Design
கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு தடையற்ற பேமண்ட் அனுபவத்தை PhonePe செயலியில் உருவாக்குகிறோம்
PhonePe Regional|2 min read|23 April, 2021
சமீபத்தில் 25 கோடி பயனர்கள் என்ற மைல்கல்லைக் கடந்த PhonePe, UPI பரிவர்த்தனைகளில் மிகப் பெரிய ஆளுமையுடன் வெளிவந்துள்ளது. 10 கோடிக்கும் மேலான மாதாந்திரப் பயனர்கள் செயல்பாட்டில் இருக்க, நாங்கள் இப்போது நாட்டின் மிகப்பெரிய பரிவர்த்தனைத் தளத்தைக் கொண்டுள்ளோம். 500 இந்திய நகரங்களில் உள்ள கோடிக்கணக்கான பயனர்களுக்கு பெருமையுடன் சேவை செய்கிறோம்.
மிகச்சிறந்த தொழில்நுட்பம், பயன்படுத்த எளிதான செயலி வடிவமைப்பு, புதிய தயாரிப்புகள் மற்றும் அம்சங்களின் அறிமுகம், வாடிக்கையாளர் திருப்தி ஆகியவையே எங்கள் தயாரிப்பை வாடிக்கையாளர்கள் தினந்தோறும் உபயோகிக்க முக்கியக் காரணங்களாகும். எங்கள் செயலியில் செய்யப்படும் ஒவ்வொரு பேமண்ட் அனுபவமும் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிப்பதோடு, அவர்களுக்கு மகிழ்ச்சியும் அளிக்கக் கூடிய ஒன்றாக இருப்பதில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். அதை இப்படித்தான் செய்கிறோம்!
பாரத தேசத்துக்கான டிஜிட்டல் பேமண்ட் முறை
பணம் செலுத்தும் ஒரு வசதியாக நாங்கள் நாடெங்கிலும் ஏற்கப்பட்டுள்ளோம். எங்களின் மிகப் பெரிய பயனர்கள் தளத்திற்கும் , நாடெங்கும் நாங்கள் கால் பதித்ததற்கும் சான்றாக, எங்கள் பயனர்களில் 80% பேர் 2, 3-ஆம் அடுக்கு ஊர்கள் மற்றும் அதற்கு அப்பாலுள்ள ஊர்களில் உள்ளனர். நம்பகத்தன்மை, பாதுகாப்பு ஆகியவற்றைக் குறித்த பயங்களால், இந்தப் பகுதிகளில் டிஜிட்டல் பேமண்ட்களின் பரிச்சயம் இன்னமும் குறைவாகவே உள்ளது.
எங்களின் வாடிக்கையாளர்கள் பலர் முதல் தலைமுறை இணையப் பயன்பாட்டாளர்கள் என்பதை அவர்களுடன் கலந்துரையாடும்போது தெரிந்துகொண்டோம். எனவே, அவர்கள் பணம் செலுத்துவதை எளிதாக்குவதோடு டிஜிட்டல் பயன்முறையில் கைதேர்ந்தவர்களாவதற்கும் உதவுவது எங்களின் கடமை என உணர்ந்தோம்.
பயனர் பிரிவுகள், வசிக்கும் இடங்கள், சாதனங்கள், பேமண்ட் வகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் தேவைகளை நன்கு புரிந்து கொள்ளும் வகையில் எங்கள் சிஸ்டம் மற்றும் செயல்பாடுகளை அமைப்பதில் பெரும் அளவில் முதலீடு செய்துள்ளோம் . இம்முயற்சிகள் மூலம் எங்கள் செயலியில் பயனர்களுக்கு ஏற்படும் நல்ல அனுபவங்கள் மட்டுமல்லாமல் சிக்கல்களுக்குமான முக்கியக் காரணங்களைக் கண்டறிந்தோம். பிறகு எங்கள் ஆய்வின்போது கண்டறியப்பட்ட சிக்கல்களை தொழில்நுட்பம் மற்றும் தகவல்கள் அடிப்படையில் அணுகினோம்.
எங்கள் செயலி உங்கள் மொழியில்
எங்கள் வாடிக்கையாளர்களில் பலர் செயலியை தங்கள் சொந்த மொழியில் பயன்படுத்த விரும்புகிறார்கள். இதை மனதில் கொண்டு எங்களின் உதவி மற்றும் ஆதரவுச் சேவைகளை 8 இந்திய மொழிகளில் வழங்குகிறோம். பிராந்திய மொழிகளில் தொலைபேசி மூலமாக உதவி வழங்குவதோடு மட்டுமல்லாமல், இப்போது எங்களின் செயலி, அதன் உதவிப் பகுதி மற்றும் அரட்டை உதவி சேவையிலும் மொழியைத் தேர்ந்தெடுக்கும் வசதியை அளித்துள்ளோம். எங்களின் இந்த மொழிமாற்ற வசதி பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. இப்போது மேலும் அதிக வாடிக்கையாளர்கள் எங்கள் செயலியைத் தங்களுக்கு வசதியாக உள்ள மொழியில் பயன்படுத்த முன்வருகிறார்கள்.
உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக உள்ளோம்!
VPA உருவாக்குதல், UPI PIN அமைத்தல், வங்கிக் கணக்குகளை இணைத்தல் போன்ற அடிப்படைகள் உட்பட UPI பேமண்ட்கள் பற்றிய போதிய புரிதல் இல்லாததால் பல பயனர்கள் டிஜிட்டல் பேமண்ட் முறைகளைப் பயன்படுத்தத் தயங்குகிறார்கள். வாடிக்கையாளர்கள் எளிதாக இந்தச் செயலியைப் பயன்படுத்த, எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய உதவிக் கட்டுரைகளையும் விளக்க வீடியோக்களையும் பல மொழிகளில் உருவாக்கியுள்ளோம். வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் படம் மற்றும் வீடியோ வழி உதவிகளைத் தொடர்ந்து சேர்த்துக் கொண்டிருப்பதோடு, தயாரிப்பு மற்றும் வணிகக் குழுக்களுடனும் இணைந்து செயல்படுகிறோம். வாடிக்கையாளர்கள் செயலியைப் பயன்படுத்த உதவி கோரும் விகிதம் இப்போது 0.5% என்ற சிறந்த அளவில் உள்ளது. அதை மேலும் குறைக்க முனைகிறோம்.
தானியங்கி மூலமாக சிக்கல்களை உடனே தீர்த்தல்.
90% வாடிக்கையாளர் சிக்கல்களுக்கு உடனே தீர்வு அளிக்கிறோம். இந்த விகிதத்தை மேலும் அதிகரிக்க எப்போதும் முனைகிறோம். எங்கள் உதவி மையங்களை தானியங்கியாகச் செய்துள்ளதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் பேமண்ட்களை செயலியில் எளிதாகப் பார்க்கவும் , தீர்வுகளை உடனே பெறவும் உதவியுள்ளோம். வாடிக்கையாளர் சேவைப் பிரிதிநிதிக்கு க் காத்திராமல், வாடிக்கையாளர்களே தங்கள் சிக்கலுக்கு தீர்வு காண இது உதவுகிறது. வாடிக்கையாளர்களுக்கு தீர்வு அளிக்கும்போது அது முழுதும் வெளிப்படையாக இருப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். இன்று, 80 % சிக்கல்கள் தானியங்கி போர்ட்டல்கள் மூலமும் தொலைபேசி IVR மூலமும் தீர்க்கப்படுகின்றன. வாடிக்கையாளர் திருப்தி விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்க, அதை மேலும் மேம்படுத்த முனைகிறோம். வாடிக்கையாளருக்கு எந்தச் சிக்கல் இருந்தாலும், சில மணி நேரத்திற்குள் அவர்கள் எங்களிடமிருந்து விடை பெறுவதை உறுதி செய்கிறோம்.
எதிர்கால மேம்பாட்டிற்கான பயணம்
ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து கற்றுக்கொள்கிறோம். எங்களுக்குக் கிடைக்கும் கருத்துகளை ஆராய்ந்து, இந்தியா முழுதும் பயனர்கள் மிகச்சிறந்த பேமண்ட் அனுபவத்தைப் பெறும் வகையில் எங்கள் செயலியை வடிவமைக்கிறோம்.