PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

EMI மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறைகள்

PhonePe Regional|2 min read|04 May, 2021

URL copied to clipboard

EMI மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறைகள்

கடன் வாங்கியவர்கள் மூன்று மாதங்களுக்கு தங்கள் EMI/கிரெடிட் கார்டு பேமண்ட்களைச் செலுத்தாமல் இருக்க RBI சமீபத்தில் ஒரு தற்காலிக விலக்கை வழங்கியுள்ளது. கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான தேதியை ஒத்திவைப்பதால் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தற்காலிக நிவாரணம் கிடைக்கிறது.

மோசடிக்காரர்கள் இதைச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். கடன் வாங்கியவர்களுக்கு இந்த விலக்கைப் பெற உதவுவதாக வங்கிப் பிரதிநிதிகளைப் போல நடித்து ஏமாற்றிச் செய்யப்படும் EMI மோசடிகள் அதிகரித்து வருகின்றன.

மோசடிக்காரர்கள் செயல்படும் சில வழிமுறைகள் இதோ:

சூழ்நிலை 1: வங்கியில் இருந்து அழைப்பதாக ஒரு தொலைபேசி அழைப்பைப் பெறுகிறீர்கள். அந்த வங்கிப் பிரதிநிதி உங்கள் EMI-ஐ ஒத்திவைக்க டெபிட்/கிரெடிட் கார்டு எண், CVV ஆகியவற்றைப் பகிரும்படி கேட்கிறார். விவரங்களைப் பகிர்ந்ததும் மோசடிக்காரர் ஒரு பணப் பரிமாற்றத்தைத் தொடங்கிவிட்டு உங்கள் மொபைலுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐக் கேட்பார். OTP பகிரப்பட்டதும் உங்கள் பணம் காணாமல் போய்விடும்.

சூழ்நிலை 2: வங்கிப் பிரதிநிதியைப் போல ஏமாற்றும் மோசடிக்காரர் உங்களை அழைத்து உங்கள் EMI நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சொல்லி ஒரு இணைப்பை கிளிக் செய்யுமாறோ PhonePe செயலியில் தவணைக்கால நீட்டிப்பை நேரடியாக ஏற்றுக்கொள்ளுமாறோ கூறுவார். UPI பின்னை உள்ளிட்டு அறிவிப்பு ஐகானில் பெறப்பட்ட கோரிக்கையை ஏற்கவும் கேட்டுக்கொள்ளப்படலாம். சில சூழ்நிலைகளில் வங்கியின் பெயரையும் லோகோவையும் பயன்படுத்தி “கடன் EMI-ஐத் தள்ளிவைப்பதற்கான கோரிக்கையை உறுதிசெய்க” என்கிற மெசேஜை அனுப்பலாம். கோரிக்கையை உறுதிசெய்ததும் பணம் காணாமல்போய்விடும்.

சூழ்நிலை 3: EMI செலுத்தாததால் அபராதம் விதிக்கப்படவிருப்பதாக ஒரு ‘வங்கி அதிகாரி’ தொலைபேசியில் அழைப்பார். உங்களுக்கு உதவி செய்வதாகக் கூறி AnyDesk செயலியையோ வேறு ஏதேனும் திரைப்பகிர்வு செயலியையோ நிறுவச் சொல்வார். ’வங்கி அதிகாரி’ என்று ஏமாற்றுகிறவர் உங்கள் சாதனத்திற்கான தொலைதூர அணுகலுடன் மொபைல் பேங்கிங் செயலியில் உள்ள பின் மற்றும் பாஸ்வேர்டுகளைப் பெற்று உங்கள் கணக்கு விவரங்களைத் திருடிவிடுவார். இப்போது உங்கள் பணம் மோசடிக்காரரின் கையில் இருக்கும்.

மேற்கண்ட சூழ்நிலைகளைப் பயன்படுத்தி சேவை வழங்குவதாகக் கூறி தொலைபேசியில் அழைப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். PhonePe செயலியின் மூலமாக வங்கியால் உங்கள் EMI-களை நீட்டிக்க முடியாது. மேலும் EMI-களைத் தள்ளிவைக்க உங்கள் OTP-ஐப் பகிரவோ UPI பின்னை உள்ளிடவோ தேவையில்லை.

பாதுகாப்பாக இருப்பதற்கான வழிமுறை:

  • கார்டு எண், காலாவதித் தேதி, பின், OTP உள்ளிட்ட இரகசியத்தன்மையுள்ள தகவல்களை எவருடனும் பகிர வேண்டாம். PhonePe பிரதிநிதி எனக்கூறி ஒருவர் அத்தகைய விவரங்களைக் கேட்டாலும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பும்படி அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். எப்போதுமே @phonepe.com என்று முடிகின்ற முகவரியில் இருந்து வரும் மின்னஞ்சல்களுக்கு மட்டும் பதில் அளியுங்கள்.
  • வங்கி மின்னஞ்சல்கள் அனைத்தும் பாதுகாப்பான https டொமைனில் இருந்தே வருகின்றன. [XYZ]@gmail.com அல்லது வேறு மின்னஞ்சல் வழங்குநர் டொமைனில் இருந்து வரும் மின்னஞ்சல்களைப் புறக்கணிக்கவும்.
  • PhonePe செயலியில் பணம் பெறுவதற்கு ’பணம் அனுப்பு’ பட்டனை அழுத்தவோ UPI பின்னை உள்ளிடவோ தேவையில்லை.
  • ’பணம் அனுப்பு’ பட்டனை அழுத்துவதற்கு முன்போ UPI பின்னை உள்ளிடுவதற்கு முன்போ PhonePe செயலியில் காட்டப்படும் பணப் பரிமாற்ற மெசேஜை கவனமாக வாசிக்கவும்.
  • Anydesk அல்லது Teamviewer போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளைப் பதிவிறக்கவும் நிறுவவும் வேண்டாம்.
  • Google, Twitter, FB போன்ற வலைதளங்களில் PhonePe வாடிக்கையாளர் உதவி எண்ணைத் தேடாதீர்கள். PhonePe வாடிக்கையாளர் உதவி மையத்தை அடைவதற்கான ஒரே அதிகாரப்பூர்வமான வழி https://phonepe.com/en/contact_us.html வலைதளம் மட்டுமே.
  • PhonePe உதவி மையப் பிரதிநிதி என்று கூறிக்கொள்ளும் எந்த மொபைல் எண்ணையும் அழைக்கவோ அதிலிருந்து அழைப்பு வந்தால் பதிலளிக்கவோ வேண்டாம்.

மோசடிக்காரரால் தொடர்புகொள்ளப்படும் போது என்ன செய்வது?

  • உடனடியாக அருகில் உள்ள சைபர் க்ரைம் மையத்தில் புகார் அளித்து தொடர்புடைய விவரங்களைக் கொடுத்து காவல்துறையில் ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்யவும் (மொபைல் எண், பணப் பரிமாற்ற விவரங்கள், கார்டு எண், வங்கிக் கணக்கு உள்ளிட்டவை).
  • PhonePe செயலியில் உள்நுழைந்து ‘உதவி’ என்பதற்குச் செல்லவும். ’கணக்குப் பாதுகாப்பு சிக்கல்/மோசடி செயல்பாட்டைப் புகார் செய்தல்’ பகுதியில் மோசடி சம்பவத்தைப் புகார் செய்யலாம்.
  • பல்வேறு சமூக ஊடகங்களில் உள்ள எங்களது அதிகாரப்பூர்வக் கணக்குகளில் மட்டும் எங்களைத் தொடர்புகொள்ளவும்.

Twitter ஹேண்டில்கள்: https://twitter.com/PhonePe

https://twitter.com/PhonePeSupport

Facebook கணக்கு: https://www.facebook.com/OfficialPhonePe/

வலைதளம்: support.phonepe.com

Keep Reading