Life @ PhonePe
PhonePe இல் ஊதியத் தத்துவம்
PhonePe Regional|2 min read|28 April, 2021
PhonePe இல் ஊதியத் தத்துவம்
ஒவ்வொரு ஊழியருக்கும் PhonePe நிறுவனத்தில் உரிமை கொள்ளும் வாய்ப்பினைத் தரும் வகையில், ஜனவரி 2021-இல் PhonePe பங்கு உரிமைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். 20 கோடி அமெரிக்க டாலர் (USD) மதிப்புள்ள இந்தத் திட்டத்தின் மூலம் PhonePe நிறுவனத்தின் அனைத்து 2200 ஊழியர்களுக்கும் பங்குகள் ஒதுக்கப்பட்டன. இதன் மூலம் நிறுவனத்தின் வெற்றிக்கானப் பலன்களை அனைத்து ஊழியர்களும் பெறுவார்கள்.
கூட்டுச்செயல்பாடு, நீண்டக்காலக் குறிக்கோள் மற்றும் நிறுவனத்தை முன்னிறுத்துதல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட எங்களின் ஊதியத் தத்துவத்தின் முக்கியமான அம்சம் PhonePe பங்கு உரிமைத் திட்டம் ஆகும். ஒவ்வொரு இந்தியருக்கும் நிதி சேவைகளுக்கான அணுகலைத் தரும் வகையில், மாற்றம் தரும் கருவியாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த PhonePe உறுதி பூண்டுள்ளது. நிதியும் நிதி சார்ந்த சேவைகளும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கப் பெறும்பொழுது எல்லோரும் வளர்ச்சி அடைவார்கள் என நாங்கள் நம்புகிறோம். அனைவருக்குமான இந்த அணுகலைச் செயல்படுத்த உதவும் முக்கியமான அம்சம் நேர்மறை பாதிப்பு. அதாவது நிதி அணுகலை அளித்து, பொருளாதாரச் சந்தையை விரிவாக்குவதன் மூலம் அனைவருக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறோம். இதனால் ஒரு நேர்மறையான வெற்றி சுழற்சி ஏற்படுகிறது. இந்தக் கொள்கையை எங்கள் நிறுவனத்தின் உள் செயல்பாட்டிலும் பின்பற்றுகிறோம்.
தாராளமயமாக்கல் மற்றும் அனைவருக்கும் பலன் எனும் கோட்பாட்டின்படி எங்கள் நிறுவனத்தை நடத்துகிறோம். ஒவ்வொரு செயல் தொடர்பும் நேர்மறையான பலனைத் தரக்கூடியதாக இருக்கும். நிறுவனத்தில் உள்ள ஒவ்வொருவரின் வெற்றியின் அடிப்படையிலேயே நிறுவனத்தின் வெற்றி அமைந்துள்ளது. தனி நபர் வளர்ச்சி அடையும்போது அது நிறுவனத்திற்கு கூடுதல் மதிப்பை அளிக்கிறது. நிறுவனத்தின் மதிப்பு உயரும் பொழுது, அது ஒவ்வொரு ஊழியருக்கும் அதிகமான பலன்களைப் பெற உதவுகிறது. ஒவ்வொருவருக்கும் போதிய அளவு பலன்கள் உள்ளதால், உட்போட்டிகளை அது தவிர்க்கிறது.
ஒருவரின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு ஊதியம் வழங்குவதைத் தவிர்த்து, இந்தப் பயன்முறையை எங்கள் ஊதியக் கொள்கை பின்பற்றுகிறது. அதற்குப் பதிலாக, நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு உழைப்பதை ஊக்குவிக்க, ESOP அம்சத்தைப் பயன்படுத்துகிறோம். அனைத்து நிலைகளில் உள்ள ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் 5000 அமெரிக்க டாலர் (USD) ESOP என நிர்ணயிப்பதன் மூலம், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் உதவியதற்கான பலனை ஒவ்வொரு ஊழியரும் பெறுவதை உறுதிசெய்கிறோம்.- — Karte Ja, Badhte Ja. நிறுவனத்தில் ஊழியரின் நிலை உயரும் பொழுது அவரின் வருடாந்திர ஊதியத்தில் ESOP ஒரு அங்கமாகச் சேர்க்கப்படும். அதாவது, அவர்களின் ஊதியத்தின் பெரும்பகுதி நிறுவனத்தின் வளர்ச்சியின் அடிப்படையில் அமையும். இது நிறுவனத்தை முன்னிறுத்த அனைவரையும் ஊக்குவிக்கும். நிறுவனத்தின் வெற்றியே அவர்களின் வெற்றி.
எங்களின் இந்தத் திட்டம் எங்கள் ஊழியர்களுக்குக் கற்றுக்கொள்ளவும், வளரவும், நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பளிக்கிறது. தொழிலில் மிகுந்த ஆர்வம் உள்ளர்வர்களுடன் நெருங்கிச் செயல்படவும், மிகவும் சிக்கலான விஷயங்களை எதிர்கொண்டு அவற்றைத் தீர்க்கவும் நாங்கள் வாய்ப்பளிக்கிறோம். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதிலும், சிறப்பாகச் செயல்படுவதிலும் கவனம் செலுத்தும் வகையில் ஒரு வெளிப்படையான, முறைசாரா சூழலைக் கொண்ட சமமான நிறுவன அமைப்பை அளிக்கிறோம். செல்வ வளத்தை அதிகரிக்கவும் PhonePe நிறுவனத்தின் வெற்றிப் பயணத்தில் பங்கேற்கவும் இந்தப் பங்கு உரிமைத்திட்டம் வாய்ப்பளிக்கிறது!
-மன்மீத் சந்து, HR துறைத் தலைவர்