PhonePe Blogs Main Featured Image

Investments

PhonePe இந்தியாவின் முதல் சூப்பர் ஃபண்டை அறிமுகப்படுத்துகிறது

PhonePe Regional|2 min read|17 August, 2021

URL copied to clipboard

சூப்பர் ஃபண்டு என்றால் என்ன என்றும் அதில் முதலீடு செய்யலாமா என்பதைப்பற்றியும் யோசிக்கிறீர்களா?

இதோ ஒரு எளிய விளக்கம்.

உங்களுக்கு எந்த மியூச்சுவல் ஃபண்டு சரியாக இருக்கும்?

மியூச்சுவல் ஃபண்டுகளைப் பற்றி முடிவெடுக்கக் குழப்பமாக இருக்கிறதா? இது மிகவும் எளிமையானது.

மொத்தம் மூன்று வகையான மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளன:

1) ஈக்விட்டி பண்டுகள்: இதில் முதலீடுகள் பங்குச்சந்தையில் இருக்கும். இதில் ரிஸ்க் அதிகம் என்றாலும் அதிக ரிட்டர்ன்களைத் தரும் என்று கருதப்படுகிறது.

2) டெட் ஃபண்டுகள்: இதில் முதலீடுகள் அரசாங்கம்(கில்ட்ஸ்) அல்லது வங்கிகள் முதலான கார்ப்பரேட் நிறுவனங்கள் விநியோகிக்கும் பாண்டுகளில் இருக்கும். இது குறைவான ரிஸ்க்கோடு நிலையான ரிட்டர்ன்களைத் தருகிறது.

3) ஹைப்ரிட் ஃபண்டுகள்: இதில் முதலீடுகள் ஈக்விட்டி மற்றும் டெட் கருவிகளில் கலந்து இருக்கும். இது மிதமான ரிஸ்க்கையும் ரிட்டர்ன்களையும் தருகிறது.

ஃபண்டுகளின் ஃபண்டு என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது?

ஃபண்டுகளின் ஃபண்டு(FOF): இதில் முதலீடுகள் பல்வேறு மியூச்சுவல் ஃபண்டுகளில் இருக்கும். இது முதலீட்டாளர்களுக்கு அதிக வசதியையும் ரிட்டர்ன்களையும் தருகிறது. ஆனால், பல மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் க்ளோஸ்டு ஃபண்டுகளின் ஃபண்டு என்ற பெயரில் தங்கள் நிறுவன ஃபண்டுகளை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுகின்றன. மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களில் உள்ள எல்லா ஃபண்டுகளும் தேர்ந்தெடுப்பதற்கு உகந்ததாக இருக்காது. சில ஃபண்டுகளால் எந்தப் பலனும் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். இதனால் FOF ஃபண்டுகளில் ஒவ்வொரு வகையிலும் சிறந்த ஃபண்டுகளை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது.

ஓப்பன் சூப்பர் ஃபண்டுகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!

ஒரு நிறுவனத்தை மட்டுமே சார்ந்துள்ள ஃபண்டுகளின் ஃபண்டைப் போல் இல்லாமல், சூப்பர் ஃபண்டுகள் பல ஃபண்டு ஹவுஸ்களில் உள்ள சிறந்த ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்துத் தருகின்றன. எடுத்துக்காட்டாக, Aditya Birla Sunlife (ABSL) ஈக்விட்டியில் சிறந்ததாகவும், Axis Mutual Fund டெட் ஃபண்டுகளில் சிறந்ததாகவும் இருக்கலாம். இப்படி இருக்கும்போது, ABSL வழங்கும் சிறந்த ஈக்விட்டி ஃபண்டுகளையும் Axis வழங்கும் சிறந்த டெட் ஃபண்டுகளையும் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு ஓப்பன் ஃபண்டுகளின் ஃபண்டை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சூப்பரை விடச் சிறந்தது: PhonePe செயலியில் சூப்பர் பண்டுகள்

PhonePe வழங்கும் சூப்பர் ஃபண்டு, பல்வேறு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களில் இருந்து உங்களுக்குச் சிறந்த ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்துத் தருகிறது. இது மட்டுமில்லாமல், சூப்பர் ஃபண்டை கன்சர்வேட்டிவ், மாடரேட், அக்ரெஸ்ஸிவ் என்று உங்கள் வசதிக்காக மூன்று வகைகளாகப் பிரித்து வழங்குகிறது. இந்த மூன்று வகைகளில் எந்த விதமான ரிஸ்க் நிலையும் ரிட்டர்ன்களும் உங்களுக்குச் சிறந்ததாக இருக்குமோ அதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

PhonePe செயலியில் உள்ள சூப்பர் ஃபண்டுகள் கீழ்க்கண்ட தனிச்சிறப்புகளைப் பெற்றுள்ளன.

  • இது ஒரு எளிய, முழுமையான தீர்வாகும்.உங்களுக்கு உகந்த ரிஸ்க் நிலையை மட்டும் தீர்மானித்துவிட்டு மற்றவற்றைத் தேர்ந்த ஃபண்டு நிர்வாகிகளிடம் விட்டுவிடுங்கள். அவர்கள் உங்களுக்கான ஃபண்டுகளையும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் சூப்பர் ஃபண்டுகளின் அடிப்படையில் ஒவ்வொரு ஃபண்டிலும் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பதையும் முடிவெடுப்பார்கள்.
  • தேர்ச்சிபெற்ற ஃபண்டு நிர்வாகிகள் தொடர்ந்து முதலீடுகளைக் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். தேவைப்பட்டால், சந்தைச் சூழலுக்கும் அடிப்படை ஃபண்டுகளின் நிலைத்தன்மைக்கும் ஏற்ப ஃபண்டுகளின் ஒதுக்கீடுகளில், உங்கள் வரிகளுக்கேற்றவாறு மாற்றங்களைச் செய்வார்கள். முதலீட்டாளர்கள் சிரமமின்றி முதலீடு செய்வதற்கும் சரியான ஃபண்டுகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் தொடர்ந்து அதைக் கண்காணிப்பதற்கும் இது உதவுகிறது.
  • ஃபண்டுகளின் ஃபண்டு பின்பற்றும் ஓப்பன் அமைப்பையே சூப்பர் ஃபண்டுகளும் பின்பற்றுகின்றன. இதன் மூலம் பல்வேறு மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்களில் முதலீடு செய்யவும், நிலையான AMC-களைத் தேர்ந்தெடுக்கவும் ஃபண்டு நிர்வாக முறைகளை விரிவுபடுத்தவும் முடியும்.
  • முதலீட்டாளர்கள் வெறும் 500 ரூபாயில் மியூச்சுவல் ஃபண்டுகளைக் கொண்ட ஒரு நல்ல போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்யலாம் என்பதை சூப்பர் ஃபண்டுகள் உண்மையாக்கி உள்ளன. இதன் மூலம் ஒரு சிறிய முதலீட்டாளர்கூட ஒரு சிறந்த நீண்ட கால முதலீட்டைச் செய்யலாம் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றதாக மியூச்சுவல் ஃபண்டுகளை சூப்பர் ஃபண்டுகள் உருவாக்கியுள்ளன.
  • சூப்பர் ஃபண்டுகள் மூன்று வருடங்களுக்கு மேற்பட்ட நீண்ட கால முதலீடுகளுக்கு ஏற்றதாகும். மூன்று வருடங்களுக்கு மேல் உங்கள் முதலீடுகள் இருந்தால் , குறைவாக வரி செலுத்த உதவும் இண்டக்சேஷன் பலன்களையும் நீங்கள் அனுபவிக்கலாம். இந்த இண்டக்சேஷன் பலன்கள் வழக்கமான முதலீடுகளில் வரும் பலன்களைவிட அதிகமாகவும் ஈக்விட்டி ஃபண்டுகளில் வரும் பலன்களுக்கு நிகராகவும் இருக்கும்.

நீங்கள் முதலீடு மட்டும் செய்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, முதலீடு செய்வதற்கு முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.

PhonePe Wealth Broking Private Limited | AMFI — பதிவுசெய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் ARN- 187821.

Keep Reading