Investments
நீண்ட கால முதலீட்டை வலுவாக உருவாக்குதல்
PhonePe Regional|2 min read|12 July, 2021
உடற்பயிற்சி மற்றும் முதலீட்டில் பொதுவானது எது? நீங்கள் கவனமாகப் பார்த்தால் நிறைய விஷயங்களைக் காணலாம்!
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமென்றும், உடற்பயிற்சி செய்யத் தொடங்க வேண்டுமென்றும் சபதம் எடுத்தீர்களா? ஆஹா, நாங்களும் எங்கள் புதிய ஆண்டை அவ்வாறே தொடங்கினோம்! எவ்வாறாயினும், இதுபோன்ற சபதங்களை நாங்கள் எடுக்கும்போது, உடற்பயிற்சிக்கும் முதலீட்டிற்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம், இது அந்த கனவு உடலமைப்பை உருவாக்கும் போது ஒரு வெற்றிகரமான முதலீட்டாளராக எப்படி மாற வேண்டும் என்பதை புரிந்துகொள்ள உதவும். எனவே தொடங்குவோம், தொடங்கலாம் தானே?
முதல் மற்றும் முன்னணி, ஒரு தொடக்கத்தை உருவாக்கவும்
ஒவ்வொரு புத்தாண்டிலும் உடற்பயிற்சி செய்வதற்கான சபதத்தை பெரும்பாலான மக்கள் எப்போதும் ஏன் எடுக்க விரும்புகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால், எல்லோரும் இதைச் செய்ய விரும்பினாலும், மிகச் சிலரே அதைச் செய்யத் தொடங்குகிறார்கள். முதலீட்டிலும் இதே நிலைதான். எதிர்காலத்தில் அதை செய்துகொள்ளலாம் என ஒத்திவைப்பது யாருக்கும் ஒருபோதும் பயனைத் தராது. எனவே, முதலீடு செய்தாலும், உடற்பயிற்சி செய்தாலும் அதை நீங்கள் இன்றே தொடங்க வேண்டும். நாளை அல்ல.
நிலைத்தன்மை முக்கியமானது
ஜனவரி 1 ஆம் தேதி ஜிம்மிற்குச் சென்றுவிட்டு, பின்னர் அதை நிறுத்துவது உங்கள் உடல்நல இலக்குகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. உங்கள் இலக்கை அடைய ஒரே வழி தவறாமல் உடற்பயிற்சி செய்வதுதான். அதேபோல், SIP கள் மூலம் தவறாமல் முதலீடு செய்வது மற்றும் காத்திருப்பது நீண்ட காலத்திற்கு குறிப்பிடத்தக்க சேமிப்புகளை உருவாக்க உதவும். இதேபோல், நீங்கள் வழக்கமாக SIP கள் வழியாக முதலீடு செய்து, அந்த நிலைத்தன்மையைத் தக்க வைத்துக் கொண்டால், அது நீண்ட கால அடிப்படையில் உங்கள் செல்வத்தை கணிசமாக அதிகரிக்க உதவும்..
நிலைத்தன்மை ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது என்பதற்கான காரணம் இங்கே:
நீங்கள் மாதத்திற்கு ₹5,000 SIP ஐ ஆரம்பித்து 20 ஆண்டுகள் தொடர முடிவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த முதலீட்டில் உங்களுக்கு 12% வருமானம் கிடைக்கும். 20 ஆண்டுகளின் முடிவில், உங்களிடம் சுமார் ₹50 லட்சம் சேமிப்பு இருக்கும். ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக ₹5,000-ஐ தவறாமல் முதலீடு செய்வது நீண்ட கால அடிப்படையில் பெரிய தொகைக்கு வழிவகுக்கும் என்பதை இது காட்டுகிறது.
உங்களுக்கு ஏற்ற ஒரு வழக்கத்தை கண்டறியவும்
நீங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்யத் தொடங்கும்போது, உங்களுக்கான சிறந்த உடற்பயிற்சி முறையை முயற்சி செய்து கண்டுபிடிப்பீர்கள். இது தசை வலிமைக்காக பளு தூக்குதலாக இருக்கலாம். அல்லது எடை இழப்புக்கு கார்டியோ, ஆற்றலுக்கான பைலேட்ஸ்சாக இருக்கலாம். சுருக்கமாக, உங்கள் குறிக்கோளுக்கு பொருத்தமான பல பயிற்சிகளின் கலவையை நீங்கள் தேர்வு செய்யலாம். இதேபோல், முதலீடு செய்யும்போது. உங்கள் ரிஸ்க் விருப்பத்தேர்வுகள், குறிக்கோள்கள் மற்றும் நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய காலத்திற்கு ஏற்ற ஃபண்டுகளில் முதலீடு செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மிகக் குறுகிய கால இலக்கை அடைய மிக அதிக ஆபத்து முதலீட்டில் முதலீடு செய்தால் என்ன ஆகும்? உங்கள் முதலீடு நிறைய ஏற்ற தாழ்வுகளைச் சந்திக்கும், மேலும் அவை நிறைய இழப்புகளையும் நிறைய அழுத்தங்களையும் ஏற்படுத்தும். ஆனால் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் இதை எளிதில் தவிர்க்கலாம். முதலீட்டு காலங்கள் மற்றும் வெவ்வேறு ஆபத்து சுயவிவரங்களின் அடிப்படையில் ஒரு சுருக்கமான வழிகாட்டி இங்கே:
குறுக்குவழிகள் எதுவும் இல்லை, ஆனால் நீண்ட கால முடிவுகள் அசாதாரணமாக இருக்கும்
உடற்பயிற்சி என்பது ஒரு நீண்ட கால செயல்முறை. முடிவுகளைப் பார்க்க நேரம் எடுக்கும், ஆனால் நீங்கள் இலக்கை நெருங்கும்போது, நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை. அதேபோல், முதலீடுகளைப் பொறுத்தவரை குறுக்குவழிகள் எதுவும் இல்லை. நீங்கள் விரைவான லாபத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் ஏமாற்றமடையக்கூடும், ஆனால் SIP மூலம் நீண்ட கால முதலீடு உங்கள் முதலீட்டை மெதுவாகவும் சீராகவும் அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும்.
கடைசியாக, உடற்பயிற்சியின் நற்பண்புகளை புகழ்ந்துரைக்கும் ஒரு பிரபலமான பழமொழியை பார்ப்போம், இது முதலீட்டிற்கும் பொருந்தும்: “ உங்கள் எதிர்காலம் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்றே ஏதாவது செய்யுங்கள்”.
பொறுப்புத்துறப்பு: மியூச்சுவல் ஃபண்டுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படியுங்கள்.