கலாம்.
  • நடவடிக்கை எடுக்கச் சொல்லும் அவசர அழைப்புகள்: “உடனடி நடவடிக்கை தேவை” அல்லது “உங்கள் அக்கவுண்ட் முடக்கப்படும்” போன்ற வார்த்தைகள் சந்தேகத்துக்குரியது.
  • தனிப்பட்ட தகவல்களை கோருவது: நம்பகமான நிறுவனங்கள் மின்னஞ்சல் மூலம் அபாயகரமான தகவல்களை அரிதாகவே கேட்கும்.
  • இலக்கணம் மற்றும் எழுத்து பிழைகள்: ஃபிஷிங் மின்னஞ்சல்களில் பெரும்பாலும் எழுத்துப் பிழைகள் மற்றும் இலக்கணப் பிழைகள் இருக்கும்.

ஃபிஷிங்கைத் தவிர்ப்பது எப்படி

  • எதிர்பாராத மின்னஞ்சல்களை சந்தேகத்துடன் அணுகுங்கள்: இத்தகைய மின்னஞ்சல்கள் நம்பகமான அமைப்பிலிருந்து வந்ததாக தோன்றினாலும், அவசரமாக இணைப்பைக் கிளிக் செய்வதற்கு முன்பு செய்தியை முழுமையாக படித்து, அனுப்புநரை சரிபார்க்கவும்.
  • சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம்: அதற்கு பதிலாக, உங்கள் ப்ரவுசரில் நேரடியாக அந்த வலைதளத்தின் முகவரியை உள்ளிடவும்.
  • அனுப்புநரின் அடையாளத்தைச் சரிபார்க்கவும்: மின்னஞ்சலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, தெரிந்த தொலைபேசி எண் அல்லது வலைதளம் மூலம் நிறுவனத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளுங்கள்.
  • உங்கள் சாஃப்ட்வேரை அப்டேட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்: ஆன்டிவைரஸ் சாஃப்ட்வேர் மற்றும் வெப் ப்ரவுசர்கள் ஃபிஷிங் முயற்சிகளைக் கண்டறிய உதவும்.

ஸ்மிஷிங் என்றால் என்ன? 

ஸ்மிஷிங் (SMS ஃபிஷிங்) என்பது, இதில் மோசடிக்காரர்கள் குறுஞ்செய்திகளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி தீங்கிழைக்கும் இணைப்புகளை கிளிக் செய்யவோ, தனிப்பட்ட தகவல்களை பகிரவோ தூண்டும் ஒரு மோசடி முறையாகும். டெலிவரி சேவைகள், வங்கிகள் போன்றவை போல நடிப்பதோ, நீங்கள் பரிசு வென்றதாக சொல்லி நம்பவைக்கும் முயற்சிகள் போன்றவை இதற்குள் அடங்கும்.

ஸ்மிஷிங் மோசடிகளை எவ்வாறு கண்டறிவது

  • போலி பேக்கேஜ் டெலிவரி அறிவிப்புகள்:  “உங்கள் பேக்கேஜ் விரைவில் வந்தடையும். உங்கள் முகவரியை உறுதிப்படுத்த இங்கே கிளிக் செய்யுங்கள்.”
  • OTP மற்றும் தனிப்பட்ட தரவு கோரிக்கைகள்: மோசடிக்காரர்கள் அக்கவுண்ட் சரிபார்ப்பை காரணம் காட்டி, மக்களிடம் OTPகள் அல்லது தனிப்பட்ட விவரங்களைப் பகிரச் செய்வார்கள்.
  • போலி போட்டி அல்லது பரிசு வெற்றிகள்: “வாழ்த்துக்கள்! நீங்கள் ஒரு இலவச பரிசை வென்றுள்ளீர்கள். இப்போதே கிளைம் செய்யுங்கள்!”

ஸ்மிஷிங்கை தவிர்ப்பது எப்படி

  • சந்தேகத்திற்கிடமான உரைகளில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்: ஃபோன் நம்பர் தெரிந்தது போல இருந்தாலும், SMSகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
  • தனிப்பட்ட தகவலுடன் ஒருபோதும் பதிலளிக்க வேண்டாம்: நம்பகமான நிறுவனங்கள் மெசேஜ் வழியாக முக்கியமான தரவைக் கேட்காது.
  • சந்தேகத்திற்கிடமான எண்களை பிளாக் செய்யுங்கள்: நீங்கள் பெறும் ஸ்மிஷிங் முயற்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க இது உதவும்.

விஷ்ஷிங் என்றால் என்ன?

விஷ்ஷிங் (வாய்ஸ் ஃபிஷிங்) என்பது ஒரு வகையான மோசடி ஆகும், இதில் கிரிமினல்கள் தொலைபேசி அழைப்புகளைப் பயன்படுத்தி தனிநபர்களை ரகசியத் தகவலை பகிரச் செய்கின்றனர். விஷ்ஷர்கள் பெரும்பாலும் டெக்னிக்கல் சப்போர்ட், அரசு நிறுவனங்கள் அல்லது சிக்கலில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் போல ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். அவர்கள் தனிப்பட்ட தகவல் அல்லது நிதி விவரங்களை பகிரச் செய்ய சமூக பொறியியல் தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர்.

விஷ்ஷிங் மோசடிகளை எவ்வாறு கண்டறிவது

  • அழைப்பாளர் ID ஏமாற்றுதல்: மோசடிக்காரர்கள் தங்கள் அழைப்புகள் நம்பகமான இடத்திலிருந்து வந்ததாக காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள்.
  • உணர்ச்சிகர தந்திரங்கள்: அவர்கள் பதற்றத்தை ஏற்படுத்தி, உங்கள் வங்கி அக்கவுண்ட் ஆபத்தில் உள்ளது அல்லது நீங்கள் செலுத்த வேண்டிய வரியை செலுத்தவில்லை எனக் கூறி ஏமாற்ற முயற்சிக்கலாம்.
  • சமூக பொறியியல்: அவர்கள் உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கும் போர்வையில் கடவுச்சொற்கள், பின்கள் அல்லது OTPகள் உள்ளிட்ட முக்கியமான விவரங்களைக் கேட்கிறார்கள்.

விஷ்ஷிங் மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி

  • அழைப்பவர் வங்கியில் இருந்து அழைப்பதாகக் கூறினாலும், வங்கி விவரங்கள் அல்லது OTPகளை தொலைபேசியில் பகிர வேண்டாம்..
  • நிதி அல்லது தனிப்பட்ட தகவல்களைக் கேட்கும் கோரப்படாத அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
  • சந்தேகம் இருந்தால், அழைப்பை துண்டித்து, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைக்கவும்.

பொதுவான தொடர்பு: தந்திரமாக ஏமாற்றுதல்

முறைகள் வேறுபட்டாலும், ஃபிஷிங், ஸ்மிஷிங் மற்றும் விஷ்ஷிங் அனைத்தும் தந்திரமாக ஏமாற்றுவதையே நம்பியுள்ளன. அவர்கள் நம் நம்பிக்கை, பயம் அல்லது ஆர்வத்தை பயன்படுத்தி நம்மை ஏமாற்றி நமது கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்ய வைக்கிறார்கள். இந்த மோசடிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொண்டு, பாதுகாப்பான ஆன்லைன் பழக்கங்களை மேற்கொள்வதன் மூலம், இதுபோன்ற தந்திரங்களில் விழும் ஆபத்தை கணிசமாகக் குறைக்கலாம். எப்போதும் விழிப்பாக இருங்கள், தகவல் பெற்று பாதுகாப்பாக செயல்படுங்கள் மற்றும் ஃபிஷிங் மோசடிகளுக்கு இரையாகாதீர்கள்!

ஃபிஷிங், விஷ்ஷிங் & ஸ்மிஷிங் சம்பவங்களைக் குறித்து எவ்வாறு புகாரளிப்பது

நீங்கள் ஒரு மோசடிக்கு இலக்காகிவிட்டதாக சந்தேகித்தால், உடனடியாக அதைப் புகாரளிக்கவும்:

PhonePe இல் புகாரளித்தல்

அதிகாரிகளிடம் புகாரளித்தல்

  • சைபர் கிரைம் செல்: ஆன்லைனில் சைபர் கிரைம் போர்டலில் புகார் பதிவு செய்யுங்கள் அல்லது 1930க்கு அழைக்கவும்.
  • தொலைத்தொடர்பு துறை (DOT): சந்தேகத்திற்கிடமான செய்திகள், அழைப்புகள் அல்லது வாட்ஸ்அப் மோசடி ஆகியவற்றை சஞ்சார்சாதி போர்ட்டலில்சக்ஷு வசதி மூலம் புகாரளிக்கவும்.

முக்கிய குறிப்பு— PhonePe ஒருபோதும் உங்களிடம் ரகசிய அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்பதில்லை. phonepe.com டொமைனில் இருந்து வராமல், PhonePe இலிருந்து வந்ததாகக் கூறும் அனைத்து மின்னஞ்சல்களையும் புறக்கணிக்கவும். மோசடி நடந்ததாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.

Keep Reading