Trust & Safety
கிரெடிட் கார்டு பில் பேமண்ட் மோசடி
PhonePe Regional|2 min read|20 December, 2022
கிரெடிட் கார்டு பில் பேமண்ட் தொடர்பாக நடக்கும் மோசடிகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது, டிஜிட்டல் பரிவர்த்தனைச் செய்யும் வாடிக்கையாளரின் நம்பிக்கையை உடைத்து அவர்களுக்கு ஒரு மோசமான அனுபவத்தைத் தருகிறது. எனினும், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வின் மூலம் இது போன்ற மோசடிகளை முன்னரே கண்டறிந்து தடுக்க முடியும்.
கிரெடிட் கார்டு பில் பேமண்ட் மோசடியில், பாதிக்கப்பட்டவரை ஏமாற்றி அவரது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைக் கொண்டு கிரெடிட் கார்டு பேமண்ட் செய்ய வைப்பதன் மூலம் மோசடியாளர் தனது கிரெடிட் கார்டு பேமண்ட்டைச் செலுத்திக் கொள்கிறார்.
கிரெடிட் கார்டு பில் பேமண்ட் மோசடியில் பாதிக்கப்படுபவர்களை ஏமாற்ற சில பொதுவான வழிமுறைகள் கையாளப்படுகின்றன.
கிரெடிட் கார்டு பில் பேமண்ட் மோசடியின் பொதுவான அறிகுறிகள்:
சம்பவம் 1: இதில் மோசடியாளர்கள் மருத்துவம், ஹோட்டல் மற்றும் காப்பீட்டுத் துறையில் சேவைத் தேவைப்படும் ராணுவ அதிகாரிகளைப் போல தங்களைச் சித்தரித்து வாடிக்கையாளர்களிடம் பேசுவார்கள். அவர்கள் அதில் ஏமாந்து பரிவர்த்தனைக்கு ஒப்புக்கொண்டவுடன் உடனடியாக பேமண்ட் முறையை அமைக்குமாறு வாடிக்கையாளர்களை வற்புறுத்துவர். இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், ராணுவ வீரரைப் போல வேடமிட்டு மோசடி செய்யும் நபர் ராணுவ சீருடையில் வீடியோ காலில் பேசுவதன் மூலம் வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெறுகிறார். இதுபோன்ற மோசடிகள் பெரும்பாலும் வியாபாரிகளைக் குறிவைத்தே நடைபெறுகின்றன.
சம்பவம் 2: இதில் வாடிக்கையாளரின் தூரத்து உறவினர்/குடும்ப நண்பர்கள் அல்லது வியாபார நிர்வாகிகள் போல நடித்து வாடிக்கையாளரின் கார்டு விவரங்களை மோசடியாளர்களின் கணக்கில் சேர்ப்பதற்கு இணங்க வைக்கின்றனர். சிலநேரம் தொலைபேசி அழைப்பில் வழிகாட்டி உதவுவது போல நடிக்கவும் செய்கின்றனர். பெரும்பாலும் இதுபோன்ற மோசடிகளுக்கு இலக்காவது அடிக்கடி PhonePe-வை பயன்படுத்தாத நபர்களே.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் பேமண்ட் போன்றவை அனைத்தும் வாட்ஸ்அப் கால் / வீடியோ கால் மூலம் தான் நடைபெறுகின்றன. மேலும் மோசடியாளர்கள் வாடிக்கையாளரைப் பலமுறை அழைத்துப் பேசுவதன் மூலம் அவர்களின் நம்பிக்கையை வென்று அந்தப் பரிவர்த்தனையின் மீது எந்தச் சந்தேகமும் வராமல் பார்த்துக் கொள்கின்றனர்.
கிரெடிட் கார்டு பில் மோசடியில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?
- நீங்கள் PhonePe-வில் பணம் பெறுவதற்கு “பணம் செலுத்து (Pay)” என்ற பட்டனை அழுத்தவோ அல்லது UPI பின்னை உள்ளிடவோ தேவையில்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவும். “பணம் செலுத்து (Pay)” என்ற பட்டனை அழுத்தும் முன்பு அல்லது UPI பின்னை உள்ளிடும் முன்பு PhonePe ஆப்பில் காட்டப்படும் விவரங்களைக் கவனமாகப் படிக்கவும்.
- யாரேனும் உங்களை அழைத்து ஒரு புதிய பேமண்ட் “முறை/செயல்முறை” ஒன்றைப் பயன்படுத்த சொல்லும் பட்சத்தில், ராணுவ வீரர்களின் பேமண்ட் முறைக்கும் இந்தியாவின் மற்ற பேமண்ட் முறைகளுக்கும் எந்தவொரு வித்தியாசமும் கிடையாது என்பதை நினைவில் கொள்ளவும்.
ஒரு மோசடியாளர் உங்களை தொடர்பு கொள்ளும் பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்?
- மோசடி சம்பவத்தைப் பற்றி உடனடியாக அருகிலுள்ள சைபர் கிரைம் சென்டரில் தெரிவிக்கவும். அது சம்பந்தப்பட்ட தகவல்களை (ஃபோன் நம்பர், பரிவர்த்தனைத் தகவல்கள், கார்டு எண், வங்கி கணக்கு எண் போன்றவை) போலீசிடம் வழங்கி FIR பதிவு செய்யவும். அல்லது, இந்த இணைப்பைப் பயன்படுத்தி புகாரளிக்கலாம் — https://cybercrime.gov.in/ அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் செல் போலீஸ் அழைத்து ஆன்லைனில் சைபர் புகார் ஒன்றைப் பதிவு செய்யலாம்.
- மோசடியாளர் உங்களை PhonePe மூலம் தொடர்பு கொள்ளும் பட்சத்தில், உங்கள் PhonePe ஆப்பில் லாகின் செய்து “உதவி (‘Help)” என்ற பக்கத்திற்குச் சென்று. ‘அக்கவுண்ட் செக்குரிட்டி இஷ்யூ/ ரிப்போர்ட் பிராடுலண்டு ஆக்டிவிட்டி’ என்பதன் கீழ் மோசடி சம்பவத்தைப் பற்றிப் புகாரளிக்கலாம். மாற்றாக, support.phonepe.com தளத்திலும் லாகின் செய்து உதவி பெறலாம்.