Trust & Safety
பணம் தவறுதலாக பரிமாற்றம் செய்யப்பட்டாலோ அல்லது நிலுவையில் இருந்தாலோ UPI பேமண்ட்டுகளை ரிவர்ஸ் செய்வது எப்படி
PhonePe Regional|2 min read|14 June, 2023
எப்போதாவது நீங்கள் ஒரு நபருக்கு தவறுதலாகப் பணத்தை அனுப்பிவிட்டாலோ அல்லது உங்கள் பணம் நிலுவை நிலையில் இருந்தாலோ அந்த பேமண்ட்டை ரிவர்ஸ் செய்வது எப்படி என யோசித்திருக்கிறீர்களா? தவறான ஒரு நபருக்கு பணத்தை அனுப்புவது அவ்வப்போது நடக்கக்கூடிய ஒன்று தான். ஒருவேளை நீங்கள் போன் நம்பரின் ஒரு இலக்கத்தை தவறாக கொடுத்திருக்கலாம், தவறான UPI ஐடியை டைப் செய்திருக்கலாம் அல்லது பணம் அனுப்புவதற்கு தவறான நபரின் சாட்டை கிளிக் செய்திருக்கலாம். பணத்தை அனுப்பிய பிறகு தான் அது தவறான நபருக்கு அனுப்பப்பட்டதே அறியவரும்! இது போன்ற சந்தர்ப்பங்களில் அல்லது ஒரு பேமண்ட் நிலுவையில் இருக்கும் போது, இந்த ப்ளாக்கில் விவரிக்கப்பட்டிருக்கும் பின்வரும் செயல்முறையைப் பின்பற்றினால் உங்கள் பேமண்ட்டை ரிவர்ஸ் செய்து கொள்ளலாம்.
தவறுதலான பணப் பரிமாற்றம் என்றால் என்ன?
நீங்கள் பணம் அனுப்ப விரும்பியவருக்குப் பதிலாக தவறான நபருக்கு பணம் அனுப்பிவிட்டால், அதுவே தவறுதலான பணப் பரிமாற்றம் எனப்படும்.
நீங்கள் தவறான நபருக்கு பணம் அனுப்பிவிட்டால் என்ன செய்வது
UPI மூலம் அனுப்பப்படும் பணம் நேரடியாகப் பெறுநரின் வங்கி அக்கவுண்டில் கிரெடிட் செய்யப்படுவதால் அந்த பணப் பரிமாற்றத்தை ரிவர்ஸ் செய்வதென்பது கடினமானது தான். UPI பேமண்ட்டுகளை ரத்து செய்யவோ அல்லது ரிவர்ஸ் செய்யவோ வங்கிகள் எங்களை அனுமதிப்பதில்லை. பணத்தை ரிவர்ஸ் செய்வதற்கு, பணத்தைப் பெற்றவர் வங்கியிடம் பணப் பரிமாற்றத்திற்கான ஒப்புதலை அளிப்பது கட்டாயமாகும்.
பணத்தைப் பெற்றவர் உங்கள் உறவினர் அல்லது நண்பராக இருந்தால் பணத்தைப் திரும்பப் பெறுவது எளிதாக இருக்கும். இருப்பினும், நீங்கள் தவறுதலாகப் பணத்தை அனுப்பி அதனை திரும்பப் பெற முடியவில்லை எனில், நீங்கள் செய்ய வேண்டியவை பின்வருமாறு:
- உங்கள் வங்கியை நேரடியாகத் தொடர்பு கொண்டு அந்த பேமண்ட்டிற்கான தனிப்பட்ட பரிவர்த்தனை ரெஃபரன்ஸ் (UTR) என்னுடன் தவறுதலான கிரெடிட் சார்ஜ்பேக் கோரிக்கையை எழுப்பவும்.
- நீங்கள் தவறாகப் பணம் அனுப்பியவர் உங்கள் வங்கியில் கணக்கு வைத்திருந்தால், உங்கள் வங்கி நேரடியாக உங்கள் சார்பாக அவர்களைத் தொடர்புகொண்டு பணத்தைத் திருப்பித் தருமாறு கோரலாம்.
- நீங்கள் தவறாகப் பணம் அனுப்பியவர் வேறொரு வங்கியில் கணக்கு வைத்திருந்தால், உங்கள் வங்கி உங்களுக்கு ஒரு உதவியாளராக மட்டுமே செயல்பட்டு கிளையின் சில விவரங்களை உங்களுக்கு வழங்கும். மேற்கொண்டு உதவிக்கு நீங்கள் கிளைக்குச் சென்று மேலாளரிடம் பேச வேண்டும்.
- பணத்தைப் பெற்றவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே அதனை ரிவர்ஸ் செய்ய முடியும். அப்படி அவர்கள் ஒப்புக்கொண்டால், அந்தப் பணம் 7 வேலை நாட்களுக்குள் உங்கள் அக்கவுண்டிற்கு அனுப்பப்படும்.
- பணத்தைப் பெற்றவர் உங்கள் கோரிக்கைக்கு பதிலளிக்கவில்லை என்றால் அல்லது வங்கியால் பணத்தைப் பெற முடியவில்லை என்றால், NPCI போர்ட்டலில் (https://npci.org.in/) நீங்கள் ஒரு புகாரைப் பதிவு செய்யலாம்.
- மேற்கண்ட செயல்முறைகளை பின்பற்றிய பின்பும் உங்கள் புகார் தீர்க்கப்படாமல் இருந்தால், 30 நாட்களுக்குப் பிறகு வங்கி குறைதீர்ப்பாளரான பேங்க்கிங் ஒம்பட்ஸ்மன்னை ( Banking Ombudsman) தொடர்பு கொண்டு மேற்கொண்டு புகாரளிக்கலாம்.
நிலுவையில் இருக்கும் பரிவர்த்தனை என்றால் என்ன?
நிலுவையில் இருக்கும் பரிவர்த்தனை என்பது பொதுவாக பணம் கழிக்கப்பட்ட பிறகும் பேமண்ட்டின் நிலை நிலுவையில் இருப்பதைக் குறிக்கும். இது பலவிதங்களில் ஏற்படலாம் — நீங்கள் பேமண்ட் செய்து, உங்கள் பரிவர்த்தனை பூர்த்தியடைந்தும் பெறுநர் பணத்தை பெறாமல் இருப்பது, பேமண்ட் தொடர்ந்து நிலுவையில் இருப்பது அல்லது உங்கள் பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டும் உங்களிடமிருந்து கழிக்கப்பட்ட பணத்தை நீங்கள் திரும்பப் பெறாமல் இருப்பது போன்றவைகள்.
உங்கள் பேமண்ட் நிலுவையில் இருந்தால் என்ன செய்ய வேண்டும்
- தயவுசெய்து பொறுமை காக்கவும். இதுபோன்ற சந்தர்ப்பத்தில், உங்கள் பணம் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது மேலும் நீங்கள் விரைவிலேயே அதனை திரும்பப் பெறுவீர்கள்.
- PhonePe ஆப்பில் சிக்கலை குறித்து புகாரளிக்கவும். நாங்கள் அதன் முன்னேற்றத்தைக் கண்காணிப்போம்.
- உங்கள் வங்கி பேமண்ட்டின் இறுதி நிலையை அப்டேட் செய்வதற்கு 48 மணிநேரங்கள் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். உங்கள் பேமண்ட் வெற்றிகரமாகச் செய்யப்பட்டிருந்தால், அந்தத் தொகை பெறுநரின் அக்கவுண்ட்டில் டெபாசிட் செய்யப்படும்.
- ஒருவேளை பேமண்ட் தோல்வியடைந்திருந்தால், பேமண்ட் செய்த தேதியிலிருந்து 3–5 வேலை நாட்களுக்குள் அந்தத் தொகை உங்கள் அக்கவுண்ட்டிற்கு ரிவர்ஸ் செய்யப்படும்.
- விரைவான தீர்வுக்கு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு பரிவர்த்தனையின் UTR எண்ணைக் குறிப்பிட்டு புகார் தெரிவிக்கலாம்.
- நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குப் பிறகு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் PhonePe ஆப்பில் உங்கள் புகாரைத் தீவிரப்படுத்தலாம், இதன் மூலம் சிக்கலைத் தீர்க்கவும், அந்தப் பரிவர்த்தனையின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் உதவுவோம்.
முக்கிய குறிப்பு: PhonePe ஒருபோதும் ரகசிய அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. Phonepe.com டொமைனில் இருந்து வரவில்லை எனில் PhonePe-யிலிருந்து வந்ததாகக் கூறும் அனைத்து மெயில்களையும் புறக்கணிக்கவும். மோசடி நடந்ததாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளவும்.
ஒரு உண்மையான வாடிக்கையாளர் பிரதிநிதி உங்கள் முழு கிரெடிட்/டெபிட் கார்டு விவரங்களையோ அல்லது OTP-யையோ பகிரும்படி கேட்கமாட்டார். அவர்கள் உங்களை அங்கீகரிக்கப்பட்ட லேண்ட்லைன் எண்களிலிருந்து மட்டுமே தொடர்புகொள்வார்கள், மொபைல் எண்ணிலிருந்து அல்ல. உங்கள் வங்கி அனுப்பிய அதே அதிகாரப்பூர்வ டொமைனில் இருந்து அனுப்பப்படாத மின்னஞ்சல்கள் புறக்கணிக்கப்பட வேண்டும். சோஷியல் இன்ஜினீரிங் மோசடி குறித்து ஜாக்கிரதையாக இருக்கவும்.
சிக்கலைத் தெரிவிக்க, உங்கள் PhonePe ஆப்பில் உள்நுழைந்து ‘உதவி’ என்பதற்குச் செல்லவும். ‘கணக்கு பாதுகாப்புச் சிக்கல்/ மோசடிச் செயல்பாட்டைப் புகாரளி’ என்பதன் கீழ் மோசடி சம்பவத்தைப் பற்றிப் புகாரளிக்கலாம். மாற்றாக நீங்கள் support.phonepe.com இல் உள்நுழையலாம் அல்லது Twitter மூலம் தொடர்புகொள்ளலாம்.