PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

பண ம்யூலாக மாறாதீர்கள்: இந்த நிதி மோசடிக்கான உங்கள் வழிகாட்டி

PhonePe Regional|3 min read|28 February, 2025

URL copied to clipboard

உங்கள் பேங்க் அக்கவுண்ட் மூலம் பேமண்ட்டுகள் பெறுவதற்கும், ஃபார்வர்டு செய்வதற்கும் மட்டும் யாராவது வாரத்திற்கு ரூ.500 வழங்கினால் எப்படி இருக்கும்? நம்ப முடியவில்லை இல்லையா? அதை நம்ப முடியாது தான் – ஆனால் இது சாதாரண மக்களை குறிவைத்து வேகமாக வளர்ந்து வரும் நிதி மோசடிகளில் ஒன்றாகும்.

மோசடி செய்பவர்கள் இது போன்ற ம்யூல் அக்கவுண்ட்டுகளை பயன்படுத்தி பணத்தை லாண்டர் செய்து கொள்கிறார்கள் அல்லது குற்றவாளிகள் நேரடியாக இதில் ஈடுபடாமல் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை இப்படி செய்து கொள்கிறார்கள். ம்யூல் அக்கவுண்ட்டுகள் என்றால் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன, மக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இது ஏன் இத்தகைய ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றி இந்த வலைப்பதிவில் பார்ப்போம்.

பண ம்யூல் என்றால் என்ன?

பண ம்யூல்கள் என்பது ஒரு மோசடி அல்லது சட்டவிரோத நடவடிக்கையின் ஒரு பகுதியாக மற்றவர்களின் சார்பாக ஒரு அக்கவுண்ட்டிலிருந்து மற்றொரு அக்கவுண்ட்டிற்கு பணத்தை மாற்றுபவர்கள் அல்லது “ம்யூல்” செய்பவர்கள். ஒரு பண ம்யூல் தனது அக்கவுண்ட்டிற்கு பணத்தைப் பெற்று, பின்னர் அவற்றை வேறொரு அக்கவுண்ட்டிற்கு மாற்றுவார்கள், பொதுவாக இதன் பின்னால் இப்படி செய்வதற்கு கட்டணம் தரப்படும் என்றோ அல்லது ரிவார்டுகள் தரப்படும் என்றோ தவறான வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கும். சிலர் இந்த திட்டங்களில் தாமாக முன்வந்து பங்கேற்றாலும், பலர் விவரம் அறியாமல் ஏமாற்றி குற்றத்தில் பங்கேற்கவைக்கப்படுகிறார்கள்.

இதைக் கேளுங்கள்: பைனான்ஸ் உதவியாளர் பதவிக்கான ஒரு உண்மையாக தோன்றும் வேலை வாய்ப்பு ஒன்றை நீங்கள் பெறுகிறீர்கள். வேலை எளிமையானதாகத் தெரிகிறது – சர்வதேச பேமண்டுகளை செயலாக்க நிறுவனத்திற்கு நீங்கள் உதவ வேண்டும். ஆனால் உங்களுக்கு தெரியாத உண்மை என்னவென்றால் நீங்கள் ஒரு பண ம்யூலாக மாறி ஒரு சிக்கலான பணமோசடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாட்டிக் கொண்டிருக்கிறீர்கள் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணரமாட்டீர்கள்.

ம்யூல் அக்கவுண்ட்டுகள் பொதுவாக பணமோசடி திட்டங்களில் ஈடுபடுகின்றன, இதில் திருடப்பட்ட பணம் பல அக்கவுண்ட்டுகள் மூலம் அனுப்பப்பட்டு அவற்றின் ஆரம்ப(சோர்ஸ்) அக்கவுண்ட்டை மறைக்கின்றன, இதனால் குற்றச் செயல்கள் தொடர்பான பரிவர்த்தனைகளை அதிகாரிகள் கண்டறிவது கடினமாகி விடுகிறது. ஃபிஷிங் திட்டங்கள், லாட்டரி மோசடிகள் அல்லது முதலீட்டு மோசடிகள் உள்ளிட்ட மோசடிகளிலும் இந்தக் அக்கவுண்ட்டுகள் பயன்படுத்தப்படலாம், இதில் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் அக்கவுண்ட்டுகளுக்கு பணம் அனுப்ப வைத்து ஏமாற்றப்படுகின்றனர்.

மோசடி செய்பவர்கள் தங்கள் நெட்வொர்க்கை எவ்வாறு உருவாக்குகிறார்கள்

பண ம்யூல் நெட்வொர்க்குகள் என்பது குற்றவாளிகள் தங்கள் அடையாளத்தை மறைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் ம்யூல்களுக்கும் இடையே பரிவர்த்தனைகளை கவனமாகத் திட்டமிடும் செயல்பாடுகள் ஆகும். இந்த சிக்கலான ஏமாற்று நெட்வொர்க்குகளை ஒருங்கிணைக்கும் வேலை “ம்யூல்  கன்ட்ரோலர்கள்” அல்லது “ஆட்சேர்ப்பாளர்கள்” தலைமையில் நடக்கும்.

ம்யூல்  கன்ட்ரோலர்கள் எவ்வாறு செயல்படுகின்றன?

  1. ஆட்சேர்ப்பு: மோசடி செய்பவர்கள் நேரடி தொடர்பு, “எளிதான பணம்” அல்லது போலியான வேலை வாய்ப்புகளை வழங்கும் விளம்பரங்கள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் ஏமாறக் கூடிய ம்யூல்களை அடையாளம் காணலாம். இவை மேலோட்டமாக முறையான வாய்ப்புகளாகத் தோன்றினாலும், தனிநபர்களை ம்யூலாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  2. நிதி சேகரிப்பு: ம்யூல் அக்கவுண்ட் அமைக்கப்பட்டவுடன், பெரும்பாலும் மோசடிகள், ஏமாற்று வேலைகள் அல்லது திருடப்பட்ட கிரெடிட் கார்டுகளிலிருந்து பணம் சேர்க்கப்பட்டு அவை ம்யூல் அக்கவுண்ட்டில் டெபாசிட் செய்யப்படும். இது வயர் பரிமாற்றங்கள் அல்லது ஆன்லைன் பேமண்ட் முறைகள் மூலம் நிகழலாம்.
  3. பண மாற்றம்: மோசடி செய்பவர், மற்றொரு அக்கவுண்ட் அல்லது கிரிப்டோகரன்சி வாலட்டுக்கு பணத்தை மாற்றுமாறு ம்யூலிடம் அறிவுறுத்தலாம். சில சந்தர்ப்பங்களில், பணத்தை வேறு நாணயமாக மாற்றுமாறு அல்லது வேறு இடத்திற்கு அனுப்பப்படும் பொருட்களை வாங்குமாறு ம்யூல்களிடம் சொல்லப்படும்.
  4. தடயங்களை மறைத்தல்: வரிசையாக பல ம்யூல் அக்கவுண்ட்டுகள் மூலம் பணத்தை அனுப்புவதன் மூலம், சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட பணத்தை கண்டுபிடிப்பதை புலனாய்வாளர்களுக்கு கடினமாக்குகின்றனர் குற்றவாளிகள். பணப் பரிவர்த்தனைகளின் குழப்பமான பாதையை உருவாக்குவதே இவர்களின் குறிக்கோள், இது பணத்தின் மூலத்தையும் இலக்கையும் கண்டறிவதை கடினமாக்குகிறது

மோசடி செய்பவர்கள் ம்யூல்களை எவ்வாறு பணியமர்த்துகிறார்கள்?

மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் நிதி ரீதியாக பாதிக்கப்படக்கூடிய அல்லது பணம் சம்பாதிப்பதற்கான எளிதான வழிகளைத் தேடும் நபர்களை குறிவைக்கின்றனர். சில பொதுவான ஆட்சேர்ப்பு தந்திரங்கள் பின்வருமாறு:

  • போலி வேலை வாய்ப்புகள்: மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் போலி வேலைகளை விளம்பரப்படுத்துகிறார்கள், குறிப்பாக இவை ரிமோட் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகளாக இருக்கும். இந்த வேலைகள் குறைந்த வேலை செய்து எளிதாக பணம் ஈட்டுவது அல்லது கமிஷன் அடிப்படையிலான வருமானம் கிடைக்கும் என்று உறுதியளிக்கின்றன. பாதிக்கப்படுபவர் வேலையை ஏற்றுக்கொண்டவுடன், பணத்தைப் பெறுவதற்கும் மாற்றுவதற்கும் ஒரு பேங்க் அக்கவுண்ட்டை திறக்கும்படி கேட்கப்படுவார்கள்.
  • முதலீடு மற்றும் லாட்டரி மோசடிகள்: மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் லாட்டரி வென்றதாக அல்லது அவர்களுக்கு ஒரு முதலீட்டு வாய்ப்பு இருப்பதாக நம்ப வைக்கிறார்கள். பாதிக்கப்படுபவர் பணத்தைப் பெற ஒரு அக்கவுண்ட்டை செட்அப் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது, பின்னர் அது மோசடி வேலைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது
  • அவசர சூழ்நிலைகள்: சில மோசடி செய்பவர்கள் பயத்தையும் அவசரத்தையும் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர் தங்களுக்கு கடன்பட்டிருப்பதாகக் கூறி, அவர்கள் இத்தகைய நிதி பரிமாற்றத்திற்கு உதவாவிட்டால் அவர்கள் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பயமுறுத்துகிறார்கள்.

ம்யூலாக இருப்பதன் அபாயங்கள் மற்றும் விளைவுகள்

சிலர் பண ம்யூலாக இருக்க தாமாக முன்வந்தாலும், பலர் இதுபற்றி முழுமையாக அறியாமலேயே ஈடுபடுகிறார்கள். இருப்பினும், அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் இல்லாவிட்டாலும், ம்யூல் அக்கவுண்ட்டுகளுடன் தொடர்பு வைத்துக்கொள்வது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்:

1. சட்ட விளைவுகள்

  • பணமோசடி மற்றும் ஏமாற்று வேலைக்கான கிரிமினல் குற்றச்சாட்டுகள்
  • சிறைக்குச் செல்ல நேரிடும்
  • பேங்க் அக்கவுண்ட் மூடப்படுவது மற்றும் நிதி சேவை கட்டுப்பாடுகள்

2. நிதி இழப்பு

  • தனிப்பட்ட நிதி இழப்பு
  • சட்ட பாதுகாப்பு செலவுகள்
  • சாத்தியமான அபராதங்கள் மற்றும் அபராத கட்டணங்கள்
  • கிரெடிட் மதிப்பீட்டில் நீண்டகால சேதம்

பண ம்யூல் மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி

  • ஆன்லைனில் தெரியாத நபர்களுடன் பழகுவதை தவிர்க்கவும்
  • பிறர் சார்பாக பேங்க் அக்கவுண்ட்டை திறக்காதீர்கள்
  • உங்கள் டெபிட் கார்டு, பாஸ்புக் அல்லது மொபைல் பேங்கிங் ஆப் பாஸ்வேர்டை யாருக்கும் தர வேண்டாம்
  • உங்கள் மொபைல் பேங்கிங் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றவும்
  • அறியப்படாத பிற அக்கவுண்ட்டுகளுக்கு பணத்தை மாற்ற வேண்டிய வேலை வாய்ப்புகளை ஏற்க வேண்டாம்.
  • பணத்தைப் பெற அல்லது மாற்றுவதற்கு உங்கள் அக்கவுண்ட்டை பயன்படுத்த பிறரை அனுமதிக்காதீர்கள்
  • விருதுத் தொகையின் ஒரு பகுதியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய எந்த வகையான ஒரு விருதுத் தொகையையும் ஏற்க வேண்டாம்
  • OTP அல்லது CVV, பாஸ்வேர்டு போன்ற உள்நுழைவு சான்றுகளை யாருடனும் பகிர வேண்டாம்.
  • நம்பத்தகாத சலுகைகள், மலிவான ஒப்பந்தங்கள் மற்றும் தள்ளுபடிகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்கவும்.
  • உங்கள் அக்கவுண்ட் பரிவர்த்தனைகளை தவறாமல் சரிபார்த்து, ஏதேனும் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு இருந்தால் உடனடியாக வங்கிகளுக்குப் புகாரளிக்கவும்.
  • சமீபத்திய அப்டேட்களுக்கு SMS/மின்னஞ்சல்/IVR மூலம் வங்கிகளின் தகவல்தொடர்புகளைப் பின்பற்றவும்

நீங்கள் பண ம்யூல் மோசடியின் ஒரு பகுதியாக இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் PhonePeஇல் இந்த சிக்கலை குறித்து புகார் எழுப்புவது எவ்வாறு

PhonePe-யில் வேலை மோசடி செய்பவரால் நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால், பின்வரும் வழிகளில் உடனடியாகப் பிரச்சினையைப் புகாரளிக்கலாம்:

  1. PhonePe செயலி: உதவிப் பகுதிக்குச் சென்று, “பரிவர்த்தனையில் சிக்கல் உள்ளது” என்ற விருப்பத்தின் கீழ் ஒரு சிக்கலை எழுப்புங்கள்.
  2. PhonePe வாடிக்கையாளர் சேவை எண்: ஒரு சிக்கலை எழுப்ப PhonePe வாடிக்கையாளர் சேவையை 80–68727374 / 022–68727374 என்ற எண்ணில் அழைக்கலாம், அதன் பிறகு வாடிக்கையாளர் சேவை முகவர் ஒரு டிக்கெட்டை உருவாக்கி உங்கள் பிரச்சினைக்கு உதவுவார்.
  3. வெப்ஃபார்ம் சமர்ப்பிப்பு: PhonePe இன்வெப்ஃபார்மான, https://support.phonepe.com/  ஐப் பயன்படுத்தியும் நீங்கள் டிக்கெட் எழுப்பலாம்.
  4. சோசியல் மீடியா: PhonePe-யின் சோசியல் மீடியா ஹேண்டில்கள் மூலம் மோசடி சம்பவங்களைப் புகாரளிக்கலாம்.

Twitter — https://twitter.com/PhonePeSupport

Facebook — https://www.facebook.com/OfficialPhonePe

5. குறை: ஏற்கனவே உள்ள புகார் குறித்த குறையைப் புகாரளிக்க, நீங்கள் https://grievance.phonepe.com/ இல் உள்நுழைந்து முன்னர் எழுப்பப்பட்ட டிக்கெட் ஐடியைப் பகிரலாம்.

6. சைபர் செல்: இறுதியாக, மோசடி புகார்களை அருகிலுள்ள சைபர் கிரைம் செல்லில் பதிவு செய்யலாம் அல்லது https://www.cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் புகார் அளிக்கலாம் அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் செல்லின் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
7. DOT: ஒரு டிஜிட்டல் குற்றம் நிகழவில்லை ஆனாலும் அப்படி நடந்திருப்பதாக உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், எப்படியும் அதைப் பற்றி புகாரளிப்பதை உறுதிசெய்யவும். தொலைத்தொடர்புத் துறை, சஞ்சார் சாத்தி போர்ட்டலில் (sancharsaathi.gov.in) சக்சு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் ஏதேனும் செய்திகள், அழைப்புகள் மற்றும் Whatsapp அக்கவுண்ட்டுகள் மோசடியானவை என்று சந்தேகிக்கப்பட்டால் அதுகுறித்து புகாரளிக்கலாம்.

முக்கிய குறிப்பு— PhonePe ஒருபோதும் உங்களிடம் ரகசிய அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்பதில்லை. phonepe.com டொமைனில் இருந்து வராமல், PhonePe இலிருந்து வந்ததாகக் கூறும் அனைத்து மின்னஞ்சல்களையும் புறக்கணிக்கவும். மோசடி நடந்ததாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.

Keep Reading