PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

பண இரட்டிப்பு மோசடி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

PhonePe Regional|2 min read|28 July, 2022

URL copied to clipboard

பாதுகாப்பாக இருப்பதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே

மோசடி செய்பவர்கள் இன்று பொது மக்களை கவர்ந்திழுத்து அவர்களின் பணத்தை திருடுவதற்கு பல்வேறு புதுமையான வழிகளை பயன்படுத்துகின்றனர். சட்டப்படி நியாயமானதாகத் தோன்றும் திட்டங்களை உருவாக்கி மக்களை தந்திரமாக ஏமாற்றுகிறார்கள். ஒரே இரவில் பணத்தை இரட்டிப்பாக்குவதாக உறுதியளித்து மக்களை கவர்ந்திழுப்பது இந்த மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் உத்திகளில் ஒன்றாகும்.

பண இரட்டிப்பு மோசடி எப்படி நடக்கிறது

உதாரணம் 1: ஒரு சிறிய நிதி நிறுவனத்தின் பிரதிநிதி எனச் சொல்லி மோசடியாளர் உங்களைத் தொடர்புகொள்வார், குறைந்த முதலீட்டில் மிகக் குறுகிய காலத்தில் பெரும் வருமானத்தை தங்கள் நிறுவனம் தருவதாக அவர்கள் கூறுவர். உங்கள் பணம் அதிவேகமாக பெருகும் என்று நீங்கள் நம்புவதற்கு ஒரு சிறிய தொகையை முதலீடு செய்ய வைத்து அதை இரட்டிப்பாக்குவார்கள். உங்கள் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, அவர்கள் உங்களிடமிருந்து பெரும் தொகையைப் பறித்துவிடுவார்கள்.

உதாரணம் 2: அதிக எண்ணிக்கையிலான கிரெடிட் கார்டு உபயோகம் அல்லது அதிக வங்கி இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் ஒரு கவர்ச்சிகரமான சலுகையை வென்றுள்ளீர்கள் எனவும் இந்த சலுகையைப் பயன்படுத்தி முதலீடு செய்யும்போது மிகக் குறுகிய காலத்தில் பெரும் வருமானத்தை ஈட்டலாம் எனவும், இது குறிப்பிட்ட கால சலுகை என்று SMS அல்லது வாட்ஸ்அப் மூலம் மோசடியாளர் உங்களைத் தொடர்புகொள்வார். தாங்கள் பகிரும் இணைப்பைக் க்ளிக் செய்வதன் மூலம் பணத்தை டெபாசிட் செய்யலாம் எனக் கூறி உங்கள் பணத்தைக் கொள்ளையடிப்பார்கள்.

பண இரட்டிப்பு மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி

  1. சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்: மோசடி செய்பவர்கள் வழக்கமாக உங்களுக்கு ஒரு இணைப்பை அனுப்புவார்கள், இதன் மூலம் நீங்கள் ரிட்டர்ன் அல்லது கிஃப்ட் கார்டைப் பெறலாம். இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்.
  2. உங்கள் கிரெடிட் கார்டு எண், CVV, PIN, OTP போன்ற தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம்: சட்டப்படி முறையான நிறுவனங்கள் பரிவர்த்தனைகளுக்குத் தேவைப்படும் தனிப்பட்ட தகவல்களுக்கு உங்களை அழைக்கவோ, மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பவோ மாட்டார்கள். PhonePe பிரதிநிதியாகக் காட்டிக் கொள்ளும் ஒருவர் உங்களிடம் அத்தகைய விவரங்களைக் கேட்டால், உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பச் சொல்லுங்கள். @phonepe.com டொமைனில் இருந்து வரும் மின்னஞ்சல்களுக்கு மட்டும் பதிலளிக்கவும்.
  3. தொடர்புத் தகவலைப் பெற எப்போதும் முறையான இணையதளங்களைப் பயன்படுத்தவும்: ஒரு நிதி நிறுவனத்திலிருந்து அழைப்பதாகச் சொல்லும் நபரிடமிருந்து நீங்கள் அழைப்பைப் பெற்று, அந்த நபர் தான் அழைத்த எண்ணிற்கு மீண்டும் அழைக்கும்படி கேட்டால், மீண்டும் அழைப்பதற்கு முன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள எண்ணைச் சரிபார்க்கவும்.
  4. PhonePe இல் பணத்தைப் பெற நீங்கள் ‘Pay’ விருப்பத்தைக் கிளிக் செய்யவோ அல்லது UPI பின்னை உள்ளிடவோ தேவையில்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.
  5. ‘Pay’/பணம் செலுத்து அல்லது உங்கள் UPI பின்னை உள்ளிடும் முன் உங்கள் PhonePe செயலியில் காட்டப்படும் செய்தியை கவனமாகப் படிக்கவும்
  6. Google, Twitter, FB போன்றவற்றில் PhonePe வாடிக்கையாளர் உதவி மைய எண்களைத் தேட வேண்டாம். PhonePe வாடிக்கையாளர் உதவி மையத்தை அணுகுவதற்கான ஒரே அதிகாரப்பூர்வ வழி https://phonepe.com/en/contact_us.html ஆகும்.
  7. PhonePe உதவி மையம் எனக்கூறி சரிபார்க்கப்படாத மொபைல் எண்களுக்கு ஒருபோதும் அழைக்கவோ அல்லது சரிபார்க்கப்படாத மொபைல் எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்கவோ வேண்டாம்.

ஒரு மோசடி செய்பவர் உங்களைத் தொடர்பு கொண்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

  • உடனடியாக உங்களுக்கு அருகிலுள்ள சைபர் கிரைம் சென்டருக்கு இந்தச் சம்பவத்தைப் புகாரளித்து, போலிஸாரிடம் தொடர்புடைய விவரங்களை (தொலைபேசி எண், பரிவர்த்தனை விவரங்கள், கார்டு எண், வங்கிக் கணக்கு போன்றவை) கொடுத்து FIR பதிவு செய்யவும். மாற்றாக, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்ய பின்வரும் இணைப்பைக் க்ளிக் செய்யலாம் — https://cybercrime.gov.in/ அல்லது 1930 இல் சைபர் செல் போலீஸைத் தொடர்புகொள்ளலாம்.
  • PhonePe மூலம் உங்களைத் தொடர்பு கொண்டால், உங்கள் PhonePe ஆப்-ல் உள்நுழைந்து, ‘Help/உதவி’ பகுதிக்குச் செல்லவும். ‘Account security issue/ Report fraudulent activity.’ பிரிவுக்குச் சென்று மோசடி சம்பவத்தைப் புகாரளிக்கவும். மாற்றாக நீங்கள் support.phonepe.com இல் உள்நுழையலாம்.
  • எங்களுடைய அதிகாரப்பூர்வ கணக்குகள் மூலம் மட்டுமே எங்களைத் தொடர்புகொள்ளவும்

Twitter: https://twitter.com/PhonePeSupport

இணையதளம்: support.phonepe.com

Keep Reading